நான் நல்லது செய்தால் ஒத்துழையுங்கள், தவறு செய்தால் திருத்துங்கள்

.

நான் நல்லது செய்தால் ஒத்துழையுங்கள், தவறு செய்தால் திருத்துங்கள் – ஜனாதிபதி முர்ஸி


mursiii
நான் அனைத்து எகிப்தியர்களுக்குமான ஜனாதிபதி, யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டேன். மதம், இனம் தாண்டி எகிப்தில் முழு அமைதியை ஏற்படுத்துவதே எனது இலட்சியம், அதற்கேற்றவாறு அமைச்சரவை பணியை தொடங்கி விட்டேன் என்று எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி முர்ஸி மக்களிடையே முதன் முதலாக உரையாற்றும்போது தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் நல்லதைச் செய்தால் எனக்கு ஒத்துழைப்பாகவும் எகிப்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒத்துழையுங்கள், நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள், நேரான பாதைக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
எகிப்தில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஹுஸ்னி முபாரக், மக்கள் போராட்டத்தின் மூலமாக பதவி விலக்கப்பட்டார்.
தனைத் தொடர்ந்து முபாரக் மீது போராட்டக்காரர்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகள் தொடரப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது முபாரக் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எகிப்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், கலாநிதி முஹம்மது முர்ஸி எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Meelpaarvai.net

0 comments :

Post a Comment