ஐ.எல்.எம்.ஸுஐப் ஆசிரியர் – தர்ஹா நகர்
அதன்
பிறகு ஓய்வாக இருக்க மனது விரும்பவில்லை. பொது வேலைகளில் ஈடுபட்டேன்.
ஊரில் ஜமாஅத் கவுன்சில் என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். அதில்
செயலாளராக நான் நிய மிக்கப்பட்டேன். ஜமாஅத் கவுன் சில் மூலம் அஹதியா
பாடசாலை ஒன்றை ஆரம்பித்தோம் இன்று தர்கா நகரில் அஹதியா பாட சாலை சிறப்பாக
நடைபெற்று வருகின்றது.
1979ல்
நாங்கள் அநாதை இல்லம் ஒன்றை ஆரம்பித்தோம். அதில் பொருளாளராகவும் செய
லாளராகவும் கடமையாற்றி தற் போது அதன் அங்கத்தவர்களுள் ஒருவராக கடமையாற்றி
வருகி றேன். மேலும் அக்காலத்தில் இரவுப் பாடசாலைகளை நடத்தி னோம்.
வெளிஊர்களிலிருந்து ஆலிம்களை, அறிஞர்களை
அழைத்து வந்து மக்களுக்கு உரை கள் நிகழ்த்த ஏற்பாடு செய்தோம். இமாம்
ஹஸனுல் பன்னாவின் மருமகன் ஸஈத் ரமழான் அவர் கள் இலங்கை வந்திருந்தபோது
அவரும் இங்கு உரை நிகழ்த்தி னார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
* ஜமாஅத் கவுன்சிலின் பணி களைப் பற்றி ....
இது
எமது பிரதேசத்தில் எல்லாப் பள்ளிவாயல்களையும் அதன் நிர்வாகிகளையும் உள்ள
டக்கிய ஒரு அமைப்பாகும் இதன் மூலம் ஸக்காத் பணத்தை திரட்டி வருகிறோம்.
சென்ற வரு டம் 25
இலட்சம் ரூபாய் சேகரிக்க முடியுமாக இருந்தது. மேலும் க.பொ.த. சாதரண தர
மற்றும் உயர் தரத்தில் சித்தியடையும் மாணவர்களுக்கு வருடாந்தம் பரிசளிப்பு
விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். அ/ஃ, ˆ/ஃ
வகுப்புக் கள் நடாத்துகிறோம். ஊர் வழக்கு களை விசாரிக்க ஒரு சமாதானக்
குழுவை அமைத்திருக்கின்றோம். அவர்கள் ஜமாஅத் கவுன்சிலோடு ஆலோசித்து
முடிவுகளை எடுப் பார்கள்.
* அன்மையில் நடைபெற்ற அறபுப் புரட்சியை தொடர்ச்சி யாக அவதானித்தவர் என்ற வகையில் அந்தப் புரட்சி பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இந்தப்
புரட்சி முழுமையாக வெற்றி பெறுமாக இருந்தால் அறபு நாடுகளில் வெளிநாட்டுச்
செல்வாக்கு குறைந்துவிடும். இஸ்லாமிய முறையில் மாற்றங் கள் வந்துவிடும்.
வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடக் கூடிய சந்தர்ப்பம் அறபு நாடு
களுக்குக் கிடைக்கும். இந்தப் புரட்சி வெற்றிகரமாக முடிவடை யுமென்றால்
மேற்கு நாடுகள் தான் இதில் நஷ்டம் அடையப் போகின்றன. இப்புரட்சியில் இஹ்
வானுல் முஸ்லிமூன் அமைப்பி னரின் பங்களிப்பை நினைக்கும் பொழுது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கின்றது.Thanks to meelpaarvai.net
0 comments :
Post a Comment