Sunday, July 29, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுக்கும் புத்த சாமியார்கள்!


லண்டன்:பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

மனிதநேயமான எவ்வித முன்னுரிமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்காமல் அவர்களுக்கு வரும் அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்துகின்றனர். மியான்மரில் சிறுபான்மையினரை வேண்டுமென்றே துடைத்தெறிய புத்த சன்னியாசிகள் திட்டம் தீட்டுகிறார்கள். தற்பொழுது மியான்மரில் நடந்து வரும் அனைத்து கூட்டுப் படுகொலைகள் மற்றும் இன அழித்தொழிப்புகளுக்கும் தலைமை தாங்கி ஊக்கப்படுத்துபவர்கள் புத்த சன்னியாசிகள் தாம் என இண்டிபெண்டண்ட் பத்திரிகை குற்றம் சாட்டுகிறது.

கடந்த தினங்களில் புத்த சாமியார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வித மனிதநேய உதவிகளையும் தடுத்துள்ளனர். இதனை அவர்கள் அரசின் ஆதரவுடன் நடத்தி வருகின்றனர் என்று அப்பகுதியில் இயங்கும் அர்கான் என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிறிஸ் லியோ கூறுகிறார்.

முஸ்லிம்கள் அபயம் தேடியிருக்கும் முகாம்களை புத்த சாமியார்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த உதவிகளும் செல்லாமல் தடுத்து வருகின்றனர் என்று கிறிஸ் லியோ கூறுகிறார்.

மியான்மரில் நடந்து வரும் முஸ்லிம் இனப் படுகொலைகள் குறித்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக இரட்டை வேடம் போடும் ஆங் சான் சூகி மெளனம் சாதித்து வருகிறார். சமாதானத்தின் தூதர்களாக உலகை வலம் வரும் ஆங் சான் சூகியும், தலாய் லாமாவும் இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே மெளனம் சாதிக்கின்றனர்.

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!



ஜெருசலம்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இஸ்ரேலின் மக்கள் தொகையை மேற்கோள்காட்டி பிரிட்டனில் கார்டியன் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

புதிய புள்ளிவிபரப்படி மேற்கு கரையில் கடந்த ஓரு ஆண்டில் 4.5 சதவீதம் சட்டவிரோத குடியேற்றம் நடந்துள்ளது. மேற்கு கரையில் ஃபலஸ்தீன் வீடுகளுகள், மஸ்ஜிதுகள் மீது சட்டவிரோத யூத குடியிருப்பு வாசிகள் நடத்தும் தாக்குதல் கடந்த ஒரு ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது என ஃபலஸ்தீன்(மேற்குகரை) பிரதமர் ஸலாம் ஃபயாதை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.

மொத்த யூத குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கை 3.5 லட்சமாக உள்ளது. இவ்வெண்ணிக்கை இனி வரும் 12 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கார்டியன் அறிக்கை கூறுகிறது.

இரு நாடுகள் தீர்வை சாத்தியமற்றதாக்குவதற்கான நடவடிக்கைதான் ஃபலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு என கார்டியன் குறிப்பிடுகிறது. மேற்கு கரை, கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகியன அடங்கிய நாட்டை நிறுவ ஃபலஸ்தீன் மக்கள் கடுமையாக போராடி வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட முயற்சியே மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் சட்டவிரோத குடியேற்றம் ஆகும்.

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டி வருகிறது.

Sunday, July 22, 2012

ரமழான் மாத லுஹர் பயான் தொடர் நிகழ்ச்சி Day 2




தாருல்ஹுதாவின் ரமழான் மாத லுஹர் பயான் தொடர் நிகழ்ச்சி
உரையாற்றுபவர்: அஷ் ஷேய்க் மஸீர் அல் அப்பாஸி
தொடர் உரை : வுழுவின் சட்டங்கள் Part 1( பிஃஹ் சட்டங்கள் )
22/07/2012


©2012, copyright Dharulhuda

Tuesday, July 17, 2012

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!




புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

நன்னெறிகள் உலக இச்சைகளை கட்டுப்படுத்தும்!


Post image for நன்னெறிகள் உலக இச்சைகளை கட்டுப்படுத்தும்! மனிதனுடைய ஆன்மா உலக ஆசாபாசங்களுக்கும் தன்னல இச்சைகளுக்கும் வசப்படுகிறது. மறுமையை தங்களின் இறுதி இலக்காகக் கொள்ளாத மக்களுக்கு மார்க்க நெறிமுறைகள் பற்றிய அறிவு இல்லாமை காரணமாக அவர்கள் என்றும் குறையாத இந்த ஆசாபாசங்களையும் இச்சைகளையுமே திருப்திப்படுத்த வானாள் முழுவதும் முயல்வார்கள். இறைவன் இத்தகையவர்களை கீழ் வருமாறு சித்தரிக்கின்றான்.
நான் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தேன்; எப்பொழுதும் அவனுடன இருக்கக்கூடிய ஆண் மக்களையும் கொடுத்தேன்; அவனுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கி வைத்தேன். ஆனாலும் இன்னும் அதிகமாக வேண்டுமென்று விரும்புகிறான். (74:12-15)
மார்க்க அறிவுரைகளைப் பேணி வாழாத சமுதாயத்தில் மக்கள் சொத்துக்களையும் செல்வத்தையும் பெருக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் தாமே சிறந்த செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றும், தாமே வெற்றியாளனாக விளங்க வேண்டுமென்றும், எல்லோரையும் மிகவும் நேசிக்கப்படுபவனாகவும் பாராட்டப்படுபவனாகவும் வாழ வேண்டுமென்று விரும்புவர். மற்றவர்கள் நல்லவற்றையும் அழகானவற்றையும் உடையவர்களாக இருப்பதைச் சகித்துக் கொள்ள அவர்களால் முடியாது. மற்றவர்கள் மீது பொறாமைக் கொண்டு அவர்களிடமுள்ளவற்றைத் தாம் பெறுவதற்குப் பாடுபடுவார்கள். மற்றவர்களின் இழப்பைக் கண்டு உவகைக் கொள்வார்கள். தவறான இந்த மனப்போக்கு மனிதனை தாழ்ந்த நிலைக்குத் தள்ளுகிறது.
மார்க்க ஒழுக்க நெறிகளைப் பற்றி அறியாதவர்களுக்கு இந்த நிலையே இன்றியமையாதத் தனிச் சிறப்புடையதாகத் தோன்றும். ஆனால் இது மனிதனை இடர்ப்பாடான மன அழுத்தமிக்க வாழ்க்கையில் அமிழ்த்தி அவனுடைய ஆன்மாவிற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும். இதனால்தான் இறை நம்பிக்கையற்றவர்கள் உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவதில்லை. நியாயமானவையாகத் தோன்றினாலும் கூட மனிதனின் ஆசாபாசங்களுக்கும் இச்சைகளுக்கும் முடிவே காண முடியாது. மனிதன் கால வரையறையற்ற மறுமை வாழ்வில் ஓர் அங்கமாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். இம்மை வாழ்க்கை, மனிதனுடைய ஆசாபாசங்களையும் இச்சைகளையும் திருப்திப்படுத்த முடியாதபடி குறைபாடுகளுடன் தேவைக்குக் குறைவான வகையிலேயே வடிவமைக்கப்பெற்ற ஒரு சோதனைக் களமே ஆகும்.
மார்க்கப் பண்புகளை அறியாததன் காரணமாக, சோதனையின் இன்றியமையாதக் கூறாகிய இந்த இரகசியத்தைக் காண முடியாத மக்கள் இவ்வுலகில் தங்களுடைய ஆசாபாசங்களை நிறைவு செய்ய உழைக்கின்றார்கள். தொடர்ந்து வெறுப்படைந்து அதிருப்திக்கு உள்ளாகிறார்கள். உண்மையான மனநிறைவை என்றும் பெறாதவர்களாகிய இவர்களின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவாக மாறி விடுகிறது. வளமையிலும் வறுமையையே அனுபவிக்கிறார்கள். ஏற்கனவே பெற்றிருப்பதைக் கொண்டு திருப்தியடையாமல், எப்பொழுதும் பெறமுடியாதவற்றைப் பற்றிய கவலையால் அவதியுறுகின்றார்கள் இந்த ஆன்ம வேதனை, ஒருவகையில், நிரந்தரமான கடுத்துன்பத்தின் ஆரம்பமே ஆகும்.
மார்க்கம் மனிதனை யாவற்றையும் பகிர்ந்தளிக்குமாறு ஏவுகிறது. இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் துணைவர்களாவர். (9:71) மனிதன் இறைவனின் படைப்பு என ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொள்வார்கள். இத்தகையதொரு சமுதாயத்தில், சமூக அநீதி, சச்சரவு மற்றும் குழப்பம் பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது. நபி முஹம்மது(ஸல்) அவர்கள், “பெரும் செல்வ வளமல்ல உண்மையில் சொத்து; மன நிறைவே சொத்தாகும்” என்று கூறி இறை நம்பிக்கையாளர்களின் அமைதி அவர்களின் இதயங்களிலேயே இருப்பதாக விளக்குகிறார்கள்.
மார்க்கக் கோட்பாடுகளைப் பேணாத ஒருவர் பொறாமை கொள்ளாமல் இருப்பதற்குரிய காரணம் எதுவும் இல்லை; ஏனெனில் அவருடைய பகுத்தறிவுக்கேற்ப அந்த உணர்வைத் தவிர்ப்பதற்கு எவ்விதத் தூண்டுதலும் இல்லை. போட்டியே மக்களைப் பொறாமை, தன்னலம் மற்றும் தீவிர உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஓர் இளம் பெண் தன்னை விட நவநாகரீகமாகவும் அழகாகவும் தோன்றும் மற்றொரு பெண்ணிடம் பொறாமை கொள்கிறாள். இதே போல ஒரு வாலிபன் தன்னைவிடப் பொதுமக்களின் பாராட்டைப் பெறும் தன் நண்பன் மீது பொறாமை கொள்கிறான். இந்த உணர்வுக்கு வயது, பாலியல், தொழில் அல்லது தகைமை (அந்தஸ்து) என்ற வேறுபாடே கிடையாது.
சமுதாயத்தில் எல்லாப் பிரிவினரும் ஏதாவது ஒரு வகை பொறாமைக்கு ஆளாகிறார்கள். மற்றவரின் உடைமையைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். செல்வாக்கு மிக்க வட்டாரத்தில் வாழ விரும்புவது, புகழ் பெற்ற கோடைகால வசிப்பிடங்களுக்குச் சென்று கோடையைக் கழித்தல், புத்தம் புதிய கார், வெளிநாடுகளுக்குப் பயணம் ஆகியவை மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதற்குக் காரணமாகின்றன. மற்றவர்களின் சாதனைகள் அல்லது உடைமைகளைக் கண்டு மகிழ்ச்சியடைய முடியாத அளவிற்குச் சிலர் பேராவல்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். குறிப்பாக வணிக் துறையில் மனித ஆன்மாவிற்கு போட்டி மனப்பான்மை விளைவித்த ஊறுகள் அப்பட்டமானவை. வணிகத் துறையில் செல்வாக்கு மிக்க தகைமையை (அந்தஸ்தை) எய்த எழும் வேட்கையும் அதனால் விளையும் பொறாமையும் அன்றாட வாழ்வியலில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
ஆனால் குர்ஆன், இறை நம்பிக்கையாளர்கள், தன்னல விருப்பங்களற்ற தூய வாழ்க்கையையே மேற்கொள்வதாகக் கூறுகிறது. இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் சகோதரர்கள் பெற்ற வெற்றியை அல்லது அவர்களின் உடைமைகளைக் கண்டு மன நிறைவு அடைவார்கள்.
அவர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் பற்றி (இறை நம்பிக்கையாளர்கள்) தங்கள் இதயங்களில் எவ்வித அவாவும் கொள்வதில்லை; தாங்கள் வறுமை நிலையில் இருந்தாலும் தங்களுக்கு வேண்டுமென்று நினைப்பதில்லை; இவ்விதம் பேராவலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்பவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
இவர்களுக்குப் பின் வந்தவர்கள், எங்கள் இறைவா! எங்களையும் எங்களுக்கு முன் இறை நம்பிக்கை கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! இறை நம்பிக்கையாளர் மீது எங்கள் இதயங்களின் குரோதத்தை உண்டுபண்ணிவிடாதே. இறைவா! நீ கருணையாளன், இறக்கமுடையோன்! (59:9,10)
இறைவனின் ஆணைப்படி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு பொறாமையைத் தவிர்க்கும்படியும், அது நல்ல செயல்களை, தீ விறகை(எரித்து) விழுங்கிவிடுவது போல் விழுங்கி விடும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
மக்கள் தன்னல பேரவாவிற்கு ஆளாகிவிடுகிறார்கள். நீங்கள் நற்செயல் புரிந்து (தீமையிலிருந்து) பாதுகாத்துக் கொண்டால் இறைவன் நீங்கள் செய்வதை அறிந்து கொள்வான். (4:128)
மூலம் : ஹாருன்யஹ்பா
தமிழில் : H. அப்துஸ் ஸமது, இன்ஜினியர்

இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!


Post image for இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான்  நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’        நூல் : திர்மிதி
நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.
இதனால்தான் நாவைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் மிக மிக விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொற்கள்தாம் இதயங்களை இணைக்கின்றன. சொற்கள்தாம் இதயங்களைப் பிளக்கின்றன. சொற் கள்தாம் மனங்களை உடைக்கின்றன. சொற்கள்தாம் நெஞ்சங்களை நெகிழச் செய்கின்றன.
மனிதர்களை ஒன்றுசேர்ப்பதும் சொற்கள்தாம். ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போகச் செய்வதும் சொற்கள்தாம். அழ வைப்பதும் சொற்களே. சிரிக்க வைப்பதும் சொற்களே. சிந்திக்கத் தூண்டுவதும் சொற்களே. உணர்வுகளைக் கிளறச் செய்து மனிதர்களை உசுப்பி விடும் வேகமும் சொற்களுக்கு உண்டு. கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை இதமாக அமைதிப்படுத்துகின்ற ஆற்றலும் சொற்களுக்கு உண்டு.
சில சமயம் மனிதனின் எழுதுகோலே அவனுடைய நாவாக ஆகிவிடுகின்றது. “”போர்பான் மன்னர்கள் பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்களேயானால் போர்பான் அரசுக்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது” என நெப்போலியன் கூறினார்.
நாவால் சொல்லப்பட்டாலும் சரி, எழுதுகோல் மூலமாகத் தாளில் வெளிப்படுத்தப்பட்டாலும் சரி, சொற்களுக்கு இருக்கின்ற வலிமையையும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது. தவறான சொற்கள் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விடப் பெரும் குற்றம் வேறு உண்டா? அந்த ஆற்றலைக் கொண்டு சமுதாயத்தில் சீர்திருத்தத்தையும் நன்மையையும் தழைத்தோங்கச் செய்வதற்குப் பதிலாக குழப்பத்தையும் கலகத்தையும் உண்டு பண்ணுவதை விடப் பெரிய கொடுமை வேறு உண்டா?
நம்முடைய ஆளுமையை எதிரொளிப்பது நாம் மொழிகின்ற சொற்களே. தற்செயலாக, நம்மையும் அறியாமல் ஒரு சொல்லைத் தப்பித்தவறிச் சொல்லி விட்டாலும் அது நம்முடைய உள்மனத்தின் அடிக்குரலாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்.
நாம் மொழிகின்ற சொற்கள் நம்மை சுவனத்தின் உயர் நிலைகளில் உயர்த்திக் கொண்டிருக்கும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும். அதே போன்று நாம் சொன்ன ஒரு தவறான சொல், அல்லது தீய சொல் நம்மை மிகப் பெரும் பின்னடைவுக்குள்ளாக்கி விடும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும் என நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
சில சமயம் நாம் சாதாரணமாக, எந்த இழப்பையும் ஏற்படுத்தாது என்று நினைத்துப் பேசி விடுகின்ற ஒரு சொல் நம்மை மோசமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் நபிமொழிகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாவைப் பயன் படுத்துவதில் நாம் எந்த அளவுக்கு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
சமரசம்

மது விலக்கா….? மது விளக்கா?

Post image for மது விலக்கா….? மது விளக்கா?


அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம். நம்பிக் கெட்ட குடும்பங்களோ பல கோடி.
என்ன அந்தக் காலத்து குடும்பக் கட்டுப்பாடு ரேடியோ விளம்பரம் போல் இருக்கிறதா?
இதை நம்பி சிலர் அல்ல அரசே …. இல்லை இல்லை அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. ரொம்ப பேரின் உயிரையும் வாங்குகிறது. அது மது. அதுவும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என மதுவைக் காட்டி மயக்காத படையயடுப்பாளர்கள் எவரும் இல்லை.
பண்டைய ஆரிய இலக்கியங்களே சோமபானம் – சுராபானம் என சுவையோடு மதுவை தரம் பிரித்தன. ஆனால் அகநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.
ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரிமியர் அதாவது முதலமைச்சர் ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப தடை செய்தார். அதாவது மதுவிலக்கை கொண்டுவந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் கள்ளுக்கடை மறியல். தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலில் முன் நின்றனர். தந்தை பெரியாரோ தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைகள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டிச் சாய்த்தார். இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார். அதற்கும் முன்னர் இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே.
இலைமறை காய்மறையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைந்து வாழ்ந்த கள்ளச் சாராயம் 1974ல் அன்றைய முதல்வர் கலைஞர் புண்ணியத்தால் நல்ல சாராயமாக மாறியது. அரசே மக்கள் நலன் கருதி சாராயக் கடைகளை திறந்து ஏலம் விட்டது. அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சி பெற்று 1983ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் டாஸ்மாக் என்ற அரசின் விற்பனை மையமாக அது மாறிப் போனது. பின்னர் மலிவு விலைமது வந்தது.
2003ல் அ(இ)ன்றைய முதல்வர் ‘ஜெ’ மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானம் தனியாருக்கு போய்விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் இனிமேல் மதுவிற்பனையை அரசே முன்நின்று நடத்தும் என அரசாணை பிறப்பித்தார். அதுமுதல் கல்விக்கூடங்களை நடத்தி வந்த அரசு மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது. மதுக்கடைகளை நடத்திவந்த தனியார் கல்விக்கூடங்களை நடத்த ஆரம்பித்தனர்.
பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இவற்றின் அருகாமையில் எல்லாம் அரசு மதுக்கைடகள் தாராளமாக திறக்கப்பட்டன. எந்த சட்டமும் அரசை கட்டுப்படுத்தவில்லை. எந்த நியாயமும் இங்கு செல்லுபடியாகவில்லை.
குடித்தால் சமூக மரியாதை இல்லை என்ற காலம் போய் குடித்தால்தான் சமூகத்தில் மரியாதை என்றாகிவிட்டது.
சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை பார்த்து யாரும் அதிர்ச்சியடைந்திருக்கமாட்டார்கள். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருவர் குடிபோதையில் பள்ளிக்கூடம் வந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்திதான் அது. நான் படித்த காலங்களில் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் அதுவும் கல்லூரிக்கு வெளியே மது தலைகாட்டும். ஆனால் இன்று பள்ளிக்கூட பேர்வெல் பார்ட்டிகளில் கூட மது விளையாடுகிறது. நட்புக்கு தேநீர் வாங்கி கொடுத்தால் போதும் என்ற நிலை மாறி அது இன்று குவார்ட்டர் ஆக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் கால கூத்துக்கள் எல்லாவற்றிலும் ஆறாக ஓடும் மதுவை கண்டுகொள்வதில்லை. உலகிலேயே மது விற்பனை அதிகம் ஆகும் இடம் இந்தியா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விற்பனையாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக குடிகாரர்களின் தேசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் மது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.தமிழ்நாட்டிலோ அதிகமாகிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் 15லிருந்து 20 வயது வரை 10 சதவிகிதம்பேரும் 20- 30 வயது வரை 35 சதவிகிதம் பேரும் 30-35 வயது வரை 37 சதவிகிதம் பேரும் 35- 50 வயது வரை 18 சதவிகிதம் பேரும் மொடாக் குடியர்களாக மாறியிள்ளனர் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இல்லை. உலகில் 100 ஆண்டுகள் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் மதுபான வகைகள் இங்கு 24 மணி நேரத்தில் தயாராகின்றன. அத்தனையும் ரசாயனம்.
இரைப்பை நோய்கள், குடல் புற்று நோய்கள், மனநல பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்புகள், கணைய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, மரபணு பாதிப்பு, ஆண்மைக்குறைவு என தமிழ்நாட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சரிபாதிப்பேர் குடியினாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
இதைவிடக் கொடுமை மதுவின் தாக்கத்தால் பெண்களில் பலர் மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டாய் நட்புக்காக குடிக்க ஆரம்பித்து பின்னர் வருமானம் முழுவதையும் குடி விழுங்க ஆரம்பிக்கிறது. விளைவு வருமானம் இல்லாமல் பேய் குடும்பத்தில் குழப்பம் மிகுந்து கடைசியில் அது விவாகரத்தில் போய் முடிகிறது. பல வீடுகளில் ஆண்கள் மட்டுமே குடிபோதைக்கு அடிமையானாலும் கடைசியில் அது பெண்கள் தலையிலேயே விடிகிறது.
பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் மதுவோடு சங்கமிப்பதால் வேலையின் கால அளவும், தரமும் குறைந்து போய்விட்டது.
இந்தியாவில் மதுவிலக்கு மூன்று வகையாக அமுல்படுத்தப்படுகிறது. முதலாவது முழுமையாக உள்நாட்டு – அயல்நாட்டு அனைத்து மது வகைகளையும் தடை செய்வது.இன்று மகாத்மா காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு பெயரளவில் அமுலில் உள்ளது. கள்ளச் சாராயமோ அங்கு ஆறாக ஓடுகிறது.
இரண்டாவதாக சாராயம் தடை செய்யப்பட்டு வெளிநாட்டு மது மட்டும் விற்பது. இது மிசோராம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அமுலில் உள்ளது.
மூன்றாவதாக வருடத்தில் ஒரு நாளில் மட்டும் அதாவது காந்தி ஜெயந்தி, புத்த ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை கொடுப்பது. (ஆனாலும் பிளாக்கில் விற்பனை உண்டு) இப்படி கேலிக்கூத்தான மதுவிலக்குகள் இங்கே அமுல்படுத்தப்படுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் வேளான் அமைச்சர் டி.கி.வெங்கடேஷ் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்கும் கணவரை பொது இடத்திற்கு அழைத்து வந்து உதைக்கும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என அறிவித்திருக்கிறார். நல்லவேளை தமிழ்நாட்டில் அப்படியாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் மக்கள் தொகையில் பாதிப்பேர் அடிவாங்கியிருப்பார்கள்.
இங்கேதான் அரசே மதுபாட்டில்களிலேயே மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. குடி குடியை கெடுக்கும் என்ற அதி அற்புத வாசகங்களை பொறித்து விட்டதே. அதுவே போதாதா?
இங்கே மதுவிலக்கு காவல்துறை என்று ஒன்று உள்ளது. அதற்கு காவலராக பணியாற்ற கடும் போட்டி. மதுவை ஒழிக்க அல்ல- வருமானத்திற்கு. காவல்துறை பிரிவுகளிலேயே வருமானம் கொழிக்கும் பிரிவாக அது விளங்குவதால்.
இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, வருவாய்துறை என அரசுத் துறைகளில் பெரும்பான்மையானவற்றில் பெரும்பான்மையினர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். அரசாங்கம் நடக்காமல் தள்ளாடுவது இதனால்தான். தமிழ்நாட்டில் மக்களுக்கான மருத்துவம் -பாதுகாக்கப்பட்ட குடிநீர் -தரமான சாலைவசதி -தடையில்லா மின்சார வசதி – இலவச கல்வி என அடிப்படை வசதிகள் எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு தரமான மதுவகை வேண்டும் என்று மட்டும் கவலைப்படுகிறது. மேட்டுக்குடி மக்கள் சாதாரண மதுவகைகளை பயன்படுத்தி உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அக்கறையுடன் அரசு புதிதாக எலைட் ஷாப் எனப்படும் உயர்தர மதுபானக் கடைகளை திறந்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் இனி புதிதாக எந்த ஒரு மதுக்கடைகளையும் திறப்பதில்லை என 2008ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இது வெளியிடப்பட்டதால் அதற்கு எதிராக தற்போதைய தமிழக அரசு அதை மாற்ற முடிவு செய்து புதிய கடைகளை திறந்துள்ளத. நாட்டு மக்களின் சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் அதை நாசப்படுத்துகிறது.
குடிப்பழக்கத்தின் காரணமாக வழிப்பறி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சாலை விபத்துக்கள் என குற்றச் செயல்கள்அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசிற்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை?
அரசின் ஆண்டு வருமானத்தில் (59கோடி) நான்கில் ஒரு பங்கு (15 கோடி) மதுவின் மூலம் கிடைக்கும் போது மதுவை விலக்காமல் ஒளி விளக்காக அரசு கருதுகிறது. இரண்டு திராவிட இயக்கங்களும் எதிரெதிர் துருவமாக அரசியலில் இருந்தாலும் மது விசயத்தில் ஒரு கொடியில் பூத்த இருமலர்களாகவே இருக்கின்றன.
உலகில் பெரும்பான்மை மதங்களும் – மார்க்கங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. இஸ்லாம் மதுவை விலக்கப்பட்ட ஒன்றாகவே அறிவிக்கிறது. நபி (ஸல்) ஆட்சியாராக மெக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை கொடிய மதுபானங்களை தடை செய்ததுதான்.
இந்து மதமோ 5 மிகப் பெரிய தீமைகளில் ஒன்றாக மதுவை குறிப்பிடுகிறது. திருக்குறள் கள்ளுண்ணாமைக்காக ஒரு அதிகாரத்தையே கொடுத்திருக்கிறது. தீமைகளின் தாயகம் மது என்றார் காந்தி.
இங்கோ மக்களுக்கு சுகாதாரத்தை கொடுக்க வேண்டிய அரசு மதுவை விற்றுக் கொண்டிருக்கிறது.
படிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அரசு- குடிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சீனாவில் அபின் சாப்பிட கற்றுக் கொண்ட மக்கள் அதற்காக போரே பின்னர் நடத்தினார்கள் என்று வரலாறு. அதே போல் எதிர்காலத்தில் அறிவு மழுங்கடிக்கப்பட்ட மக்களாக தமிழ்மக்கள் மாறி மதுவுக்காக போர் நடத்திக் கொள்ளட்டும் என அரசு விரும்புகிறதோ என்னவோ?
தள்ளாடும் குடிமகன்கள் – அவர்களை தாங்கி பிடிக்கும் அரசு.
வெட்கங்கெட்ட இந்த தேசத்தில் வாழ்வது விபரீதம் என அறிவார்ந்த மக்கள் முடிவு செய்யுமுன் விழித்துக் கொள்ளுமா அரசு?
சமநிலை சமுதாயம்
by: கே.எம்.சரீப்

நபிவழி நபி அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டதா?


Post image for நபிவழி நபி அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டதா?நபி அவர்களும் நபித்தோழர்களும் அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான அல்குர்ஆனுக்கு அளவிட முடியாத மதிப்பும் மரியாதையும் கொடுத்ததின் காரணத்தினால் தான் அதை அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்து பாதுகாத்தது மட்டுமின்றி மரம், மட்டைகள், தோல், கற்கள் முதலியவற்றில் எழுதிப் பாதுகாத்து வந்தனர். நபி அவர்கள் இவ்வுலகைப் பிரியும்போது குர்ஆன் அதனுடைய அமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒரே முஸ்ஹப் (நூல்) வடிவில் கொண்டு வருவது மட்டுமே எஞ்சியிருந்தது.
ஆனால் நபிவழி அப்படியல்ல. அது நபி அவர்கள் காலத்திலே குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போன்று எழுதிப் பாதுகாக்கப்படவில்லை. அது எழுதப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. நபி அவர்கள் நபித்துவத்திற்குப் பிறகு இருபத்தி மூன்று வருடங்கள் வாழ்ந்தார்கள். இந்த கால கட்டத்தில் நடந்த அவர்களுடைய சொல் செயல் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் மரம், மட்டைகள், தோல்களில் எழுதிப் பாதுகாப்பது மிகக் கடினமாக இருந்தது. அதை எழுதுவதற்கு ஏராளமான எழுதப் படிக்கத் தெரிந்த நபித்தோழர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நபி அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த நபித்தோழர்கள் மிக மிகக் குறைவானவர்களே இருந்தனர். அதே நேரத்தில் குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதமாகவும், இஸ்லாத்தின் முதல் மூல கிரந்தமாகவும், தெய்வீக அழியா அற்புதமாகவும் இருந்தமையால் எழுதப் படிக்க தெரிந்த நபித்தோழர்கள் குர்ஆனை எழுதுவதில் தங்களை முழுக்க முழுக்க ஈடுபடுத்தினார்கள். எனவே அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் எவ்வித சிரமுமின்றி குர்ஆனின் ஒரு எழுத்துக்கூட சிதையாத வண்ணம் பாதுகாப்பான முறையில் அதைப் பெற்றுக்கொள்ள வாய்பாக அமைந்தது.
மேலும் அரபியர்களிடையில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவாக இருந்தாலும் மிக அதிகமான மனன சக்தியுடையவர்களாக இருந்தார்கள். குர்ஆன் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கப்பட்டதின் காரணத்தால் நபித்தோழர்கள் அவ்வப்போது இறங்கும் வசனங்களை மனனம் செய்வதற்கு மிக எளிதாக இருந்தது.
ஆனால் சுன்னத் என்ற நபிவழி நபி அவர்களின் முழு வாழ்க்கையின் சொல் செயல் அங்கீகாரத்தைக் கொண்டதாகும். அவை குர்ஆனை விட அதிகமாக இருந்தது. குர்ஆன் எழுதப்பட்டது போன்று நபிவழியும் எழுதப்பட்டிருந்தால் அதை மனனம் செய்வது நபித்தோழர்கள் மீது மிக சிரமமாக இருப்பதுடன், குர்ஆனோடு நபிமொழியும் கலந்து வேறுபடுத்தி அறிய முடியாத ஒரு சூழ்நிலை பின்னர் ஏற்பட்டு விடக்கூடும். இஸ்லாத்தின் எதிரிகள் அதை ஆயுதமாகப் பயன்படுத்தி, குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரனத்தினால் தான் நபிவழியை நபித்தோழர்கள் எழுதித் தொகுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆரம்பக் கட்டத்தில் நபி அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“நான் சொல்வதில் குர்ஆன் அல்லாத எதையும் நீங்கள் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாத எதையாவது, யாராவது எழுதியிருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்” நூல்: முஸ்லிம்
இவ்வாறு நபி அவர்கள் சொல்லியிருப்பதன் நோக்கம் குர்ஆனை ஒரு தொகுப்பு வடிவில் பாதுகாப்பது போன்று என் சொல், செயல்களை நீங்கள் எழுத வேண்டாம் என்பதுதான். கிருஸ்தவர்கள் இறைவனால் அருளப்பட்ட இஞ்சீல் வேதத்தோடு நபி ஈஸா(அலை) அவர்களுடைய போதனைகளையும் (இன்னும் பொய்களை) கலந்து பிரிக்க முடியாதவாறு ஆக்கிவிட்டதைப் போன்று தனது உம்மத்தினரும் அவ்வாறு செய்துவிடக்கூடாது என்று அஞ்சியே அவர்களுடைய சொல், செயல்களை எழுதுவதை தடை செய்தார்கள் என்றாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மிக அவசியம் ஏற்படும்போது குர்ஆன் அல்லாத சில விஷயங்களை எழுத நபி அனுமதித்திருக்கிறார்கள்.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கா வெற்றியின்போது ‘பனீலைது’ என்ற வம்சத்தைச் சார்ந்த ஒரு மனிதரை ‘குஸாஆ’ என்ற வம்சத்தார் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது தனது ஒட்டகத்தின் மீது ஏறி பின்வருமாறு ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். மக்காவின் உள்ளே கொலை நடப்பதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். மக்காவாசிகள் மீது அல்லாஹ்வின் தூதரும், உண்மை மூஃமின்களும் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். எனக்கு முன்னால் இருந்த யாருக்கும், எனக்கு பின்னால் உள்ள யாருக்கும் மக்காவின் உள்ளே போர் புரிவதற்கு ஆகுமாக்கப்படவில்லை. எனக்கு ஒரு சிறிது நேரம் அங்கே போர் செய்வதர்கு அனுமதிக்கப்பட்டது. அறிந்துகொள்ளுங்கள் இப்போது எனக்கும் விலக்கப்பட்டு விட்டது.
மக்காவிலிருந்து செடி கொடிகளை எடுப்பதும், தவறிப்போன பொருட்களை அதற்குச் சொந்தக்காரர்கள் அல்லாதவர்கள் எடுப்பதும் விலக்கப்பட்டுள்ளது. யாரவது ஒருவன் அங்கு கொல்லப்பட்டால் அவனுக்குறிய ஈட்டுத்தொகையை (கொல்லப்பட்டவனுக்குறிய நிகர்தொகை) கொல்லப்பட்டவனின் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது கொன்றவை கொல்லப்பட்டவனின் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது எமன் நாட்டைச் சார்ந்த ‘அபூஷாஹ்’ என்ற ஒருவர் “யாரசூரல்லாஹ் இதை எனக்கு எழுதி தாருங்கள்” என்று சொன்னார். அப்போது, “அபூஷாவிற்கு எழுதி கொடுங்கள்” என்று ஸஹாபாக்களைப் பார்த்து சொன்னார்கள். நூல்:புகாரி
இவ்வாறே நபி அவர்கள் பல நாட்டு மன்னர்களுக்கும் அரேபியாவிலுள்ள தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி இஸ்லாத்தின்பால் அழைத்துள்ளார்கள். ஆக மிகக் குறைவாக ஒரு சில விஷயங்கள் நபி வழியிலிருந்து எழுதப்பட்டாலும் குர்ஆன் எழுதப்பட்டது போன்று நபிவழி எழுதிப் பாதுகாக்கப்படவில்லை.
 தொடரும்…
S.கமாலுத்தீன் மதனி

சபை ஒழுங்கு



ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ
முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் ‘நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ
உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
“ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ
நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்
“இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ
பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி “உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

Post image for மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி அல்குர்ஆனின் ஒளியில் நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். (முஸ்லிம்: 4432)
ஒரு மனிதனுக்கு இரண்டு முறைகளில் நோய் ஏற்படலாம். அவையாவன:
1. அவனின் உடலுக்கு ஏற்படும் நோய்.
இதனை உலகில் மனிதனுக்காக அல்லாஹ் படைத்துள்ள மருந்துகளை மனிதன் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
2. மனிதனின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உள்ளத்தில் எழும் நோய்..
இதற்குரிய மருந்து அல்லாஹ்வின் இறை நெறி நூலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் எவ்வாறு விபரிக்கின்றது என்பதை அவதானியுங்கள்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “”நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லா விதமான கனி(களின்) மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கி னான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (நோய் தீர்க்க வல்ல மருந்து) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் 16:68,69)
இறைவன் தேனீக்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தி ஒவ்வொரு மரம், மலர்களை அவதானித்து சிந்தித்து மனிதன் ஆராய்ச்சி செய்தால் மனிதனுக்கு உபயோகமான அனேகமான நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்கலாம் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துகின்றான்.
 1433 ஆண்டுகளுக்கு முன்பே உம்மி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்ட லுக்கமைய மெளட்டீக வழிகளைத் தவிர்த்து மனிதன் சிந்தித்து ஆராய்ந்தால் மனித வாழ்வுக்கு உகந்த பல மருந்துகளைப் பெறமுடியும் என விளக்கினார்கள். இதன் பயனாக இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பல மருத்துவர்கள் உலகில் மருத்துவம் பற்றி பல ஆராய்ச்சி நூல்களை உலகம் பயன்பெற விட்டுச் சென்றனர். இதன் தாக்கமாக ஸ்பெயினில் பல வாசக சாலைகள், கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன.
அன்று மக்கள் சில நோய்களைக் கண்டு தனக்கும் தொற்றிவிடும் எனக் கருதி தப்பியோடினர். இதனால் மக்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் பக்தி என்ற பெயரில் மெளட்டீக மத சடங்குகளும் சம்பிரதாயங்களும் மலிந்தன. அறியாமையிலிருந்த மக்கள் பல தெய்வ சிலை வணக்கங்களுக்கு ஆட்பட இந்த சந்தர்ப்பங்கள் வழிவகுத்தது. அல்லாஹ்வின் சோதனைகளும் அதிகரித்தது. இந்த அறியாமையிலிருந்து மக்களை மீட்க அல்லாஹ் அல்குர்ஆனின் ஒளியுடன் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய போதனைகள் சிலவற்றை அவதானியுங்கள்.
ஒரு மனிதன் அறியாமையிலிருந்து நீங்க வேண்டுமாயின் அவனது உள்ளம் நோய்கள் அற்று தூய்மையாக இருத்தல் வேண்டும். அவனது உள்ளம் தூய்மை அடைய, அறியாமை என்ற நோய் நீங்க, மனித உடலை நேர்வழியின் பக்கம் இட்டுச் செல்ல அருள் மருந்தாக மனிதக் கற்பனைகள் உள் நுழையாத இயற்கையான தூய இறைநெறி நூலின் வழிகாட்டல் அவசியம்; இன்று மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் மட்டுமே இருப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவதானியுங்கள்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கின்றது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும்,  நல்லருளாகவும் உள்ளது.
“”அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது. எனவே) இதில் அவர்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 10:57,58)
நாம் இதை(குர்ஆன்) அரபியல்லாத வேறு மொழிகளில் இறக்கியிருந்தால், இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “”இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தன்மை இருக்கின்றது; இன்னும், அவர்(கண்)களில் குருட்டுத் தனமும் இருக்கின்றது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின் றனர்). (அல்குர்ஆன் 41:44)
அன்று வேதங்கள் அரபு மொழியில் இருக்கவில்லை. வேற்று மொழிகளிலேயே இருந்தன. ஆகவே, அரபியர்களும் வேதக்காரரும் அரபு மொழியில் அல்குர்ஆன் இறங்கியதை ஆச்சரியமாக அவதானித்தனர். அதுபோல் இன்றும் புரோகிதர்கள் மக்கள் பேசாத, விளங்காத மொழியிலேயே இறைநெறி நூல்கள் இருப்பதை விரும்புகின்றனர். அப்போதே தமது வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்ற விதத்தில் மக்களை கண்மூடிப் பின் தொடரச்செய்து தாம் விரும்பும் மெளட்டீக மார்க்கத்தில் வைத்திருக்கச் செய்ய முடியும் என்பதனாலாகும். ஆனால் அல்லாஹ் ஒரு இறைத்தூதருக்கு இறைச் செய்திகளை இறக்கும்போது அவர் பேசும் தாய் மொழியிலேயே இறக்கி அருளினான். காரணம் அப்போதே தமது பிரதேச மக்களுக்கு இம் மொழி விளங்கும் என்பதனாலாகும். இந்த அல்குர்ஆனின் விளக்கம் அரபிகளையும், வேதக்காரர்களையும் ஏற்கச் செய்தது. அத்துடன் மனிதனின் இதயத்திலுள்ள நோய்கள் இறைநெறி நூலின் மருந்தைக் கொண்டே சுகமடைய செய்ய முடியும். இதன் மூலமாகவே அறியாமையிலிருந்து மனிதன் தவிர்ந்து வாழ முடியும். இதன் மூலமாகவே எல்லா அழுக்குகள் நிறைந்த நோய்களிலிருந்து தவிர்க்க முடியும். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நேரிய வழிகாட்டலை அவதானியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கொள்ளை நோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள். (முஸ்லிம்: 4456)
அன்றைய அரபியரிடையே இருந்து வந்த சில மூடப் பழக்க வழக்கங்களான தொற்று நோய் என பயந்து மனித நேயத்தை மறந்து விடல் இதனால் மக்கள் நோயாளிகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அதுபோல் பறவை சகுனம், ஆந்தை பற்றிய நம்பிக்கை, ஸஃபர் என்னும் வயிற்று நோய் தொற்று நோய் என்ற நம்பிக்கை, நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகின்றது என்னும் நம்பிக்கை, வர்ண ஜாலம் காட்டும் சாத்தான் பற்றிய நம்பிக்கை போன்றவற்றை நபி(ஸல்) அவர்கள் பாவமான நம்பிக்கைகளாக இனம் காட்டித் தடை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”தொற்று நோய் கிடையாது; ஸஃபர்(தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், “”அல்லாஹ் வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தனவாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலையயன்ன (தொற்று நோயில்லையா)? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள். (முஸ்லிம்: 4464)
முஸ்லிம் 4468ம் ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு, நோய் கண்ட கால் நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டு செல்லக் கூடாது’ என்றும் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூஹு ரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தொற்று நோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத் தால்தான் மழை பொழிகின்றது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர்(தொற்று நோய்) என்பதும் கிடையாது. (முஸ்லிம்: 4469)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினர்கள்:
தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது. (முஸ்லம்: 4470)
அன்று அரேபியாவில் காணப்பட்ட மூடக் கொள்கைகளை அறியாமைக் கால செயற்பாடுகளாக முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் நம்பக்கூடாது எனத் தடை செய்தனர். அத்துடன் தொழுநோயாளிகளிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் “”நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்று விட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம்:4489)
இங்கு தொற்று நோய் என மனிதன் எண்ணாது, இவை அல்லாஹ்வின் சோதனைகள் எனக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மை நிலையாகும். அத்துடன் ஒரு மனிதனுக்கு நோய் ஏற்பட்டுவிடின் மக்கள் நோய் பிடித்தவரை நோவினை செய்கின்ற, தூற்றுகின்ற சந்தர்ப்பங்கள் அன்று காணப்பட்டது. இந்த மூட நம்பிக்கைகள் ஓர் இறைக் கொள்கைக்கு மாற்றமானதாகும். ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தூதர்கள் காட்டிய வழி முறைக்கு மாற்றமானதாகும். ஷைத்தானின் சூழ்ச்சியால் முன்னைய வேதங்களைக் களங்கப்படுத்திய பல தெய்வ சிலை வணங்குவோரின் தீய வழிமுறையாகும். இச்செயற்பாடுகள் மனிதனின் அழிவுக்கே வழிகாட்டும். இவ்வாறு செயற்படும் குருமாரின் வழிமுறையாகும். இச்செயற்பாடுகள் மனிதனின் அழிவுக்கே வழிகாட்டும். இவ்வாறு செயற்படும் குருமாரின் வழி நரகை அடையவே வழிகாட்டும். அறிவுமிக்க இன்றைய மனித சமுதாயமே இருளின் பக்கம் செல்லாதீர்கள். அல்குர்ஆனின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மன வேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி: 5641)
M.T.M முஜீபுதீன், இலங்கை

பிறர் நலம் பேணுதல்

பிறர் நலம் பேணுதல்

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.
Post image for பிறர் நலம் பேணுதல்    நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.
    ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே “பிறர் நலன் பேணல்’ என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.
    இது முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!
    உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் கயிறுகளைப் பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.
     நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்கள் எதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! அவ்விருவருக்காகவும் துஆச் செய்வது, அவர்களுக்குப் பின் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களால் மட்டுமே உமக்கு எற்பட்ட இரத்த பந்துக்களிடம் இருந்திருப்பது, அவ்விருவரின் நண்பர்களுக்கு கண்ணியமளிப்பது” என்று கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)
    நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான நட்பை மதிப்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். அது சில வேளைகளில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ரோஷத்தை எற்படுத்தியது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜாவின் (ரழி) தோழியர்களுக்கு மிக அதிகமாக உபகாரம் செய்து வந்தார்கள்.
    இதோ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரழி) அவர்கள் மீது ரோஷப்பட்டதுபோல வேறெந்த மனைவியர் மீதும் ரோஷப்படவில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களை அடிக்கடி நினைவு கூர்வார்கள். சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து இதை பல பங்குகளாகப் பிரித்து கதீஜா (ரழி) அவர்களின் தோழியருக்கு அனுப்பி வைப்பார்கள். நான் சில வேளைகளில் “”உலகத்தில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லையா?” என்று கூறுவேன். நபி (ஸல்) அவர்கள், “”கதீஜா இப்படி இப்படியெல்லாம் இருந்தார்கள்; அவர் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இதோ இந்த இஸ்லாமிய நேர்மையை விட உயர்ந்த வேறு நேர்மை இருக்க முடியுமா? பெற்றோர்கள் அல்லது மனைவி இறந்துவிட்ட பின்னரும் அவர்களின் தூரமான தோழர், தோழியர்களுக்கும் உபகாரம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க நாம் நமது வாழ்வில் நமது நெருங்கிய தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
    இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
     முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.
    நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.
    உண்மை முஸ்லிம் தனது சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது சகோதரனுக்கும் விரும்ப வேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.

Why do Muslims eat Halal – Unbelievable பார்க்க‌ வேண்டிய‌ வீடியோ











Why do Muslims eat Halal – Unbelievable பார்க்க‌ வேண்டிய‌ வீடியோ

 

©2012, copyright Dharulhuda

Tuesday, July 10, 2012

முஸ்லிமாக பிறந்தால் தான் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?



 -----------------------------
 அஸ்ஸலாமு அலைக்கும்..!

 இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள்.

 சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…

 “என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.

 பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

 ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

 நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.

 பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.

 இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்…

 “வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்”

 நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.

 நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்…ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன்.

 ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை.

 எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித் தரவில்லை.

 ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று”.

 இப்படி சொன்ன அந்த சகோதரர் மட்டும் என் கையில் சிக்கினார்…… இறைவன் அவருக்கு நல்லறிவை அளிப்பானாக…ஆமின்

 “நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அப்போது நான் மிகவும் பயந்து விட்டேன்

 * என்னால் அரபியில் தொழ முடியாமலேயே போய்விட்டால் என்ன செய்வது?

 * என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது?

 அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருமில்லை. மிகவும் பயந்து விட்டேன்… ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன்.

 ஏனென்றால்,சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக் கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக் கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்… இப்படியே தொடரும்… நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.

 பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை. பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார். அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபு குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன். என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும். அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் “நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல” என்று…

 ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்…. இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.

 என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.

 ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.

 நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.

 நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

 முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.

 அதுமட்டுமல்லாமல்,இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

 முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல்ல இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.

 நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபு கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்……

 அஸ்ஸலாமு அலைக்கும்…..
 ஆயிஷா”


©2012, copyright Dharulhuda

Monday, July 9, 2012

மறுமையில் மனிதனின் நிலை



அஷ் ஷேய்க் மஸீர் அப்பாஸி
ACTJ யின் 19 வது இஜ்திமா
வாழவைதகுளம், செட்டிகுளம் ,
வவுனியா





©2012, copyright Dharulhuda

Wednesday, July 4, 2012

உள்ளங்களை தட்டுவோம்




பகிரங்க பயான் நிகழ்ச்சி 

தலைப்பு :உள்ளங்களை தட்டுவோம்
இடம்: பிரதான வீதி ,தர்கா நகர் .
உரை நிகழ்த்துபவர்: அஷ் ஷேய்க் A.C.K.முஹம்மத் ரஹ்மானி
காலம்: 29.07.2011 இஷா தொழுகையின் பின்
download this video 



©2012, copyright Dharulhuda


Monday, July 2, 2012

பராஅத் இரவு என்ற பெயரில்..



-
இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.
மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் ”மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும் ”எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.
எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.
இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ”என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் ‘இப்னு அபீசப்ரா’ என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ”நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ‘பகீய்’ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல ‘பராஅத் இரவு’ என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
‘இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.
‘தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)

وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في ‘سورة البقرة’ بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: ‘تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى’ (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص

 


 எழுதியவர் மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி



©2012, copyright Dharulhuda

கலாநிதி முஹம்மத் முர்ஸி: சில அறிமுகக் குறிப்புகள்

Morsiஎகிப்தில் மே மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத் முர்ஸி சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றார் எகிப்தின் புதிய அதிபர் மொஹமட் முர்ஸி கடந்த சனிக்கிழமை பதவியை பொறுப்பேற்றார்.  அவரைப்பற்றி சில குறிப்புக்கள் இதோ ........
 
கலாநிதி முஹம்மத் முர்ஸி இஹ்வான்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். அத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் மக்தபுல் இர்ஷாத்என அழைக்கப்படும் உயர் வழிகாட்டல் சபையின் அங்கத்தவராகவும் இருந்தவர்.
அரசியல் கட்சி உருவாக்கப் பட்ட பின்னர், முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக இயக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் மக்தபுல் இர்ஷாதிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இயக்கத்தின் முன்னணி அரசியல் தலைவர்களுள் ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். கடந்த தசாப்தத்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் இவர் முக்கிய பங்கெடுத்தார்.
2000-2005 வரையான காலப் பகுதியில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் கலாநிதி முர்ஸி செயற்பட்டார். அத்துடன் ஸகாஸிக் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் சடப்பொருள் விஞ்ஞான (–Material Science) துறையின் தலைவராகப் பணி யாற்றினார்.
அவரது முழுப்பெயர் முஹம்மத் முஹம்மத் முர்ஸி ஈஸா அய்யாத். 1951 ஓகஸ்டில் எகிப்தின் கிழக்கு மாகாணமான ஷர் கிய்யாவில் அவர் பிறந்தார்.
1975 இல் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 1978 இல் பொறியியல் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1982 இல் அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
கெய்ரோ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தென் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உதவியாளராகவும் அவர் பணியாற்றினார். அத்துடன் 1982 தொடக்கம் 1985 வரை கலிபோர்னியாவிலுள்ள நோர்த் ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்தார்.
பின்னர் எகிப்திலுள்ள ஸகாஸிக் பல்கலைக்கழகத்தில் 1985 தொடக்கம் 2010 வரை பல பொறுப்புகளை வகித்துள்ளார். அங்கு பேராசிரியராகவும் சடப்பொருள் பொறியியல்துறை தலைவராகவும் விளங்கினார். ஸகாஸிக் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திலும் அவர் அங்கம் வகித்தார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினது சர்வதேச மாநாட்டில் அவர் அங்கம் வகித்தார். சியோனிஸத்தை எதிர்க்கும் எகிப்திய திட்டக் குழுவின் ஸ்தாபக அங்கத்தவராகவும் விளங்குகிறார்.
கலாநிதி முர்ஸி கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர் பணியாற்றிய பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்போடு செயற் பட்டு, சிறந்து விளங்கினார். சிறந்த அரசியல் தலைவரான அவர், தனது ஆற்றல்களையும் திறன்களையும் நடைமுறையில் நிரூபித்தார்.
நடைமுறை உற்பத்தித் தீர்வுகள் தொடர்பாக, எகிப்திய கைத்தொழில் துறையில் அவர் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். உலோக மேற்பரப்பு செயற்பாடு தொடர்பான பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். இது தொழிற் துறைகளில் செய்யப் படும் ஒரு விஞ்ஞானக் கணிப்பாகும். 80 களின் ஆரம்பத்தில் விண்கல என்ஜின் உருவாக்கம் தொடர்பாக அமெரிக்காவிலுள்ள நாஸாவில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தபோதே இந்தக் கணிப்பில் ஈடுபட்டார்.
எகிப்திய மக்களால் தூக்கி வீசப்பட்ட அரசாங்கத்தின் ஆக்கி ரமிப்பு நடவடிக்கைகள், கொடுங்கோன்மைக்கு எதிராக உறுதியாக செயல்பட்டதன் காரணமாக, கலாநிதி முர்ஸி பலமுறை கைது செய்யப்பட்டார்.
2005 தேர்தல் முறைகேட் டுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளானபோது, அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலாநிதி முர்ஸி முக்கிய பங்கெடுத்தார். அவர் நீதிபதிகளின் சுதந்திரத்தை ஆதரித்து செயற்பட்டார். தேர்தல் ஊழல்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசிய நீதிபதிகளைத் தண்டிப்பதையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.
2006 மே 18 ஆம் திகதி காலை கலாநிதி முர்ஸி மக்கள் விரோத இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டார். மத்திய கெய்ரோவிலுள்ள அல்ஜலாஹ் நீதிமன்ற தொகுதிக்கு முன்னேயும், வட கெய்ரோ நீதிமன்றத்திற்கு முன்னேயும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது அவர் உட்பட 500 இஹ்வான்கள் கைதுசெய்யப்பட்டனர். கலாநிதி முர்ஸி ஏழு மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்.
அவர் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஜனவரி 28, 2011 அன்று கோபத்திற்குரிய வெள்ளிக்கிழமைகாலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் பெருந் தொகையான இஹ்வான்களும் கைதுசெய்யப்பட்டனர். எகிப்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இஹ்வான்களைக் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும்.
புரட்சியின்போது சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் பலர் தப்பினர். இதன்போது கலாநிதி முர்ஸி தனது சிறைக்கூடத்திலிருந்து வெளியேற மறுத்தார். அங்கிருந்தவாறு செய்மதி தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேவைகளை தொடர்புகொண்ட அவர், நீதித்துறை அதிகாரிகளை சிறைக்கு வந்து, கைதுசெய்யப்பட்ட இஹ்வான் தலைவர்களது சட்டநிலை தொடர்பாக ஆராயுமாறு வேண்டினார்.
அவர்களது கைதுக்கு ஏதேனும் சட்டரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்த பின்பே அவர்கள் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஏனெனில், அப்போது எந்தவொரு நீதித்துறை அதிகாரியும் அங்கிருக்கவில்லை.
கலாநிதி முர்ஸிக்கு இழைக் கப்பட்ட அநீதி அவரோடு மட்டும் நிற்கவில்லை. அவரது குடும்பத்தினரும் அதனால் பாதிக்கப்பட்டனர். அவரது மகன் கலாநிதி அஹ்மத், 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனது தந்தையின் நியமனம் அறிவிக்கப்படவுடன் கைதுசெய்யப்பட்டார். தனது தந்தை எகிப்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அஹ்மத் மூன்று தடவைகள் கைதுசெய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் ஆற்றிய சிறந்த அரசியல் பணியின் பின்னர், இஹ்வான்களது ஷூறா சபையின் அங்கத்த வராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் இயக்கத்தின் வழிகாட்டல் சபையின் அங்கத்த வராகவும் அவர் தெரிவானார்.
ஜனவரி 25 புரட்சிக்குப் பின்னர் இஹ்வான்களது ஷூறா சபையினால், புதிதாக உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராக அவர் தெரிவுசெய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டு எகிப்திய பாராளுமன்றத்தில் கலாநிதி முர்ஸி இஹ்வான்களது பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வாக்குமிக்க, முக்கிய பாத்திரத்தை வகித்தார்.
அப்போதைய பாராளுமன்றத்தில் செயற்திறனுள்ள மிகச் சிறந்த அங்கத்தவராகவும்
அவர் விளங்கினார். 2000 தொடக்கம் 2005 காலத்தில் அவரது பாராளுமன்ற செயற்திறன் காரணமாக, மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாக சர்வதேச ரீதியாக அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
2005 பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின்போது கலாநிதி முர்ஸி, தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விடவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தபோது அவரது போட்டி வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கலாநிதி முர்ஸி இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அத்துடன் அந்தப் பிரிவின் மேற்பார்வையாளராகவும் (முஷ்ரிப்) இருந்தவர். 2004 இல் இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்த முனைப்பின்போதும், 2007 இல் வெளியிட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்போதும் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக்கிய பங்கு வகித்தது. 2010 பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவதில் அவர் முன்னணியில் இயங்கினார்.


thanks to meelpaarvai.net