தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் 23 ஆம் திகதி வரை சீல் வைப்பு, தீர்வு இல்லையென்றால் பிக்குகளால் உடைப்பு?

.

தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் 23 ஆம் திகதி வரை சீல் வைப்பு, தீர்வு இல்லையென்றால் பிக்குகளால் உடைப்பு?

Attackதம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவரை முஸ்லிம்கள் யாரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாது சீல் வைத்துள்ளனர் என அப்பிரதேச மக்கள் மீள்பார்வை இணைய தளத்திற்குத் தெரிவித்தனர். (பள்ளிவாசலின் தலைவரான எச். ஏ. அஹமட் லெப்பை அவர்களின் உரை)
மேலும், காகங்களுக்கு தலைக்கு மேலால் பறக்கத்தான் முடியும் மாற்றமாக கூடு கட்ட முடியாது. அவ்வாறு கூடு கட்டுவதற்கு இடமளிக்க மாட்டோம் என ஹெல உருமயவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்குத் தெரிவித்தார். (அக்மீமன தயாரத்ன தேரரின் உரை)
எதிர்வரும் திங்கட்கிழமை அன்று இந்தப் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிக்கிடையில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.
அதிகாரபூர்வமாக முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படாவிட்டால், தாங்களே முன்னின்று பள்ளிவாசலை இடிக்கப்போவதாக பிக்குமார் கூறியுள்ளனர்.

 
Dambualla-protest0
தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் பௌத்த மதகுருமார்கள் மற்றும் ரங்கிரி பௌத்த சங்கத்தினரின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளதாகவும், இன்று அங்கு ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை எனவும் அங்குள்ள ஒருவர் மீள்பார்வை இணையதளத்திற்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். அப்போது அங்கு திரண்டு வந்த பௌத்த பிக்குகளின் தலைமையிலான குழு அப்பள்ளிவாசலை மூற்றுகையிட்டு கற்களால் தாக்கியுள்ளனர்.
அங்கு காவலில் இருந்த பொலிஸார், ‘‘இங்கு திரண்டிருக்கும் பௌத்த பிக்குகளை எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது, இப்போது நீங்கள் பாதுகாப்பாக பள்ளிவாசலைவிட்டு வெளியேறுங்கள்‘‘ எனக் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் பள்ளிவாசலிலிருந்து வெளியேறினோம். பின்னர், கண்டி-அநுராதபுர வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு பள்ளிவாசலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையைத் தொழுதோம்.
ஜும்ஆத் தொழுகை முடிந்து அங்கு சென்றபோது, எங்களுக்கு அப்பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை. தற்போது அப்பள்ளிவாசல் முற்றாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Dambualla-protest02
Dambualla-protest2











தம்ப்புள்ள பள்ளிவாசலை பிக்குமார் தாக்கி சேதப்படுத்தியதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரான எச். ஏ. அஹமட் லெப்பை கூறியுள்ளார்.




©2012, copyright Dharulhuda

0 comments :

Post a Comment