அல்லாஹ்வையும் தூதரையும்

.
Post image for அல்லாஹ்வையும் தூதரையும்


அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல் இன்றைக்கு அதிகமானவர்கள் வழி தவறுவதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்ன இந்த கட்டளையை மறந்ததே காரணம். வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் ஆண்கள், பெற்றோரைக் காரணம் காட்டி இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யும் காரியம் இது என்று அவர்களிடம் சொன்னால் பெற்றோர்களை எதிர்க்க முடியாது என்று கூறி விடுகிறார்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட இவர்கள் பெற்றோர்க்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
மேலும், இவர்கள் ஒரு பெண்ணை விரும்பும் போது மட்டும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் மீது வைத்திருக்கும் பிரியத்தைக்கூட அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் கொண்டிருக்கவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்துகிறார்கள். இதே போன்று வியாபாரத்தில் கலப்படம் செய்பவர்கள், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்கள், இன்ன பிற பாவங்களைச் செய்பவர்கள் அணைவருமே நபி(ஸல்) அவர்களது கட்டளையைத் துணிச்சலாக அலட்சியம் செய்வதால் தான் இந்த பாவங்களை செய்கிறார்கள். இன்னும் சிலர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் ஆகியோருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிக்கின்றனர். இவர்களை அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்.
உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துனைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவனது பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக! (ஸூரத்துல் பகரா,9:24).
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால் நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்னுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (ஸூரத்துல் அஹ்ஜாப்,33:36).
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். ஸூரத்துல்ஆல இ…ம்ரான்,3:3
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக… நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். ஸூரத்துல் மாயிதா,5:54.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார்.
(அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவராக மாடடார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அபூஹுரைரா (ரலி) நூல்-புகாரி,) ‎7485.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) …அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘செயல்களில் சிறந்தது எது?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என வினவப்பட்டதற்கு, ‘இறைவழியில் போரிடுதல்’ என்றார்கள். ‘பின்னர் எது?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அங்கீகரிக்கப்படும் ஹஜ்’ என்றார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2 2:207.
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒருவர் கடந்து சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்……. “”இதை நீ அவருக்கு அறிவித்து வீட்டீரா?” அவர் “இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் “(உமது நேசத்தை) அவரிடம் அறிவித்து விடும்” என்றார்கள். அவர் தனது நண்பரிடம் சென்று, “நான் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கிறேன்” என்றார். அம்மனிதர்” அல்லாஹ்வுக்காக என்னை நீர் நேசித்தீர், அல்லாஹ்வும் உம்மை நேசிக்கட்டும்” என்று கூறினார். (ஸுனன் அபூதாவூது)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது தன் வசமுள்ள ஏட்டில் என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான். (நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா)
தொகுப்ப
Ahamed Hussain

0 comments :

Post a Comment