அமெரிக்காவை மகிழ்விப்பதற்காகவே அரசாங்கம் இஸ்ரேல் தூதரகத்தைத் திறக்கத் தீர்மானம்

.



Bimalஅமெரிக்காவை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் இலங்கையில் இஸ்ரேல் தூதரகத்தைத் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது. இத் தீர்மானம் மூலம் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாலஸ்தீனம் தொடர்பான இஸ்ரேலின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவை மகிழ்விப்பதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இஸ்ரேல் தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளமையானது பாரதூரமானதாகும்.
இந்த தீர்மானத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இலங்கை- பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்த தீர்மானத்தினால், அறபு உலகில் உள்ள நட்பு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்படும்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாவலான இஸ்ரேலுக்கு இலங்கையில் தூதரகம் ஒன்றை திறக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவதானது அமெரிக்காவிற்கு சாதகமான தனது நிலைப்பாட்டை காட்டுவதற்காகவே எனவும் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

thanks to meelpaarvai.net

0 comments :

Post a Comment