Saturday, December 31, 2011

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ
நபி  

அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது இமாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.

 நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி(ஸல்) அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட இமாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி (ஸல்) அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை” أأَسْتَغْفِرُ اللهَ அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்)اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم ”அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி (ஸல்) அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)

நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் இருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) மிகவும் ஏற்று கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி இரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)

மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.

இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி (ஸல்) அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே இல்லை. இவ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள்.

இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே இவ்வாறு செய்தால் என்ன தவறு? என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி (ஸல்) அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது இருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.

உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)

“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.” அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்மை தீவிரவாதி என்பதா?

முஸ்லிம்மை தீவிரவாதி என்பதா? உனக்கு பேராசிரியர் தகுதி கிடையாது. சுவாமியை நீக்கயது ஹார்வேட் பல்கலைக்கழகம்

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் ‘ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்’ என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

-தட்ஸ் தமிழ்

அழிவுப் பாதையில் மனிதன்!

அழிவுப் பாதையில் மனிதன்!


இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.

பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.

ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?

இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.

ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.

மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.

இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.

மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.

அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?

அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

மார்க்கம் மிக மிக எளிதானது

மார்க்கம் மிக மிக எளிதானது


மார்க்கம் மிக மிக எளிதானது


இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)

அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத்தில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றான். மனித சமுதாயம் மிகவும் சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ்லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமையான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நின்று கொண்டு தொழ இயலாதவர்கள் உட்கார்ந்து தொழட்டும்; உட்கார்ந்து தொழ இயலாதவர்கள் படுத்துக்கொண்டு தொழட்டும் என்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று மனித இயற்கைக்கு மாற்றமாக எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்குக் கற்றுதரவில்லை. உதாரணமாக ரமழான் மாதத்தில் நோன்பு நோர்க்க இயலாத அளவிற்கு நோய் வாய்ப்பட்டவர்கள் ரமழான் அல்லாத மாதங்களில் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் 2:185 வசனத்தில் கூறுகின்றான். அதே போன்று மனித சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்கு கட்டாயக் கடமையாக்கவில்லை (உ.தா.எ) வசதி வாய்ப்பு பெற்றவர்கள்தான் ஹஜ் செய்ய வேண்டும்; ஜகாத் கொடுக்கவேண்டும். இப்படி உயர்வான மிகவும் சுலபமான இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை பின்பற்றுவதில் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாக இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஒரு வயதான பெண்மணி என்னிடம் சொன்னார்கள். எனது கணவர் இறந்த உடன் என்னை வானத்தைப் பார்க்கக் கூடாது; பூமியைப் பார்க்க கூடாது என்றும், இதுதான் இத்தாவின் முறை என்றும் சொன்னார்கள். அப்பொழுது நினைத்தேன் மனிதனின் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயத்தை எல்லாம் மார்க்கம் சொல்லி இருக்குமா? என்று, அதற்கு நான் சொன்னேன் நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணிக்கு இத்தாவுடைய நேரத்தில் வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். இவை எல்லாம் நாமாக இஸ்லாத்தின் பேரில் கஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமோ மனித நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தையோ மனிதனுக்கு கஷ்டமான ஒரு விசயத்தையோ மார்க்கமாக ஒரு போதும் எடுத்தியம்பவில்லை.

இப்படி இஸ்லாம் முஸ்லிம்கள் மத்தியில் கடின மானதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களின் அறியாமையா? அல்லது மார்க்க அறிஞர்கள் தமது கடமையினை மறந்ததினாலா என்றால், முஸ்லிம்கள் அறியாமையிலும் இருக்கின்றார்கள்; மார்க்க அறிஞர்கள் தமது கடமையை முறையாகச் செய்யாமல் இருக்கின்றார்கள். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்று எதற்கெல்லாம் சொல்லமுடியும் என்பது கூட தெரியாமல் தான் இருக்கின்றார்கள்.

இன்று முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தில் தெளிவு பெற்று குர்ஆனில் உள்ளவைகளையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் எடுத்துச் சொல்லும் போது முஸ்லிம்கள் ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள். இஸ்லாம் என்று எதனைச் சொல்ல முடியுமோ அதை காஃபிர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்த்தாக அல்லாஹ் 50:2 வசனத்தில் கூறுகின்றான். காஃபிர்கள் இஸ்லாத்தினை ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்ப்பதிலாவது அர்த்தம் இருக்கின்றது. இஸ்லாத்தை தங்களது மார்க்கமாக ஏற்றுள்ள முஸ்லிம் இஸ்லாத்தை ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள் என்றால் முஸ்லிம் சமுதாயம் உண்மையிலேயே அறியாமையில் தான் இருக்கின்றது.

இப்படி இஸ்லாத்தில் அடிப்படையே தெரியாமல் இருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் தர்ஹாவிற்கு செல்லாதே, மெளலூது ஓதாதே, தாயத்து தட்டு, ஃபாத்திஹா போன்ற சடங்குகளை செய்யாதே என்று சொன்னால், சொல்பவர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரையினைக் குத்த முயற்சிப்பார்களே தவிர சொல்வதை செவி சாய்க்க மாட்டார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கை போன்றுதான். இப்படி எதனையும் சிந்திக்காமல் இருக்கக் கூடிய சமுதாயத்திற்கு மத்தியில் நாம் என்ன செய்வது என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதற்குக் காரணம் என்ன? நமது சமுதாயத்தில் எங்கே கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து அந்த தவறினை நிவர்த்தி செய்தால் நமது சமுதாயம் இஸ்லாத்தை தெளிவாக புரிந்து கொள்ளும்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் உங்களிடம் இரண்டைவிட்டு செல்கின்றேன்; அந்த இரண்டையும் பற்றிப் பிடித்திடிருக்கும் காலம் எல்லாம் நீங்கள் ஒருபோதும் வழிதவறவே மாட்டீர்கள்; ஒன்று அல்குர்ஆன், இரண்டு எனது சுன்னத்தான வழிமுறை. அறிவிப்பாளர் மாலிக்பின் அனஸ்(ரழி) நூல்: முஅத்தா 1599

நமது சமுதாயம் வழிகெட்டு, நெறிகெட்டு சடங்குகளிலும் சம்பிர தாயங்களிலும் மூட – பழக்க வழக்கங்களிலும், வெட்டி அனாச்சாரங்களிலும் மூழ்கியிருப்பவதற்குக் காரணம் எதைப் பின்பற்றினால் வழிதவற மாட்டார்களோ அதைப் புறகணித்துவிட்டு மனித சொந்த அபிப்பிராயங்களையும் மனித கற்பனைகளையம் பின்பற்றியதன் விளைவு, முஸ்லிம் சமுதாயம் இன்று வழிகேட்டின் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

நமது சமுதாயம் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்களாக உருவாக வேண்டும் என்று ஆசைபடுவதற்கு முன்னால் தமது குடும்பத்தினர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் குர்ஆனையும் ஹதீஸ் கிரந்தங்களையும் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டவேண்டும். வாங்கிப் படிக்க வசதி இல்லாதவர்களுக்கு வசதி உள்ளவர்கள் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யவேண்டும். நமது சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைபாடுகளை கண்டு நான் மிகவும் கவலை அடைகிறேன். நமது சகோதரர்களோடு ஏகத்துவ கொள்கை நின்றுவிட்டதே ஒழிய, அவர்களது குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அல்லாஹ் திருமறையில் 26:214 வசனத்தில் நபியை பார்த்து கட்டளையிடுகின்றான். நபி(ஸல்) அவர்களுக்கு சத்திய இஸ்லாம் கிடைத்த மாத்திரத்தில் அவர்கள் முதலில் அழைப்புப் பணி செய்தது தமது குடும்பத்தினர்களிடத்திலும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அல்லாஹ் திருமறையில் 33:21 வசனத்தில் கூறுகின்றான். உங்களுக்கு அழகிய முன்மாதிரி உங்கள் நபியிடத்தில் இருக்கின்றது. நாமும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு இந்த வசனத்தை எடுத்துச் சொல்கின்றோம். அந்த முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் செய்த செயலை எத்தனை பேர் செய்து இருக்கின்றோம் என்பதை இஸ்லாமிய சகோதரர்களே சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்க, அந்த கடமையை மறந்தவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம் அல்லாதவர்களுக்குத்தான் இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல இயலவில்லை. தெளிவான மார்க்கம் இருந்தும் முஸ்லிம் சமுதாயம் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் வெட்டி அனாச்சாரங்களிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மூழ்கி இஸ்லாமிய வளர்ச்சிக்கு முஸ்லிம் சமுதாயமே ஒரு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்களே அவர்களையாவது சீர்திருத்த முயற்சி செய்தோமா? சமுதாயத்தை விடுங்கள் உங்களது குடும்பத்தினர்களையும் உங்களது உறவினர்களையும் சீர்த்திருத்தினீர்களா?

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய மார்க்க அறிஞர்கள், மார்க்கத்திற்கு நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் மீண்டும் மீண்டும் அறியாமை என்னும் இருளுக்குத்தான் கொண்டு சென்றார்களே தவிர, இஸ்லாம் என்னும் வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது இருக்கட்டும், காண்பிக்கக் கூட முயற்சி செய்யவில்லை. திருமறை குர்ஆனில் 2:257 வசனத்தில் பக்கம் கொண்டுவர நாடுகின்றான். ஷைத்தானோ மனிதர்களை வெளிச்சத்திலிருந்து இருளின் பக்கம் கொண்டு செல்ல நாடுவதாக” அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான். எந்த இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ் மனிதர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வர நாடுகின்றானோ அந்த சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்ட ஆலிம்கள் ஷைத்தானின் நோக்கத்தினை நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பதை நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது. ஆலிம்களை இப்படி விமர்சனம் செய்கின்றேனே என்று ஒன்றும் நினைக்க வேண்டாம். இவர்களை விமர்சனம் செய்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல.(சிறிதளவு கூட இஸ்லாமிய எழுச்சியில், மலர்ச்சியில், வளர்ச்சியில், அக்கறை ஆர்வம் அற்றவர்களாக தாமும் செய்யாமல், செய்பவனையும் செய்யவிடாமல், மேய்கின்ற மாட்டை கெடுக்கின்ற மிதங்கொண்ட மாடுகளை போன்று இஸ்லாமிய வளர்ச்சியினை தடுக்கின்றார்களே என்ற ஆத்திரம்தான். இவர்களை விமர்சிப்பதில் குர்ஆனின் 2:159 வசனப்படி தவரொன்றுமில்லை. இவர்களை இனம் காட்டினால் தான் இருக்கின்ற இளைய தலைமுறை இஸ்லாத்தின் உண்மை நிலையினை உணர்ந்து உருவாகும்.)

தமிழகத்தில் உள்ள பெருவாரியான பள்ளிகளில் ஜமாஅத்துல் உலமா சபையினை சார்ந்தவர்கள்தான் இமாமாகப் பணி புரிகின்றார்கள். இவர்கள் எல்லாம் ஒரு கூட்டம் “குர்ஆனில் உள்ளவற்றை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, ஒவ்வொரு பள்ளியிலும் மார்க்க பிரச்சாரம் செய்தார்கள் என்றால் நமது சமுதாயத்தினை ஓரளவாவது வழிகேட்டிலிருந்து மீட்க முடியும் என்பது திண்ணம். ஆனால் இவர்கள் இதனை செய்யமாட்டார்கள். இமாமத் செய்யும் ஊரில் உள்ள நாட்டாண்மைகளுக்கும் பெரியவர்களுக்கும் மார்க்கத்தை வளைத்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்படுவார்களே தவிர சத்தியத்தினை எடுத்துச் சொல்லமாட்டார்கள். யூதர்களோடு யாரையாவது ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் நமது ஆலிம்களை யூதர்களோடு ஒப்பிட்டு எழுதலாம். இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் குணாதிசியங்களில் யூதர்களோடு ஒத்தவர்களாகவே இருக்கின்றார்கள். அல்லாஹ் திருமறையில் 2:146 வசனத்தில் யூதர்கள் குர்ஆனை இறைவேதம் என்பதை அறிவார்கள் எப்படி என்றால் தன்னுடைய குழந்தையை அறிவது போன்று; இருந்தும் மறைப்பார்கள் என்று கூறுகின்றான். யூதர்களைப் போன்று ஆலிம்களும் குர்ஆனை அறிவார்கள்; இருந்தும் உலகில் கிடைக்க கூடிய ஒரு சில சுகபோகத்திற்காகவும் உலக ஆதாயத்திற்காகவும் குர்ஆனை மக்கள் மத்தியில் மறைப்பார்கள்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இப்படிப்பட்டவர்கள் நமது சமுதாயத்தை சீர்திருத்தி விடுவார்கள் என்று நாம் நினைப்பது கானல் நீரே. மார்க்கத்தின் உண்மை நிலையை உணர்ந்த நாம் – அறிந்த நாம் உண்மையான உணர்வுகளோடும் ஆர்வத்தோடும் அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தோடும் செயல்பட முயற்சி செய்யாதவரை அறியாமையில் மக்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். ஒருபகுதியில் மக்கள் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்றால் அங்கு இதன் அடிப்படையில் செயல்பட ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அறிந்தவர்கள் செம்மையாக செயல்படாதவரை அறியாமை என்னும் இருள் நீங்காது. இது நான் அனுபவப்பூர்வமாக கண்ட ஒன்று. அல்லாஹ் நமக்கு குர்ஆனையும், ஹதீஸையும் படிப்பதற்கு உதவி புரிந்தான். அல்லாஹ்வின் வாக்கினை மக்கள் மத்தியில் நிலை நாட்டுவதற்காக நாம் அனைவரும் அல்குர்ஆனின் அடிப்படையில் செயல்பட முன் வரவேண்டும்; இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ்வுடைய சன்மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 42:13)



H.நூருல் அமீன், ALAIN.UAE

Tamil Quran - Surat Al-Qiyāmah (The Resurrection) - سورة القيامة

Surat Al-Qiyāmah (The Resurrection) - سورة القيامة

How to Convert to Islam and Become a Muslim

The word “Muslim” means one who submits to the will of God, regardless of their race, nationality or ethnic background. Becoming a Muslim is a simple and easy process that requires no pre-requisites. One may convert alone in privacy, or he/she may do so in the presence of others.

If anyone has a real desire to be a Muslim and has full conviction and strong belief that Islam is the true religion of God, then, all one needs to do is pronounce the “Shahada”, the testimony of faith, without further delay. The “Shahada” is the first and most important of the five pillars of Islam.

With the pronunciation of this testimony, or “Shahada”, with sincere belief and conviction, one enters the fold of Islam.

Upon entering the fold of Islam purely for the Pleasure of God, all of one’s previous sins are forgiven, and one starts a new life of piety and righteousness. The Prophet said to a person who had placed the condition upon the Prophet in accepting Islam that God would forgive his sins:

“Do you not know that accepting Islam destroys all sins which come before it?” (Saheeh Muslim)

When one accepts Islam, they in essence repent from the ways and beliefs of their previous life. One need not to be overburdened by sins committed before their acceptance. The person’s record is clean, and it is as if he was just born from his mother’s womb. One should try as much as possible to keep his records clean and strive to do as many good deeds as possible.

The Holy Quran and Hadeeth (prophetic sayings) both stress the importance of following Islam. God states:

“...The only religion in the sight of God is Islam...” (Quran 3:19)

In another verse of the Holy Quran, God states:

“If anyone desires a religion other than Islam, never will it be accepted of him; and in the Hereafter, he will be in the ranks of those who have lost (their selves in the Hellfire).” (Quran 3:85)

In another saying, Muhammad, the Prophet of God, said:

“Whoever testifies that there in none worthy of being worshipped but God, Who has no partner, and that Muhammad is His slave and Prophet, and that Jesus is the Slave of God, His Prophet, and His word[1] which He bestowed in Mary and a spirit created from Him; and that Paradise (Heaven) is true, and that the Hellfire is true, God will eventually admit him into Paradise, according to his deeds.” (Saheeh Al-Bukhari)

The Prophet of God, may God praise him, also reported:

“Indeed God has forbidden to reside eternally in Hell the person who says: “I testify that none has the right to worship except Allah (God),’ seeking thereby the Face of God.” (Saheeh Al-Bukhari)
The Declaration of the Testimony (Shahada)

To convert to Islam and become a Muslim a person needs to pronounce the below testimony with conviction and understanding its meaning:

I testify “La ilah illa Allah, Muhammad rasoolu Allah.”

The translation of which is:

“I testify that there is no true god (deity) but God (Allah), and that Muhammad is a Messenger (Prophet) of God.”

To hear it click here or click on “Live Help” above for assistance by chat.

When someone pronounces the testimony with conviction, then he/she have become a Muslim. It can be done alone, but it is much better to be done with an adviser through the “Live Help” at top, so he may help you in pronouncing it right.

The first part of the testimony consists of the most important truth that God revealed to mankind: that there is nothing divine or worthy of being worshipped except for Almighty God. God states in the Holy Quran:

“We did not send the Messenger before you without revealing to him: ‘none has the right to be worshipped except I, therefore worship Me.’” (Quran 21:25)

This conveys that all forms of worship, whether it be praying, fasting, invoking, seeking refuge in, and offering an animal as sacrifice, must be directed to God and to God alone. Directing any form of worship to other than God (whether it be an angel, a messenger, Jesus, Muhammad, a saint, an idol, the sun, the moon, a tree) is seen as a contradiction to the fundamental message of Islam, and it is an unforgivable sin unless it is repented from before one dies. All forms of worship must be directed to God only.

Worship means the performance of deeds and sayings that please God, things which He commanded or encouraged to be performed, either by direct textual proof or by analogy. Thus, worship is not restricted to the implementation of the five pillars of Islam, but also includes every aspect of life. Providing food for one’s family, and saying something pleasant to cheer a person up are also considered acts of worship, if such is done with the intention of pleasing God. This means that, to be accepted, all acts of worship must be carried out sincerely for the Sake of God alone.

The second part of the testimony means that Prophet Muhammad is the servant and chosen messenger of God. This implies that one obeys and follows the commands of the Prophet. One must believe in what he has said, practice his teachings and avoid what he has forbidden. One must therefore worship God only according to his teaching alone, for all the teachings of the Prophet were in fact revelations and inspirations conveyed to him by God.

One must try to mold their lives and character and emulate the Prophet, as he was a living example for humans to follow. God says:

“And indeed you are upon a high standard of moral character.” (Quran 68:4)

God also said:

“And in deed you have a good and upright example in the Messenger of God, for those who hope in the meeting of God and the Hereafter, and mentions God much.” (Quran 33:21)

He was sent in order to practically implement the Quran, in his saying, deeds, legislation as well as all other facets of life. Aisha, the wife of the Prophet, when asked about the character of the Prophet, replied:

“His character was that of the Quran.” (As-Suyooti)

To truly adhere to the second part of the Shahada is to follow his example in all walks of life. God says:

“Say (O Muhammad to mankind): ‘If you (really) love God, then follow me.’” (Quran 3:31)

It also means that Muhammad is the Final Prophet and Messenger of God, and that no (true) Prophet can come after him.

“Muhammad is not the father of any man among you but he is the Messenger of God and the last (end) of the Prophets and God is Ever All-Aware of everything.” (Quran 33:40)

All who claim to be prophets or receive revelation after Muhammad are imposters, and to acknowledge them would be tantamount to disbelief.

We welcome you to Islam, congratulate you for your decision, and will try to help you in any way we can.

By: IslamReligion.com 

அழைப்புப் பணி

அழைப்புப் பணி



முன்மாதிரி முஸ்லிம்


(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125

முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.

அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ”…என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்…” (ஸஹீஹுல் புகாரி)

ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.

நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.” (ஸுனனுத் திர்மிதி)

இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.

ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.” (ஸுனன் அபூதாவூத்)

மேலும் கூறினார்கள்: ”தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.” (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார் அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், ”மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது” என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ”யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)

பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் ‘நீ அநியாயக்காரன்’ என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அநியாயக்காரனிடம் ‘நீ அநியாயக்காரன்’ என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.” (முஸ்னத் அஹமத்)

அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், ”மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்” என்று கூறினார்கள் (முஸ்னத் அஹமத்)

இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா’ என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” (ஸுனன் அபூதாவூத்)

முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.

அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ”விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது…” (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ”மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.” (ஸுனன் அபூதாவூத்)


ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.” (முஃஜமுத் தப்ரானி)

அழைப்புப் பணியில் மிருதுவாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வார் முஸ்லிம் அழைப்பாளர் தனது ஏகத்துவ அழைப்புப் பணியில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

(நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக!……(அல்குர்ஆன் 16:125)

அல்லாஹ்வின்பால் அழைப்பவர் இதயங்களை ஊடுருவும் ஆற்றல் பெற்று, அதில் ஈமான் மீதான நேசத்தைப் பதிய வைத்து, மார்க்கத்தின் பால் மக்கள் விரைந்துவரும் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிரமத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே அவர் மனிதர்களிடம் தன்னிடமுள்ள கல்வி, ஞானங்களை ஒரே நேரத்தில் கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன் வைத்து அவர்களது உணர்வுகளையும் இதயங்களையும் அவ்வப்போது தொடவேண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் சிரமப்படுத்தும் நீண்ட உபதேசங்களை தவிர்த்திட வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே நடந்து கொண்ட முறையாகும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் மக்களுக்கு உபதேசம் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒருவர் ”அபூ அப்துர் ரஹ்மானே! நீங்கள் தினந்தோறும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்” என்றார்.

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ”உங்களுக்கு சடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே தினந்தோறும் உபதேசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கிறது. எங்களுக்கு சடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நாட்களை நிர்ணயித்தார்களோ அவ்வாறே நானும் உங்களுக்கு உபதேசம் செய்ய நாட்களை நிர்ணயித்துள்ளேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அழைப்புப் பணியில் நீண்ட பிரசங்கத்தை தவிர்த்துக் கொள்வது விவேகமான அணுகுமுறையாகும். அதிலும் மிகப்பெரிய கூட்டங்களில் உரையாற்றும்போது அதில் வயோதிகர்கள், பலவீனர்கள், நோயாளிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுருக்கமாக உரையாற்றுவது பிரசங்கம் செய்பவர் அழைப்புப்பணியை நன்கறிந்தவர் என்பதையும் மக்களின் மனநிலையை விளங்கியவர் என்பதையும் வெளிப்படுத்துவதாகும்.

அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நிச்சயமாக ஒரு மனிதரின் நீண்ட தொழுகையும், சுருக்கமான குத்பாவும் அவர் அறிவாளி என்பதற்கான அடையாளமாகும். தொழுகையை நீளமாக்குங்கள், குத்பாவை சுருக்கிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

அறிவும், விவேகமும் கொண்ட அழைப்பாளர் பிறரை சத்தியத்தின்பால் மென்மையாக அழைப்பார். மக்களின் அறியாமையையும், அவர்களுக்கு விளங்குவதில் ஏற்படும் தாமதத்தையும், அவரை சோர்வடையச் செய்யும் மிக அதிகமான கேள்விகளையும், தவறுகளையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு தனது இதயத்தை விரிவாக்கி அவர்களுக்கு பதிலளிப்பதிலும், போதனை செய்வதிலும் விவேகத்தைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.


முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸலமி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் தும்மினார். நான் ‘யர்ஹமுக்கல்லா?’ என்று கூறினேன். உடனே மக்கள் என்னைப் பார்வையால் துளைத்தார்கள். நான் ”உங்களது தாய் உங்களை இழக்கட்டும்! என்னை இவ்வாறு பார்க்கின்றீர்களே. உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்டேன். அம்மக்கள் கரங்களால் தங்களது தொடைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் என்னை மெªனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் மெளனம் காத்தேன்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, எனது தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அதற்கு முன்னாலும் அதற்குப் பிறகும் அவர்களைப் போன்ற ஓர் அழகிய போதனையாளரை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை கடுகடுப் போடு பார்க்கவில்லை; திட்டவுமில்லை; அடிக்கவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இது தொழுகை. இதில் உலகப் பேச்சு பேசுவது முறையாகாது, தொழுகை என்பது தஸ்பீஹும், தக்பீரும், குர்ஆனை ஓதுவதும்தான்” என்றோ அல்லது இதைப் போன்ற வார்த்தைகளையோ கூறினார்கள்.

நான் கேட்டேன்: ”அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்துக்கு சமீபமானவன் (நான் சமீபத்தில்தான் இஸ்லாமை ஏற்றேன்). இப்போது அல்லாஹ்வே இஸ்லாமைத் தந்தான். எங்களில் சிலமனிதர்கள் சோதிடக்காரனிடம் செல்கிறார்கள்!” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நீர் அவர்களிடம் செல்லாதீர்.” நான், ”எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள்,”அது அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வாகும். அது அவர்களைத் தடுத்து விடவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

(அது அவர்களை தடுத்துவிட வேண்டாம் என்பதின் பொருள்: மனதில் ஏற்படும் தடுமாற்றத்தால் எந்த காரியத்தையும் நிறுத்திட வேண்டாம் என்பதே.)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கும் போது தீங்கிழைத்தவரை நேரடியாக கண்டிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இவ்வழி முறையால் அவரது உணர்வுகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும். மேலும் இவ்வழிமுறை உள்ளங்களில் கருத்துக்களை ஆழமாக பதியவைத்து, தவறுகளைக் களைவதில் வெற்றிகரமான அணுகுமுறையாகும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் ‘அம்மனிதர் இப்படிச் சொல்கிறாரே!’ என்று கூறமாட்டார்கள். மாறாக ‘சிலர் இப்படி, இப்படிக் கூறுகிறார்களே!’ என்றே கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)


வெற்றிகரமான அழைப்பாளனுக்கு வேண்டிய பண்புகளில் ஒன்று தனது பேச்சை தெளிவாக, விரிவாக எடுத்துரைப்பதாகும். முக்கியமான கருத்துக்களை பலமுறை கூறவேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை மூன்றுமுறை கூறுவார்கள். ஏதேனும் ஒரு கூட்டத்தாரிடம் வந்து ஸலாம் கூறினால் அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான பேச்சாக அமைந்திருக்கும், அதை கேட்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.” (ஸுனன் அபூதாவூத்)

මිනිසාට ඇඳුමක්!

මිනිසාට ඇඳුමක්!



සකස්කිරීම: ඉබ්නු මන්සූර්

ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හැකිය යන්න සත්‍යකි. කිතුනු මව්තුමියකගේ හෝ භික්ෂුනියකගේ හෝ ඇඳුම එකහා සමාන නොවිය හැක. නමුත් මෙම ඇඳුම් දෙකම සදාචාර සම්පන්න යැයි පැවසීම ඉතාමත් නිවැරදිය. අප මෙම ඇඳුම් සදාචාර සම්පන්න යැයි පවසන්නේ ඇයි?

අද සිදුවී හෝ සිදුවෙමින් පවතින්නේ කුමක්ද? ස්ත්‍රිය අඩුවෙන් ඇඳුම් අඳිනවිට ආගමික නායකයින් ඇතුළු සමාජයේ බහුතරය මුනිවත රකිති. මෙම භයානක නිහැඬියාව අපට හඬ නගා පවසන්නේ කුමක්ද? මුළු මහත් සමාජ ව්‍යුහයම සදාචාර සෝදාපාලුවකට ලක්වී ඇති බව නොවේද? රණස්ගල්ලේ හිමියන් රචිත ‘ලෝකෝපකාරයෙහි’ එන “ඔවාදෙනු පරහට තමා සම්මතයෙහි පිහිටා සිට” යන වදන අනුව වර්තමාන සමාජ නායකත්වය අන් අයට යහ ඔවදන් නොදී, ඔවුන්ව සදාචාරයේ මගට නොකැඳවා ඉන්නේ තමා සම්මතයේ නොමැති නිසාද?

වැඩි විස්තර සඳහා ……..

මිනිසාට ඇඳුමක්!

සත්ව ලෝකයේ ඇඳුම් අඳින්නේ මිනිසා පමණි. මිනිසා සහ සත්ව ලෝකයේ අනිකුත් සතුන් අතර ඇති වෙනස්කම් අතුරින් ප්‍රධාන එක් වෙනස්කමක් ලෙස මෙය සැලකිය හැකිය. අප පමණක් මෙසේ කරන්නේ ඇයිද කියන ප්‍රශ්නයට ලැබිය හැකි නිවැරදිම පිළිතුර වන්නේ මිනිසාට පමණක් උරුමවූ ලැජ්ජ බය මත පදනම්වූ සදාචාරය යැයි පැවසීම ඉතාමත් නිවැරදිය. එමනිසා ඇඳුම සදාචාරය හා බැඳුනු ක්‍රියාවක් ලෙස අපට ඔප්පුවන ක්‍රියාවකි. සදාචාරය හා බැඳීමක් නොමැතිකෙනාට ඇඳුම් පිලිබඳ ගැටළුවක් බොහෝවිට නොමැති අතර ඇඳුමේ ප්‍රමාණය අඩුවෙන තරමට හෝ ඇඳුම් නොමැතිවීම හෝ හොඳ යැයි සිතීමට ඉඩ ඇත. අප යහ මිනිසුන් යැයි හඳුන්වන්නේ සදාචාර සම්පන්න අයට යැයි පැවසීම ලොව ඕනෑම සමාජයක් පිළිගන්නා යථාර්තයකි. සදාචාරය සෑම දහමකම මුලික පදනම ලෙස සැලකිය හැක.

ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හැකිය යන්න සත්‍යකි. කිතුනු මව්තුමියකගේ හෝ භික්ෂුනියකගේ හෝ ඇඳුම එකහා සමාන නොවිය හැක. නමුත් මෙම ඇඳුම් දෙකම සදාචාර සම්පන්න යැයි පැවසීම ඉතාමත් නිවැරදිය. අප මෙම ඇඳුම් සදාචාර සම්පන්න යැයි පවසන්නේ ඇයි? පිරිමෙයෙකුට මෙම දෙදෙනා දෙස බලන්නට සිදුවුවහොත් ඔහුගේ සිතේ ඇතිවන්නේ කුමන ආකාරයේ හැඟීම්ද? සත්‍ය වශයෙන්ම ලිංගික හැඟීම් ඇතිවීමට ඉඩක් තිබේද? දෙදෙනාම ස්ත්‍රීන්. නමුත් මෙම ස්ත්‍රීන් දෙදෙනා දෙස බලා තම සිතේ ලිංගික උත්තේජනයක් ඇතිනොවීමට ප්‍රධාන හේතුව කුමක්ද? තම හෘදසාක්ෂියට එකඟව පැවසිය හැකි එකම සත්‍ය වන්නේ ඔවුන්ගේ සිරුර වැසෙන පරිදි ඇඳ ඇති ඇඳුම බව නොවේද? එම ඇඳුම දෙස බලනවිටම ඇතිවන්නේ ගොව්රවයක් නොවේද. එසේනම් තමන්ගේ මව, බිරිඳ, දියණිය, සහෝදරිය හෝ ඕනෑම ස්ත්‍රියක් මහමග අන් පිරිමින්ගේ සිත් අනවශ්‍ය ලෙසට නොසන්සුන් නොකොට හා එම අයගේ සිත්තුල ලිංගික හැඟීම් ඇති නොකොට සිටීමට නම් ඔවුන්ගේ ඇඳුම් සංවර වියයුතු බව අප පිළිගත යුතු නොවන්නේද?

අද සිදුවී හෝ සිදුවෙමින් පවතින්නේ කුමක්ද? ස්ත්‍රිය අඩුවෙන් ඇඳුම් අඳිනවිට ආගමික නායකයින් ඇතුළු සමාජයේ බහුතරය මුනිවත රකිති. මෙම භයානක නිහැඬියාව අපට හඬ නගා පවසන්නේ කුමක්ද? මුළු මහත් සමාජ ව්‍යුහයම සදාචාර සෝදාපාලුවකට ලක්වී ඇති බව නොවේද? රණස්ගල්ලේ හිමියන් රචිත ‘ලෝකෝපකාරයෙහි’ එන “ඔවාදෙනු පරහට තමා සම්මතයෙහි පිහිටා සිට” යන වදන අනුව වර්තමාන සමාජ නායකත්වය අන් අයට යහ ඔවදන් නොදී, ඔවුන්ව සදාචාරයේ මගට නොකැඳවා ඉන්නේ තමා සම්මතයේ නොමැති නිසාද? වඩාත් අදහාගත නොහැකි කරුණ බවට පත්වී ඇත්තේ ස්ත්‍රියක් තමන්ගේ සංස්කෘතිය අනුව සදාචාර සම්පන්න ලෙස ඇඳුම් ඇඳගෙන සමාජගත වනවිට මතුකරන්නාවූ අවලාදයන් ගැනය. මෙවන් සදාචාර විරෝදී හඬ දහමක නමින් එනවිට මුළු සමාජයම පත්වන්නේ කුමන තත්වයකටද? අසංවරකම ප්‍රගුණ කරන්නට දරන්නාවූ වැයමක් ලෙස මෙය හඳුන්වාදිය නොහැකිද? දරුවන් ඇති යහ දෙමව්පියන් මේ පිළිබඳව දක්වන ප්‍රතිචාරය කුමක්ද? කාගෙවත් සැඟවුණු න්‍යාය පත්තරේකට අනුව හෝ තවත් ශ්‍රී ලාංකික ජනවාර්ගික කොටසක් කෙරෙහි ඇති තමන්ගේ පදනම් විරිහිත වෛරය නිසා හෝ, යහ චින්තනයකින් තොරව සමාජ සදාචාරය පිරිහෙන පැත්තකට දිරිදෙන අයුරින් කටයුතු නොකළ යුතුයි කියා ඉතා නිහතමානීව අපි ඉල්ලා සිටින්නෙමු. නුතන වාණිජ සමාජය විසින් ස්ත්‍රීයව වෙළෙඳ භාන්ඩයක් බවට පත්කරතිබීම ගැන කිසිම හඬක් ඇසෙන්නේ නැත. ශරීරයෙන් 5% ක් පමණ වසාගත්තු තරුණියන්ගේ රාගය දනවන රූප රාමු වෙළෙඳ දැන්වීම්වලට යෙදීම ගැන දහම් ගැන කථා කරන්නන් මුනිවත රකිමින් රහසිගත වින්ඳනයක යෙදී සිටින්නේද කියා අසන්නට තරම් කාරණයක් බවට පත්වී ඇත. කසාය බිව්ව ගොළුවා වගේ මෙම උදවිය කටයුතු කරන්නේ ඇයි. මෙවන් රූප රාමු වලට තම මව, බිරිඳ, සහෝදරිය හෝ දියණිය ඉදිරිපත් කරන්නට අපි අකැමැති වන්නෙමු. අවාසනාවට, පිටස්තර ස්ත්‍රීන්ගේ කාමුක දර්ශන දෙස බලා මානසික වශයෙන් රෝගී වින්දනයක් ලබාගන්නට සමහරුන් හුරුවී ඇති අතර මෙම රෝගයේම කොටසක් ලෙසින් තම ශරීරය සදාචාර සම්පන්නලෙස වසාගන්නාවූ ස්ත්‍රීන්ට අවලාද නගන්නටද හුරුවී සිටිත්. සාරධර්ම හා සදාචාරයෙන් යුත් සමාජයක් ගොඩනැගීම සඳහාවූ ඉස්ලාමීය ඉගැන්වීම් ගැන විරුද්ධත්වය පාමින් ස්ත්‍රී අයිතිවාසිකම් ගැන කතාකරන්නන්ගේ සැඟවුණු අරමුණු කුමක්ද කියා දැන් පැහැදිළි වී ඇතැයි සිතන්නෙමු.

පිරිමියෙකුට තම පෙකනියේ සිට දණහිස වැසෙන පරිදි ඇඳුමක් ඇඳීම සදාචාර විරෝදී ක්‍රියාවක් ලෙස කිසිවෙක් දකීවී කියා අපි නොසිතන්නෙමු. නමුත් එම ඇඳුම ස්ත්‍රියකට කෙසේනම් සුදුසු විය හැකිද? මෙයින් පෙනෙන්නේ ස්ත්‍රී පිරිමි දෙකොටසේම ඇඳුම් සමවියහැකි නොහැකි බව නොවේද? නුතන මනෝවිද්‍යාව අපට උගන්වන්නේ පුරුෂයින්ට හා ස්ත්‍රීන්ට ලිංගික උත්තේජනය සිදුවන ආකාරයේ වෙනසක් ඇති බවය. අඩු ඇඳුමින් සැරසුණු පිරිමියෙකු දැකීමෙන් ස්ත්‍රියකගේ මනසේ ලිංගික පිබිදීමක් ඇතිවන්නේ ඉතාමත්ම අල්ප වශයෙන් බවත් ස්පර්ශය තුලින් ඇගේ හැඟීම් අවදිවීම ඉතා අධිකව සිදුවන්නක් බවත් මනෝවිද්‍යා සොයාගැනීමෙන් තොරවවුවත් අප අත්දකිනා සත්‍ය කරුණකි. අනිත් අතින් අඩු ඇඳුමින් සැරසුණු ස්ත්‍රියකගේ ශරීරය දැකීමෙන් පිරිමියෙකුගේ සිතතුළ ඇතිවන රාගික හැඟීම් ඉතාමත්ම අධික බවත් අප දන්නා සත්‍යයකි. නැවත වරක් අප පැවසිය යුතුව ඇත්තේ තමන්ගේ මව, බිරිඳ, දියණිය හෝ සොයුරිය මහමග බහුතරයකගේ රාගික හැඟීම් ඇවිස්සීමේ ආධාරකයක් බවට පත්වීම සදාචාර සම්පන්න කිසිම පිරිමියෙක් අනුමත කරන ක්‍රියාවක් නොවන බවය. නමුත් පිටස්තර ස්ත්‍රීන් එසේ තමන්ගේ රාගය ඇතිකරවන භාන්ඩයක් බවට පත්වීම අපේක්ෂාකරන පිරිමින්ද අප සමාජයේ දක්නට ලැබෙන පොදු ලක්ෂණයක් බව පවසිය යුතුව ඇත. මෙවන් රෑ දනියෙල් දවල් මිගෙල් චරිත නිසා ඇතිවී ඇති හානිය ඉමහත්ය. මනසේ මවාගත්තු හරයක් නැති මතවාදයන් ඉදිරිපත්කරමින් සමාජය නොමඟ යවන්නට යමෙක් කටයුතු කරයිනම් එය ඉතාමත්ම පහත් මෙලෙච්ච ක්‍රියාවකි.

මුස්ලිම් කාන්තාව තම ශරීරය හොඳින් වැසෙන පරිදි ඇඳුම් අඳින්නේ පිරිමින්ගේ බලපෑම් නිසා බවටද මතයක් ඇත. මෙය පැහැදිළි කිරීමක් අවශ්‍ය නොවන ඉතාමත්ම බොළඳ හා අර්ථ විරහිත අදහසකි. සදාචාර සම්පන්න ස්ත්‍රිය නිරන්තයෙන් උත්සාහකරන්නේ ලැජ්ජ බය ඇතිව යහ අයුරින් ඇඳුම් අඳින්නටය. තම ශරීරය හොඳින් වැසෙන්නට ඇඳුම් අඳින ස්ත්‍රියගේ මනස තුලත් ඇතිවන්නේ ලැජ්ජ බය මුසුවූ තමාගේ චරිතයේ පිරිසිදු භාවය පිලිබඳ හැඟීම්ය. තම ශරීරය හැකි තරම් විවෘතව තබා ගන්නට වෙර දරන අයගේ මනසේ ඇත්තේ මෙයට හාත්පසින්ම වෙනස්වූ තත්වයකි. තම ශරීරය විවෘතව තබා ගැනීමෙන් පිටස්තර දන්නා හා නොදන්නා පිරිමින්ගේ අනවශ්‍ය අවධානයට තමා ලක්වන අතර ඔවුන්ගේ ලිංගික අභිලාෂයන්ගේ ඉලක්කයක් බවටද පත්වීම වලක්වාගත නොහැකි කරුණක් වනු ඇත. මහමග පිරිමින්ගේ ආශාව පිරුණු තමා වෙත යොමුවන දෙනෙතින් යහ ස්ත්‍රීන් පත්වන්නේ ඉතාමත් අසීරු තත්ත්වයකටය. මෙවන් අනවශ්‍ය අවදානයකට වැඩිපුරම ලක්වන්නේ ශරීරය හොඳින් වසාගත්තු ස්ත්‍රීන්ද නැතිනම් අඩනිරුවතින් ශරීරයටම ඇලෙන පරිදි ඇඳුම් ඇඳගෙන මහ මග සැරිසරන ස්ත්‍රීන්ද? වැඩි අවදානය යොමුවන්නේ අඩනිරුවත් ස්ත්‍රීන් කෙරෙහි බව කිසිම සැකයක් නොමැත. මෙවැනි තත්වයන් නිසා ස්වභාවයෙන්ම ශාරීරිකව දුර්වල ස්ත්‍රිය බොහෝවිට ලිංගික බලහත්කාරකම් වලට ලක්විය හැකි ඉඩකඩ ඉතාමත්ම බහුලය. අශ්වයා පැනගියාට පසු ඉස්තාලය වසාතැබීමෙන් ඇති ඵළය කුමක්ද? හානියක් වන්නට පෙර නිසි පියවර ගැනීම වැදගත්බව මෙයින් පැහැදිළි නොවන්නේද?

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதில் ஆர்வமுடையவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

“எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.” பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை விடுபவரை வீட்டுடன் சேர்த்து எரித்துவிட நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

“எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு, பிறகு தொழுகைக்கான “அதான்’ சொல்ல ஏவி, பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன் சேர்த்து எரித்திட விரும்புகிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பிறகும் இமாம் ஸயீதுப்னுல் முஸய்யிப் (ரழி) போன்றவர்களைக் காண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும் பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப் பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது (ரழி) போன்ற பல உதாரணங்களைக் கண்டிருக்கிறது. “அதான்’ சப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சி யடைந்தார்கள்.

உபை இப்னு கஅப்(ரழி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!” என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: “நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது இல்லங்கள் மஸ்ஜிதிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதுந் நபவியைச் சுற்றியிருந்த இடங்கள் காலியானபோது பனூ ஸலமா குலத்தவர்கள் தங்களது வீடுகளை மஸ்ஜிதுக்கு அருகில் மாற்றிக்கொள்ள விரும்பினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தபோது அவர்களிடம், “நீங்கள் மஸ்ஜிதுக்கு அருகில் வீடுகளை மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேனே” என்றார்கள். அவர்கள் “ஆம் இறைத்தூதரே! நாங்கள் விரும்பினோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “பனூ ஸலமாவே! உங்கள் (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன, (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன” என்று கூறினார்கள். பனூ ஸலமா குலத்தினர் “மஸ்ஜிதின் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இக்கருத்துள்ள ஹதீஸ் அனஸ் (ரழி) அவர்களின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

பஜ்ரு மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி (ஸல்) அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்.

1) உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

2) அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நபில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார். அதிகமாக நபில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.

“எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி)

ஒர் அடியானை அல்லாஹ் நேசித்தால் வானம், பூமியில் உள்ளவர்களும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்களின் அறிவிப்பு பொருத்தமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒர் அடியானை நேசித்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்; நீங்களும் நேசிக்க வேண்டும்” என்று கூறுகிறான். அவர் நேசிக்கிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை நேசிக்கிறான்; நீங்களும் நேசம் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். பின்பு அந்த அங்கீகாரம் பூமிக்கும் இறக்கப்படுகிறது. அவ்வாறே ஒர் அடியானை அல்லாஹ் வெறுத்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன மனிதனை வெறுக்கிறேன்; நீங்களும் அவனை வெறுத்துவிடுங்கள்” என்று கூறுகிறான். அவர் வெறுப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதனை வெறுக்கிறான்; நீங்களும் வெறுத்துவிடுங்கள்!” என்று கூறுகிறார். வானத்தில் உள்ளவர்களும் வெறுக்கிறார்கள். பிறகு அவன் மீதான வெறுப்பு பூமிக்கு இறக்கப்படுகிறது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குறித்து “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு தொழுகிறீர்கள்? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே” என்று கேட்டபோது “நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா?” என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது தொழுகையை அழகிய முறையில் அதன் நிபந்தனைகளைப் பூரணப்படுத்தி நிறைவேற்ற ஆர்வம்கொள்ள வேண்டும். சிந்தனைகள் சிதறி மனம் குழம்பிய நிலையில் நிற்பது, உட்காருவது, அசைவது போன்ற செயல்கள் மட்டுமே தொழுகை அல்ல. முஸ்லிம் தொழுகையை முடித்தவுடன் உலகின் பொருளை அதிகமதிகம் தேடும் வேட்கையில் பள்ளியிலிருந்து விரண்டு வெளியேறிச் சென்றுவிடக்கூடாது. மாறாக, தொழுகைக்குப் பின் பரிசுத்த நபிமொழி வலியுறுத்தும் தஸ்பீஹ், திக்ரு மற்றும் பாவமன்னிப்புக் கோருவதில் ஈடுபடவேண்டும்.

தொழுகைக்குப் பின் இதயத்தின் ஆழத்தில் எழும் இறை அச்சத்துடன் இம்மை மறுமை நலன்களை அருளுமாறும் தனது செயல்களைச் சீராக்கும்படியும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போதுதான் அந்தத் தொழுகை, ஆன்மா பரிசுத்தமாவதற்கும் இதயம் மென்மை பெறவும் காரணமாக அமையும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது.” (ஸுனனுன் நஸய்யி)

இறையச்சமுள்ள தொழுகையாளிகள் அபயமளிக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் துன்பம் எற்பட்டால் திடுக்கிடவோ, நன்மைகளை அடைந்தால் தடுத்து வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதையே பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால் அவனை ஒரு தீங்கு அடைந்தால் (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை(ப் பிறருக்கும் பகிர்ந்தளிக்காது) தடுத்துக் கொள்கிறான். அயினும் தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்அன் 70:19-22)


,

ரகசிய ஞானம்?

ரகசிய ஞானம்?

சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபிصلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். உண்மைதானா? சமீபகாலமாக முரீது கொடுப்போர் ரகசிய ஞானம் என்று கூறிப் பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

நான் நபிصلى الله عليه وسلم அவர்களிடமிருந்து இரண்டு (கல்விப்)பைகளை அறிந்தேன். அதில் ஒன்றை (மக்கள் மத்தியில்) வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான் வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை வெட்டப்பட்டுவிடும் என்று அபூஹுறைரா
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்(புகாரி)

புஹாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த ஹதீஸை மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு சரியானதென்று சிலருக்குத் தோன்றலாம்.

என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.(புகாரி) இது நபிமொழி. நபிصلى الله عليه وسلم அவர்களிடமிருந்து கற்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைரா
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி மறைத்திருப்பார்கள்?

எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே அறிவிக்கின்றார்கள். கல்வியை மறைப்பது கடுங்குற்றம் என்பதை நன்றாகவே அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உணர்ந்தே வைத்திருந்தனர், என்பதும் இதிலுருந்து தெளிவாகின்றது. மார்க்கம் சம்மந்தப்பட்ட ஒரு பகுதியை நிச்சயம் அவர்கள் மறைத்திருக்க மட்டார்கள் என்று எவரும் உணரலாம்.

கல்வியில் ஒரு பகுதியை மறைக்க அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே பின் வருமாறு கூறவும் செய்கின்றனர். இந்த வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)

மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம்.

நான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன?

பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை அபூஹுரைரா
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மக்களிடம் கூறவில்லை. யா அல்லாஹ்! ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டின் துவக்கத்தை விட்டும், சிருவர்களின் ஆட்சிக்காலத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று அவர்கள் அடிக்கடி பிரார்த்தனை செய்து வந்தது இதற்கு போதுமான ஆதாரமாகும். இதிலிருந்து அவர்கள் மக்கள் மத்தியில் வைக்காது மறைத்தது மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரமுடியும் (பத்ஹுல்பாரி)

ரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள் என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.

அவர்கள் கருத்துப்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால் அந்த ரகசிய ஞானத்தை அபூஹுரைரா
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட அந்த ரகசியம் ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் தான் யாரிடமும் கூறாமல் சென்று விட்டார்களே!

ரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அது அபூஹுரரா رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம். மனிதர்களை வழி கெடுப்பதற்காக என்றே இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அத்தனை தரீக்காக்களும், அலி
رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கலிடம் போய் முடிவடைகின்றன. என்று தரீக்கா வாதிகள் ஒரே குரலில் சொல்லி வருகின்றனர். இது முழுக்க முழுக்க ஷியாக்களின் கொள்கை. இன்று மட்டுமல்ல அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் பெயரால் இப்படிக் கூறப்பட்டது. அதை அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே மறுத்தும் விடுகின்றார்கள்.

குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ? என்று நான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ(என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை,என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்:அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ
புகாரி)

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களே தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமானرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு நபிصلى الله عليه وسلم
அவர்கள் அறிவித்துக் கொடுத்திருந்தனர். அதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தனர்.

இது போன்ற பிரச்சனைகளில் சிலவற்றைத் தான் சிலரிடம் ரகசியமாக சொல்லி இருந்தனர். இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.



அந்நஜாத்

விரிவடையும் பிரபஞ்சம்

விரிவடையும் பிரபஞ்சம்



وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ “மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)

நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.

எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.

“………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.”
“உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.

இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அது இந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.” ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.

ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.

سَنُرِيْهِمْ اَيَتِنَافِىالآْفَاقِ وَفيِْ اَنْفُسِهمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقَُّ اَوَلَمْ يَكْفِ بِربِّكَ اَنَّهُ عَلَىَكُلِّ شَيْءٍ شَهِيْدٌ “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?” (41:53)

வியப்பும் மலைப்பும் தோன்ற விரிந்து காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.

Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்

அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்

அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்





அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.


கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR)

(மேலிருக்கும் படத்தில் இடதுபக்கமிருக்கும்) அணுஉலையில், யுரேனியம் வேதிப்பொருள் குழாய்போன்ற கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு குளிர்ந்த நீருக்குள் மூழ்கவைக்கப்பட்டிருக்கும். யுரேனியத்திலிருந்து வெளியாகும் அணுசக்தியானது வெப்பத்தை உருவாக்கி, அதனைச்சுற்றியுள்ள குளிர்ந்தநீரை ஆவியாக்கும். அந்த ஆவியானது மின் உற்பத்தி செய்யும் டர்பைன் கருவியை இயக்கும்/சுழலச்செய்து மின் உற்பத்தியை தொடங்கும்/தூண்டும். டர்பைனை சுழலச்செய்தபின், அந்த நீராவியானது ஒரு கண்டென்சரின் உதவியுடன் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகிவிடும். இந்த நீரானது மீண்டும் யுரேனியம் இருக்கும் அணு உலைக்குள் செலுத்தப்படும். இப்படியொரு சுழற்சியினால், யுரேனியத்திலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்!

நான் சொன்ன விளக்கத்தை பின்வரும் காணொளியில தெளிவா காமிக்கிறாங்க, பாருங்க…..



இப்போ ஜப்பானின் ஃபுகுஷிமாவில் இருக்கும் அணு உலைகள்ல என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா பார்ப்போம் வாங்க…..


வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறிய இரண்டு அணு உலைகளின் மேற்கூரைகள்!

அடிப்படையில, ஃபுகுஷிமாவின் அணு உலைகள் வயதானவை. அதனால் அவை வேலை செய்யாமல் நிறுத்திவிட்டார்கள். வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும், அணு உலைகளுக்குள்ளே வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால் வெப்பமும், நீராவியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்! யுரேனியத்தை பாதுகாக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே இருக்கும்! ஆகவே, அணு உலைகளை நிறுத்தியபின்னும் பல மாதங்கள் அவற்றை தொடர்ந்து தண்ணீர் சுழற்சிமூலம் குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!

இல்லையென்றால், தண்ணீரின் அளவு குறைய குறைய, யுரேனியம் வெளியே வந்து, சிறுக சிறுக உருக ஆரம்பித்துவிடும்! அப்படி உருகினால் கதிரியக்கம், வெப்பம், நீராவியினால் உருவாகும் அழுத்தம் இப்படி எல்லாம் சேர்ந்து, அணு உலைகள் வெடித்துச் சிதறி, ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவதோடு, கதிரியக்கத்தையும் சுற்றுச்சூழலுக்குள் பரப்பிவிடும்! கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடித்ததைப்போல!!

ஆனால், கடந்த 12.3.2011 சனிக்கிழமையன்று ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததாக உங்களுக்கு தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது, ஃபுகுஷிமாவில் இருக்கும் அணுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள அணு உலைகளை பாதுக்காக்கும் மேற்கூரைதான்! அது ஏன் வெடிச்சதுன்னா, அணு உலையை நீர்சுழற்சி மூலம் குளிர்விக்க பயன்படுத்தப்படும் எந்திரம் வேலை செய்ய மின்சாரம் கொடுக்கும் ஜெனரேட்டர் செயலிழந்து போனதுனாலதான்! அதுக்குக் காரணம், சுனாமி ஏற்பட்டவுடன் அணு மின் உற்பத்தி நிலையத்து தடுப்புச்சுவரை உடைத்து உள்ளே புகுந்த கடல்நீரானது, அணு உலையை குளிர்விக்கும் நீரை சுழற்சிசெய்ய உதவும் ஜெனரேட்டரை மூழ்கடித்து செயலிழக்கச் செய்துவிட்டது. அது செயலிழந்தபின் மின்கல உதவியுடன் மீண்டும் அந்த எந்திரம் செயல்படுத்தப்பட்டாலும், சிறுது நேரத்துக்குப்பின் மின்கல மின்சாரம் தீர்ந்துபோகவே, மீண்டும் குளிர்விக்கும் எந்திரம் நின்றுபோனது!

இதற்கு மாற்று ஏற்பாடாக, அணு உலைகளை குளிர்விக்க கடல் நீரை உட்செலுத்தினார்கள். கடல் நீர் உட்செலுத்தப்பட்டதால், அணு உலையின் உள்ளே இருக்கும் நீர் கொதித்து நீராவி அதிகமானது. அது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படாததால், அணு உலையினுள்ளே காற்றழுத்தம் அதிகமானது. இதனால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் இருந்ததால், அந்த நீராவியை வெளியில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு அளவிலான கதிரியக்க வேதியற் பொருட்களான சீசியம் 137 மற்றும் அயோடின் 121 ஆகியவை கலந்த நீராவியை வெளியில் திறந்துவிட்ட பின்னும் அணு உலையினுள் காற்றழுத்தம் குறைந்தபாடில்லை. விளைவு, காற்றழுத்தம் தாங்காமல் அணு உலையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது (சனிக்கிழமை)! இது நடந்தது, ஃபுகுஷிமாவின் தாய்இச்சி என்னும் அணுஉலை 1-ல்!

இந்த நீராவியை திறந்துவிடும் முன்னர்தான், மக்களின் பாதுகாப்பு கருதி அணுமின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 12 மைல் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வெளியேறினார்கள்!

இதனையடுத்து, ஒரு நாள் கழித்து 14.3.2011 திங்கட்கிழமையான இன்று அணு உலை 1-ல் ஏற்பட்ட அதே பிரச்சினை தாய்இச்சி 3 அல்லது அணு உலை 3-லும் ஏற்படவே, அதனுடைய மேற்கூரையும் வெடித்துச் சிதறியது. இதுதான் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த, இரண்டாவதாக வெடித்ததாக சொல்லப்பட்ட அணு உலை?!

எங்கே செல்லும் இந்த பாதை?

முக்கியமாக, இந்த அணு உலையின் கூரைகள் வெடித்ததற்கு, லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. யுரேனியம் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்வரைதான் அது பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து மின்சாரம் மட்டும் நமக்கு கிடைக்கும். ஆனால் தண்ணீரின் அளவு குறைந்து, மூழ்கியிருக்க வேண்டிய யுரேனியம் வெளியில் நீட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டால், அழிவுகாலம் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்!

ஏன்னா, தண்ணீருக்கு வெளியே வந்துவிட்டால் யுரேனியம் வேகமாக உருகத் தொடங்கிவிடும். அப்படி அது உருகினால், அதிலிருந்து வரும் வேதியல் மாற்றத்தினால் அணுவை விட சிறிய நுண்ணனு துகள்களும், அளவுக்கதிகமான வெப்பமும், அணுசக்தியும், கதிரியக்க வேதியற்பொருட்களும் வெளியேறும். ஒரு கட்டத்தில் அணுகுண்டு போல வெடித்துச்சிதறி, சுற்றியுள்ள பல கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களையும் ஏற்படுத்தி, தாவர-விலங்குகளையும் அழித்துவிடும்! அதுமட்டுமில்லாம, பாதிக்கப்பட்ட நிலப்பரப்பில் பல வருஷங்களுக்கு உயிர்கள் வளராது, மக்கள் புற்றுநோய்களால் பல சந்ததிகளுக்கு தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்!

லேசாக உருகத்தொடங்கிவிட்ட யுரேனியத்தை எப்படி மேலும் உருகாமல் பாதுகாப்பது என்பது குறித்து மிகுந்த சிரத்தையுடன் முயற்சி செய்து வருகிறார்கள் நாசா உள்ளிட்ட உலக மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள், அணுமின் உற்பத்தி அலுவலர்கள், பணியாளர்கள் எல்லோரும்!

by padmahari

ஈமானை பாழாக்கும் செயல்கள்

Peace TV live

Wednesday, December 28, 2011

பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்

பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்

அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற)
எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116)
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து
என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான்
எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப
இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து
விடுகிறேன். நான் எதை யும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள்
செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை
உனக்கு வழங் குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி
சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம்
பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும்
பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு
தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி
விடு வதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள்
குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.
அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங் களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார் களே!
அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம் பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்
அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப் பவனும்
கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை
இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்க ளுக்கு
அருகில் இருக்கிறது. (7:56)
அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும்
என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது,
அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது
போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும்
மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக்
கட்டளையிடுகின்றான். (17:23, 98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும்
துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
(27:62, 39:44, 2:255)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன்  என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு
அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (7:194, 13:14)
அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள
தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை
எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும்
பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக்
கோருகிறார்கள்.
சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர்
“”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். (46:5)
சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது.
சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு
கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (10:107)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்வது “ஷிர்க்”
நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். அதை அவனுக்கே செய்ய
வேண்டும்.
சிலர் “கப்ருக்களுக்கு விளக்கேற்றுகிறோம்; பத்தி கொளுத்துகிறோம்; காணிக்கை
செலுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது “ஷிர்க்
நேர்ச்சையும் வணக்கமே என்பதற்குப் பின் வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் : (76:7, 2:270)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்
அல்லாஹ் கூறுகின்றான் (108:2)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “”அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை
அல்லாஹ் சபிக்கின்றான்” (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது குற்றம்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது குற்றம்.
சிலர் வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந் தால் அங்குள்ள
ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதற் காகப் பிராணிகளை
அறுத்துப் பலியிடுகிறார் கள். இதுவும் “ஷிர்க்” ஆகும்.
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க்
; அல்லாஹ் கூறுகின்றான் : 9:31
அதி இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதிக்
காட்டியபோது “கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், சன்னியாசிகளையும் வணங்கவில்லையே’
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை
பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள்.
அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள், விலக்கப்பட்டதாக
ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, இதுதான் கிறித்தவர்கள் தங்களது பாதிரிகளுக்கும்
துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
இந்த 9:31 இறைக் கட்டளை மற்றும் ஹதீஸ் படி அல்லாமா, ஷேக், ஹஜ்ரத் என்று நம்பி அவர்
கள் கூறும் சுய விளக்கங்களை அப்படியே எடுத்து நடப்பதும் “”ஷிர்க்’ ஆகும்.
மேலும் இம்மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில் ஹராம்,
ஹலால் என ஃபத்வா கொடுப்பது 42:21 இறைவாக்குப்படி தங்களையே அல்லாஹ்வாக்கிக் கொள்ளும்
மிகப் பெரும் ஷிர்க் ஆகும்.
“தற்கொலை’ செய்து கொள்வது “ஷிர்க்’ அல்லாஹ் கூறுகிறான். (4:29, 4:30)
நமக்கு உயிர் கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே. எனவே ஒருவன் தற்கொலை
செய்து கொள்வது, அல்லாஹ்விற் குரிய அதிகாரத்தை எடுத்துக் கொள்வது போல் ஆகும். எனவே
“தற்கொலை செய்து கொள்வதும் “இணைவைத்தலை’ சேர்ந்ததேயாகும்.
அல்லாஹ் அனுமதிக்காதவற்றில் பலன்களைத் தேடுவது “ஷிர்க்”
சிலர் தாயத்து, கயிறு, வளையம் போன்றவற்றை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல்
தடுத்துக் கொள்வதற்கும் அணிவது “ஷிர்க்்கில்’ உட்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்.
(12:106, 10:107)
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு இது என்ன?
என்று வினவினார்கள். அதற்கு அம் மனிதர் வாஹினாவின்(கழுத்தில் கையில் உண்டாகும்
நோயின்) காரணமாக அணிந்துள்ளேன்” என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்) அவர்கள்
அவரை நோக்கி “நீர் அதை கழற்றி விடும், இது உமக்கு பலகீனத்தைத் தான் அதிகப்படுத்தும்.
இந் நிலையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று
கூறினார்கள்.
இம்ரான் இப்னு ஹுசைன்(ரழி) நூல் : முஸ்னத், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாவீஸை தொங்கவிட்டா(அணிந்தா)ரோ அவர் “ஷிர்க்’
செய்தவராவார்.” (நூல்: அஹமது)
பகட்டுக்காக வணங்குவது “ஷிர்க்”
நற்செயல்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மனத்தூய்மையடன் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பகட்டுக்காக (பிறர் பார்த்து புகழ வேண்டுமென்பதற் காக) செய்வது
“ஷிர்க்”ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் : (4:142)
நபி(ஸல்) கூறினார்கள்:
பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக எவன்
வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான். (புகாரி, முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழ் மொழிகளையும் நாடிச்
செய்வாரேயானால் அவரின் அந்த நற்செயல் வீணானதே!
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இணை வைப்பவர்களின் இணையை விட்டு
நான் முற்றிலும் தேவையற் றவன். எவன் தனது நற்செயலில் என்னுடன் பிறரை இணைத்துக்
கொண்டானோ அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன். (முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வுக்காகத் தொடங்குகிறார். பிறகு அவரது உள்ளத்தில் பகட்டு
எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவர்அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி
செய்வாரெனில் அவரது நற்செயல் வீணாகிவிடாது.
ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும் போது அதைத் தடுப்பதற்கு முயற்சி செய்யாமலிருந்தால்
அந்த நற்செயல் வீணாகிவிடும்.
சகுனம் பார்ப்பது “ஷிர்க்”
அறியாமைக்கால அரபியர்கள் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நாடினால் ஒரு பறவையை பிடித்து
அதைப் பறக்க விடுவார்கள். அது வலப் பக்கமாகப் பறந்தால் அதை நல்ல சகுனமாக நம்பி
அந்தக் காரியத்தைச் செய்வார்கள். இடப் பக்கம் பறந்தால் அதைத் துர்ச்சகுணம் என நம்பி
அக்காரியத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: (7:131)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகுனம் பார்ப்பது “ஷிர்க்’ ஆகும். (அஹ்மது, திர்மிதி)
சகுனம் பார்ப்பவனும் யாருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதோ அவனும், சோதிடம்
பார்ப்பவனும் யாருக்காகச் சோதிடம் பார்க்கப்படுகிறதோ அவனும் சூனியம் செய்பவனும் எவன்
சார்பாக சூனியம் செய்யப்படுகிறதோ அவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்” (திர்மிதி)
“”துர்ச்சகுனம் ஒருவனை அவனது காரியத்தை விட்டு தடுத்து விட்டால் அவன் இணை வைத்து
விட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அதனைக் கேட்ட) தோழர்கள், “”அல்லாஹ்வின்
தூதரே! அதற்கான பரிகாரம் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக; வலா தய்ர இல்லா தய்ருக, வலா இலாஹ ஙைருக்க”
(அல்லாஹ்வே! உனது நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை, உனது சகுன மின்றி
வேறந்தச் சகுனமும் இல்லை; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை) என்று
சொல்லி விடும்” எனக் கூறி னார்கள் (முஸ்னது அஹ்மது)
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது “ஷிர்க்”
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் எதன் மீதும் சத்தியம் செய்வான். ஆனால், நாம்
அல்லாஹ்வைத் தவிர வேறு எதன்மீதும் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
உங்கள் மூதாதையர் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறான். எவராவது சத்தியம் செய்வ
தாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி
இருக்கட்டும்.(புகாரி)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவன்
நிச்ச யமாக ஷிர்க்” இணை வைத்து விட்டான். (முஸ்னது அஹ்மது)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாத், உஸ்ஸாவின் மீது சத்தியம் செய்தவர் லா இலாஹ
இல்லல்லாஹ்’ என்று கூறிவிடட்டும். (புகாரி)
ஷிர்க்கை ஏற்படுத்தும் சில வாக்கியங்கள்.
அல்லாஹ்வாலும் உங்களாலும் இது எனக்குக் கிடைத்தது,
காலத்தைக் குறை கூறிப் பேசுவதும் குற்றம்.
அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர் கள்
கூறினார்கள், “”ஆதமின் மகன் எனக்கு நோவினை தருகிறான். அவன் காலத்தைத் திட்டுகிறான்.
நானே காலத்தைப் படைத்தவன்; எனது கையில்தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே
இரவையும் பகலையும் மாறி வரச் செய்கிறேன்”.
உதாரணமாக: இது என் கெட்ட காலம்
வரம்பு மீறிப் புகழாதீர்.
சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லா ஹ்வின் தூதரே! எங்களில் மிகச் சிறந்தவரே!
எங்களில் சிறந்தவரின் மகனாரே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எனக்
கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “”மக்களே உங்களின் சொற்களைக் கூறுங்கள்.
ஆனால் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள். நான் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை.
அவனின் தூதர்; எனக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பை விட என்னை உயர்த்துவதை நான்
விரும்பவில்லை” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: நஸாயீ
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகப்படுத்திப்
புகழ்வதைப் போல் என்னை நீங்களும் மிகப்படுத்திப் புகழாதீர்கள்.
ஆதாரம்:புகாரீ, திர்மிதி.
நானொரு அடியானே! (என்னை) அல்லாஹ் வின் அடிமை என்றும், அவனின் தூதர் என்றும்
கூறுங்கள். நீங்கள் மிகைப்படுத்துவதை அஞ்சி (எச்சரிக்கையாக இருந்து) கொள்ளுங்கள்.
இப்படி மிகைப்படுத்தியது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது” என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்:ரஜீன்
ஆளுமையில் இணைவைத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாக நம்புவது, அல்லாஹ்வுக்குப் பெற்றோர், கணவன்,
மனைவி, மக்கள் இருப்பதாக நம்புவது “ஷிர்க்’ ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்:
(12:39,40, 112:3)
மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவத் திலோ அல்லது ஏனையபடைப்புகளின் வடிவத் திலோ
இறைவன் இவ்வுலகில் தோன்றுவதாக (அவதாரம் எடுப்பதாக) நம்புவது “ஷிர்க்”
அல்லாஹ் கூறுகின்றான்: (20:5, 32:4)
அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான். ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் நன்கறிந்த
வனாகயிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்: 32:5, 6:56, 6:103)
போன்ற குர்ஆன் வசனமும் சான்று. பூமியில் நடப்பவற்றை அறிவதற்கு அவன் அவதாரம் எடுக்க
வேண்டிய அவசியமும் இல்லை, தேவை யுமில்லை. அதையே குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
(6:80)
இறைவன் தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்ற கொள்கை இங்கு செல்லாது; ஏனென்றால்
இறைவன், யாவற்றையும் படைத்து பின் “அர்ஷின்’ மீது அமைந்து விட்டதாக குர்ஆன்
கூறுகிறது. ஆனால் அவனின் சக்தி அனைத்திலும் பரவி, ஊடுருவிச் செல்லுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: 32:6
எனவே இறைவன் (எதன் வடிவிலும்) அவதாரம் எடுத்து பூமியில் தோன்ற வேண்டுமென்பதற்கு
அவசியமில்லை. அவ்வாறு நடப்பதும் கிடையாது.
தன்மைகளில் இணை வைத்தல்
இறைவனுக்கு எவ்விதம் யாருடைய துணையுமின்றி அனைத்தையும், அறிகின்ற, பார்க்கின்ற,
கேட்கின்ற ஆற்றல் உண்டோ, அத்தகைய ஆற்றல்(தன்மை) மற்றவர்களுக்கும் உண்டு என நம்புவது
“இணை வைத்தல்’ ஆகும்.
அல்லாஹ் கூறுகின்றான். 27:65, 32:6, 6:59, 6:73, 11:123, 20:7, 6:50, 3:44, 39:46
போன்ற பல குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அறிகின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உரியது
என்பதற்கு சான்று பகர்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான். 20:46, 42:11
எனவே இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அனைத்தையும் அறிகின்ற, பார்க்கின்ற, கேட் கின்ற
ஆற்றல் கிடையாது. உண்டு என நினைப் பதும், நம்புவதும் “ஷிர்க்’ ஆகும்.

M.S அஹமது அலி ஆவடி, சென்னை