Wednesday, August 22, 2012

தொழுகையும், ஜக்காத்தும்

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?

Sunday, August 5, 2012

பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்


பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்









கோவை எஸ். அய்யூப்

,
©2012, copyright Dharulhuda

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34
எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
”எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.
”இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.
38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான். இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35
தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
(20:121).அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார். இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்
அன்று — அந்த மரத்தின் கனி,
இன்று — மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.
படிப்பினைகள்
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.
படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.
இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
1 — உலகம் முடியும் காலம் வரை,
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)
3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்

ஒரே சமுதாயம்

Post image for ஒரே சமுதாயம்

ஒரே சமுதாயம்

காலங்கள் தோறும் ஒரே சமுதாயமயமாவதற்கான அனைத்துக் கருத்தியலையும் அல்லாஹ் அருளியிருக்க, ஒரே சமுதாய மயமாவதற்கான சூழல்களை அல்லாஹ் அமைத்துத் தந்திருக்க மக்களே! அதை ஏன் தகர்த்தெறிந்து வருகிறீர்கள்? ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
நிச்சயமாக உங்களின் இந்தச் சமுதாயம் (உம்ம(த்)து(க்)கும்) ஒரே ஒரு (ஒன்றுபட்ட) சமுதாயமே! (உம்மத்தவ் வாஹிதா)!
அல்குர்ஆன்: அல்அன்பியா:21:92, அல்முஃமினூன் 23:52
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் எப்போது, எப்படிச் சாத்தியமாகும்? அதற்குரிய அல்லாஹ் வின் வழிக்காட்டல் ஏதும் உண்டா?
மேலும் நானே உங்கள் அதிபதி(அனரப்பு (க்)கும்). எனவே நீங்கள் எனக்கே அடிமையாகி விடுங்கள். (ஃபஃபுதூனீ) அல்குர்ஆன்:21:92
அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுதல்:
படைப்பினங்கள் முழுவாழ்விலும் அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவதன் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். இதுதான் படைப்பின் இலட்சியமும் கூட, அல்லாஹ் ஆகிய- நான் ஜின், மனித இனங்களை எனக்கு முற்றிலும் அடிமையாகி விடவேண்டும். (இல்லாலியஃபுதூன்) என்பதற்காகவேயன்றி, வேறு எதற்காகவும் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: அஸ்ஸாரியாத்: 51:56)
நபி ஆதம்(அலை) முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் காலம் வரை அல்லது அதற்கு சற்று முன் வரை பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த அனைத்து மக்களின் ஒரே மார்க்கம் இஸ்லாம். அம்மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் (முஸ்லிமீன்) என்ற கூட்டமைப்பில் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமாய்த் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தவராகவே (உம்மத்தவ் வாஹிதாவாக) இருந்தனர்.
(அல்குர்ஆன்: அப்பகறா: 2:213)
மேலும் (தொடக்கததில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே (உம்மத்தவ் வாஹிதாவாக) இருந்தனர். அல்குர்ஆன்: யூனுஸ்: 10:19
துவக்கக்கால மானுட ஒருமைப்பாடு:
மனித சமுதாயம் தோன்றிய துவக்கக் காலம்! அதிலிருந்து சுமார் பல நூறு ஆண்டுகள்! அது வரை மக்கள் ஒரே கொள்கையேற்று ஒழுகினர். இஸ்லாத்தை வாழ்வில் பிரதிபலிக்கும் ஒன்று பட்ட முஸ்லிம் சமுதாயமாய் முஸ்லிம்கள் உயர்ந்தும் நிமிர்ந்தும் நின்றனர். துவக்கக் கால முஸ்லிம்கள் ஏற்றிருந்த ஒரே கொள்கை அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வுக்கு மட்டுமே முற்றிலும் அடிமை என்பதை முழு வாழ்விலும் பிரதிபலித்து அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியவர்கள்; அல்லாஹ்வின் ஒருமையை நிலைநிறுத்தியவர்கள். வாழ்வால் அல்லாஹ்வின் ஒருமைக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள். மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஒருமையை வாழ்வியலாக்கி ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு உதாரண புருஷர்களானார்கள்.
இஸ்லாம் மனிதர்களைப் பிரிப்பதற்காக, மனிதர்களைப் பிளப்பதற்காக, மனிதர்களை பிரிவுக்குள் சிக்க வைப்பதற்காக, மனிதர்களை பிரிவுக்குள் தள்ளி விடுவதற்காக மானுடத்துக்கு அல்லாஹ்வால் அருளப்படவில்லை. அன்றி, மானுடத்தை ஒருங்கிணைப்பதற்காக, மானுடத்தை ஒருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் அருளிய வாழ்வியல் நெறிதான் இஸ்லாம்!
இறை வாழ்வியலால் எண்பித்துக் காட்டிய துவக்கக்கால ஒன்றுபட்ட சமுதாய முஸ்லிம்கள் மீது என்றென்றும் அல்லாஹ்வின் அருள் மழைப் பொழிந்து கொண்டேயிருக்கட்டும்; அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிட்டிக் கொண்டேயிருக்கட்டும். மானுட ஒருமைப்பாடுப் பற்றிப் பேசும்போது சாடும் சாடுநர்கள், மானுட ஒருமைப்பாடு ஒருபக்கம் இருக்கட்டும்; முஸ்லிம்களை ஒன்று படுத்தவும் முடியாது. முஸ்லிம்கள் ஒன்றுபடவும் மாட்டார்கள்; என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் மார்க்க அறிஞர்கள், மார்க்க மேதைகள் இவர்களைக் கண்மூடித்தனமாய்ப் பின் தொடரும் கண்மூடிப் பக்தகோடிகள் கூர்ந்த மதிக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும் உரித்தாக்குவது யாதெனில், துவக்க கால பல நூற்றாண்டு முஸ்லிம்கள் நிலைநிறுத்தியது ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே! துவக்கக் காலத்தில் ஒருமைப்பாடு கண்ட முஸ்லிம்கள் தான் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் முன் உதாரணங்கள். மானுட ஒருமைப்பாட்டின் சின்னங்களும் துவக்கக்கால முஸ்லிம்கள்தான். மனிதர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம்கள் என்ற நிலையில் மானுட ஒருமைப்பாட்டை இஸ்லாம் சாத்தியமாக்கிக் காட்டியது. இதுதான் அல்லாஹ் மானுடத்திற்கருளிய வாழ்வியல் நெறி இஸ்லாத்தின் தனித்துவம்! இஸ்லாத்தின் அதிசயக்கத்தக்க அரிய சாதனையும் கூட. இதை யாரும் எடுத்துக் காட்டாதது ஏன்?
மார்க்க இருட்டடிப்பு:
நடுநிலைக் கண்ணோட்டம், பரந்த மனப்பான்மை, தொலை நோக்குடன் இஸ்லாத்தை இஸ்லாமியக் கண்ணால் கூர்ந்து நோக்குவோர் மட்டுமே இப்பேருண்மையை உணர, உணர்த்த முடியும். பிரிவுக்குள் பிளவுக்குள் சிக்கிக் கொண்டு பிரிதல், பிரித்தல் கறுப்புக் கண்ணாடிக்குள் இஸ்லாம் காட்டும் ஒருமைப்பாடு இருட்டாக்கப்பட்டு விடுகிறது. அதற்குள் இஸ்லாமிய ஒருமைப்பாட்டு ஒளியைப் பாய்ச்சுவது கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினமாகி விடுகிறது.
படைப்பின ஒருமைப்பாட்டில் கறுப்படித்தல் கொடுமை எனில், அதைக் காட்டிலும் கொடுமை மானுட ஒருமைப்பாட்டுக்குக் கறுப்படித்தல்! இவை எல்லாவற்றையும் விட கொடுமை, முஸ்லிம்கள் ஒருமைப்பாட்டுக்குக் கறுப்படித்தல்! எல்லாக் கொடுமையிலும் கடுங்கொடுமை முஸ்லிம்கள் ஒற்றுமைக்காக எடுக்கப்படும் அரிய முயற்சிகளையும் நொறுக்கி விடுதல்! இப்படி மார்க்கத்தை இருட்டடிப்புச் செய்தல், எத்துணைக் கடுங் கண்டனத்திற்குரியது என்றால்.
நாம் இறக்கி அருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் அறநூலில் எடுத்துரைத்த பின்னரும், எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான். மேலும் சபிப்போர் அனைவரும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: அல்பகரா: 2:159)
பிரிவு, பிளவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியோருக்கு மேற்கண்ட அல்லாஹ்வின் கண்டனமும், எச்சரிக்கையும் செவிடன் காதில் ஊதிய சங்கே! அதனால்தான் இஸ்லாம் படைப்பின ஒருமைப் பாட்டோடு மானுட ஒருமைப்பாட்டையும் நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டிய வாழ்வியல் நெறி. என்று எடுத்துக் காட்டும்போது, முஸ்லிம் அறிவு ஜீவிகளாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை. பாவம், பாமர மக்கள்! என்ன செய்ய முடியும்?
அல்லாஹ்வின் பொருத்தம்:
காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, அல்லாஹ்விற்கு முற்றிலும் சரணடைந்து, அல்லாஹ்விற்கஞ்சி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் சாதாரண சாமான்யர், இஸ்லாம் படைப்பின ஒருமைப்பாட்டுடன் மானுட ஒருமைப்பாடு கண்ட மார்க்கம் எனத் தெளிவாக உணரும்போது, அப்படி உணர்ந்ததை அல்லாஹ்வின் நல்லருளால் இயன்றவரை மற்றவர்க்கு உணர்த்திக் கொண்டிருக்கும் போது, மார்க்க அறிஞர்களுக்கும், மேதைகளுக்கும் இது புரியாத புதிரா? நிச்சயம் இல்லை. அவர்களில் ஒருசிலர் நீங்களாய் இப்பேருண்மை எல்லோர்க்கும் புலனாகி இருக்கும். எனினும், அதை அவர்கள் வெளிப்படுத்த முன்வரவில்லை.
அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது நிர்பந்தத்தால் நிர்பந்திக்கப்பட்டு பிரிவு பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டதால் அல்லது விழுந்து விட்டதால் உணர்ந்த உண்மையை வெளிப்படுத்தவும் முடியவில்லை; வெளிப்படுத்த முன்வரவும் இல்லை; தடுமாறுகிறார்கள்; தத்தளிக்கிறர்கள்; செய்வதறியாது திகைக்கிறார்கள். குறிப்பாய் அத்தகையவர்களுக்கும் பொதுவாய் அனைவரின் சிந்தனைக்கும் ஈண்டு நபி(ஸல்) அவர்களின் வழிக்காட்டுதல் ஒன்றை நினைவூட்டுதல் பொதுப் பாடமும், படிப்பினையாகவும் இருக்கும். நோக்கம் தவறிய நல்லறங்களால் விளையும் பாதகம்: நல்லறங்களாய் இஸ்லாம் காட்டித் தந்தவை; நோக்கம் தவறாகி விட்டது. அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, அல்லாஹ்வின் பெயரால் செய்திருக்க வேண்டிய நல்லறங்களை, உலகியல்க் குறியாக்கிச் செய்ததால் நரகிற்குச் செல்லும் இழிநிலை.
கல்லாதவர்க்குக் கல்விக் கொடுத்த கல்வியாளர், இல்லாதோர்க்கு பொருள் ஈந்த ஈகையாளர்/கொடையாளர், மார்க்கத்துக்காக இன்னுயிர் நீத்த வீரத்தியாகி இம்மூன்று சாராரும் அவர், அவர்க்கு உரிய நல்லறங்களைச் செய்து இம்மையில் மக்கள் புகழை வாரிக் கொண்டனர். விளைவு, மறுமையில் இழப்பிற்குள்ளாகி, முகம் குப்புற, தலைகீழாக நரகில் தள்ளப்படுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல் கருத்துச் சுருக்கம், தகவலாளர்: ஆபூஹுரைரா(ரழி), பதிவாளர்கள்: முஸ்லிம், திர்மிதி.
மார்க்கம் அனுமதித்த மக்களுக்குப் பலன் அளிக்கும் நல்லறங்கள் செய்தோர்க்கு மறுமையில் நரகம். காரணம் திசை தவறிய நோக்கம்; அனைவரும் அறிந்ததே! இதைப் பிரத்யேகமாய்க் காட்ட வேண்டியதில்லை. ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டு விட்டது. இது எல்லோர் நினைவை விட்டும் எப்போதும் அகலாதிருக்க வேண்டும். (செயல்கள் பிரம்மாண்டமானதா? அற்பமானதா? என்பது பொருட்டன்று) அப்போதுதான் செயல்களின் நோக்கத்தைத் தூயதாக்கி அல்லாஹ்வுக்காகச் செய்ய முடியும்.
உள்ளத்துக்குள் அல்லாஹ்வை அஞ்சி அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி காரியங்கள் ஆற்ற முடியும். அந்தச் செயல்கள் அல்லாஹ் அருளியதா? நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்வியல் வழிக்காட்டலுக்கு உட்பட்டதா? என்று ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட முடியும். சாதாரண செயல்களையும் கூர்ந்தமதியுடன், கூடுதல் கவனத்துடன் சிரத்தை எடுத்துச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் பணித்துள்ளது. அப்போதுதான் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்வின் அங்கீகாரத்தையும், அல்லாஹ்விடம் நற்பலனையும் பெற்றுத் தரும்.
உள்ளம் நடுநடுங்கி இருக்குமா?
நோக்கம் தவறிய நல்லறங்கள் செய்தோர் நரகில் தள்ளப்படுவதை உணரும்போது, அல்லாஹ்வின் அச்சம் உள்ளோர், உள்ளம் நடு நடுங்கி விடும். ஒரு சிலர் உள்ளங்களாவது நடு நடுங்கி இருக்குமா? அல்லாஹ்வின் அச்சத்தால் …? ஐயம் தான். மேற்காட்டிய நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதலில் இருந்து மிகப் பெரும்பான்மையோர், குறிப்பாய் மார்க்க அறிஞர்கள் பாடமும், படிப்பினையும் பெறத் தவறியது ஏன்?
இதற்கே இப்படி எனில், அல்லாஹ் கடுமையாகத் தடுத்திருந்தும், இம்மையின் இலாபம் கருதி பணம், பட்டம், பதவி, பகட்டு, ரசிகர்கள், சிஷ்யர்களுக்குத் தினம் சின்னத்திரை தரிசனம், கண்மூடிப் பக்த கோடிகளின் கூழைக் கும்பிடுகள், உள்ளம் குளிர வைக்கும் பாராட்டுக்கள்; பதிலுக்குப் பீடத்தின் பக்த கோடிகளை விஞ்சும் கண்மூடிப  பக்தகோடிகளின் மெய்சிலிர்க்க, மெய் மறக்கவைக்கும், ஆசீர்வாதங்கள்.
பீடத்தின் உரை ஓர் அரங்க நாடகம்:
மேடை “மைக்’ கூட உரைக் கேட்டு உருகி விடும். சொக்கி விடும்… கேட்க வேண்டுமா? கண்மூடி பக்தகோடிகள் மது குடித்துப் போதையில் தள்ளாடுகிறவர்களைத் தோற்கடித்து விடுவார்கள். போதையூட்டப்பட்ட உரையில் கண்மூடிப்பக்தக் கோடிகள் தங்களை முழுமையாக இழந்து விடும்போது, பீடம் காத்திருந்த நேரம் வந்துவிட. நேர்வழி, வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் பிரிவு சார்ந்த மார்க்க முரண்கள் மார்க்கமாய், உண்மை மார்க்கம் பிரிவுகளின் கூடாரங்களாய்ச் சித்தரிக்கப்படும்… பிரிவுக் கூடாரங்கள் மேல் போர்த்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பிரிவுகள், பிளவுகள் மறைக்கப்படும் ரஸவாத உரை அரங்கேற்றப்படும். கேட்கும் கண்மூடிப் பக்தகோடிகள், அவர்களுக்கு நேரிடையாக வஹி வந்துவிட்டது போன்ற பிரம்மையில் துள்ளிக் குதிப்பார்கள்.
அஸ்தஃபிருல்லாஹ்.
கேட்கும் கண்மூடிப் பக்தகோடிகளுக்கு உரையாளர் சொல்வதெல்லாம் வேதவாக்கு; அவரின் அண்ட, ஆகாசப் புளுகுகள் எல்லாம் அறிவுரை; இதுபோன்ற உரையாளர்கள் முன் கோயபல்ஸ் மண் கவ்வுவது சர்வ நிச்சயம். அங்கு சினிமாவும், சின்னத்திரை நாடகங்களும் வெட்கித் தலைக் குனிந்து விடும். அரசியல்வாதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி விடுவார்கள். பீடத்தின் நடிப்பும் கண்மூடிப் பக்தகோடிகளின் உணர்ச்சிப் பெருக்கும் சின்னத் திரையின் கண் கொள்ளாக் காட்சி. எல்லாம் எதற்காக?
பிரிக்கக் கூடாததைப் பிளத்தல்:
*பிரிதல், பிரித்தல்
* பிளவுபடல், பிளவுப்படுத்துதல்
* தேவைக்கேற்பப் புதுப்புது பிரிவுகளையும், அமைப்புகளையும், ஜமாஅத்களையும் தோற்றுவித்தல்.
* விரும்பும்போது விரும்புவோருடன் அவைகளில் அங்கம் வகிப்பது, வெறுக்கும்போது வெறுப்போர் விடுத்து விரும்பியோருடன் வெளியேறுவது. இது பிரிவுகள் சார்ந்த போதனைகள்; ஒரு போதும் உண்மை மார்க்கத்தை உணர்த்தாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
ஓ! இப்போதுதான் ஓர் உண்மை வெளிச்சம் பெறுகிறது. அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் கடுங்கண்டனத்தோடு மிகக் கடுமையாகத் தடுத்திருந்தும் புதுப்புதுப் பிரிவுகள், புதுப்புது இயக்கங்கள், புதுப்புது அமைப்புகள், புதுப்புது ஜமாஅத்கள், பிரிவுசார் மவ்லவிகள் அங்கீகாரத்தில் புற்றீசல்களாய்ப் புறப்பட்டு வந்து கொண்டே இருப்பது ஏன் என்று?
வெளிரங்கத்தில் மார்க்கம் காரணமாக்கப்பட்டு பிரிவதும், அதற்காக அப்பாவி முஸ்லிம்களைப் பிளந்தெடுப்பதும் மெகாமாபதகம் தான். உள்ரங்கத்தில் தனி நபர்கள் மீது கொள்ளும் சுய விருப்பு வெறுப்பு, சுயச்சார்பு சுயப்பகை, கசப்பு, காழ்ப்பு கொஞ்சம் கொஞ்சமாய் உச்ச வெறியாக மாறும்போது, அரும் பாடுபட்டு உருவாக்கி, உரமிட்டு வளர்த்த பிரிவு இயக்கம், அமைப்பு, ஜமாஅத், துச்சமாய்த் தூக்கி எறியப்படுகிறது. கண்மூடிப் பக்தர்களுடன் அவைகளை விட்டு சீற்றத்துடன் சட்டென்று வெறியுடன் வெளியேறுவது முற்றுப்பெறாத தொடர் கதையாகிக் கொண்டிருப்பது ஏன்?
தாராளமயமாக்கப்பட்ட இயக்க, அமைப்புத் தாவல்:
பீடத்துக்கு வேண்டாதவைகள், வேண்டாதோரைத் தூற்றென்று தூற்றித் தீர்த்தல்! அவசியப்படின் நேரிடையாக/மறைமுகமாக வேண்டாதோர் பழித்தீர்க்கப்படல்! ஒதுக்கப்பட்ட கண்மூடிப் பக்தகோடிகள் பலர், பீடம் உருவாக்கிய முன்னாள் பிரிவுகள், இயக்கங்கள், அமைப்புக்கள், ஜமாஅத்களில் உடன் தஞ்சமைடந்து விடுவர். அவைகள் பிடிக்காதோர், புதுப்புது இயக்கங்கள், அமைப்புக்கள், ஜமாஅத்கள் காண்பதும் அன்றாட வழக்கமாகி விட்டது. இம்மை நலனுக்காக,
* பிரிவுகளுக்குள் தஞ்சமடைதல்
* சார்ந்துள்ள பிரிவுகளுக்காக வக்காலத்து வாங்குதல்,
* சார்ந்துள்ள பிரிவுகளுக்கு ஆதரவாகவும், மற்ற பிரிவுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல்,
* சார்ந்துள்ள பிரிவு கொழுக்க நிதி திரட்டுதல், நிதி கொடுத்தல்,
* பிரிவுகளை நிலைநாட்ட அயராது பாடுபடுதல் இத்யாதி… இத்யாதி….
இன்னும் பிரிவுகள் கொழுப்பதற்காக செய்வது எதுவாயிருப்பினும்… அனைத்தும் மெகாபாதகமே! இதை மற்றவர்களுக்கு உணர்த்துதல் அவசியம். உணர்த்துனர்கள் யார்? மார்க்கம் கற்றோர்….
உணர்த்தினால்தான் மார்க்கம் கற்றோரும் உணர முடியுமா? அவசியமில்லையே! மார்க்கம் கற்றோரில் மிகப் பெரும்பான்மை ஏதோ ஓர் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டிருப்பது சிக்கிக் கொண்டிருப்பது ஏன்? நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் பிரிவுகள் கொழுத்துக் கொண்டிருப்பதால் அல்லாஹ் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று அவர்கள் மனப்பாலா குடிக்கிறார்கள்?
மறுமையில் தானே அப்போது பார்த்துக் கொள்ளலாம்… அசட்டுத் துணிச்சலா? எந்த புகலும் கூறித் தப்பிக்க முடியாதே! மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் நினைவூட்டும் எச்சரிக்கை!
காண்க : அல்குர்ஆன் : யூனூஸ்: 10:19
முஹிப்புல் இஸ்லாம்

2011 Baithul Zakath

Baithul Zakath

2011 Baithul Zakaath

."The likeness of those who spend their wealth in Allah's way is as the likeness of a grain which grows seven ears, in every ear a hundred grains. Allah gives increase manifold to whom He will. And Allah is All-Sufficient for His creatures' needs, All-Knower." [Soorah al-Baqarah, 261] 




Purify your wealth
Send your Zakath in favor of
    Dharul huda Trust
      A/c # 1090 1000 4126
Hatton National Bank- Aluthgama
Zakaath Committee 
  •   
  •  
  •  
  •  
  •  
Tel: 0094345686001
 


©2012, copyright Dharulhuda