Tuesday, January 24, 2012

සතුරන් විසින් පවා ඇගයීමට ලක්වූ එම උතුම්වූ චරිතය කවුද?



   

සතුරන් විසින් පවා ඇගයීමට ලක්වූ එම උතුම්වූ චරිතය කවුද?

   
ඉබ්නු අබ්බාස් (රලි) තුමා මෙසේ විසතර කරයි: (කුරෙයිෂ්වරැන්ගේ ප‍්‍රධානියා වන) අබූ සුෆ්යාන් බින් හර්බ් සමග හා කුරෙයිෂ් මිථ්‍යා  දෘෂ්ටිකයින් සමග නබි (සල්) තුමාණෝ (හුදෙයිබියා නමි ස්ථානයේදී) ගිවිසුමක් අත්සන් කළේය. ඒ අවස්ථාවේදී (කුරෙයිෂ්වරැන්ගේ සමහරැන්) ඔටුවන් මත තවලම් ව්‍යාපාරිකයන් වශයෙන් සිරියා දේශයට ගොස් සිටියහ.
 (රෝමයේ එවකට රජ තුමා වූ) හර්කියුලිස්, (Hercules) (ෆලස්තීනයේ) බයිතුල් මුකද්දස් නම් මස්ජිදයෙහි ලැගුම් ගෙන සිටි ස්ථානයට එම කුරෙයිෂ් වෙළ‍ඳ ව්‍යාපාරික සමූහයේ සාමාජිකයෙකු වශයෙන් ගොස් සිටි අබූ සුෆ්යාන්ව කැටුව  එන ලෙසට පණිවුඩකරැවන් පිරිසක් පිටත් කර හැරියේය. එම පණිවුඩකරැවන් අබූ සුෆ්යාන් වෙත ගොස්. රජතුමා රෝමයේ රාජ්‍යය නියෝජිත පිරිස අසුන්ගෙන සිටි රාජසභාවට ඔහුව කැඳවනු ලැබූ අතර තම භාෂා පරිවර්තකයාවද කැඳවූයේය.
අබූ සුෆ්යාන් මේ සම්බන්ධව විස්තර කරන විට රජතුමා (අපගෙන්) තමන්ව අල්ලාහ්ගේ දූතයා වශයෙන් පවසන එම පුද්ගලයාට ඔබගෙන් ඉතාමත් සමීප ඥාතියා කවරෙක්දැ?යි විමසුවේය. (එවිට) එතුමාණන්ට ඉතාමත් සමීප ඥාතියා මම වන්නේමි යි කීවෙමි. එවලේම රජතුමා (තම නිළධාරීන් වෙත අණ කරමින්) ඔහුව මා වෙත කැඳවාගෙන එනු. ඔහු සමග පැමිණ සිටින අයද මා අසලට කැඳවාගෙන විත් ඔහුට පිටුපසින් නතර කරනු යි අණ කළේය.
පසුව තම භාෂා පරිවර්තකයා වෙත මා එම පුද්ගලයා පිළිබඳව  (අබූ සුෆ්යාන් වන) මොහුගෙන්  ප‍්‍රශ්නකරන්නෙමි. (එවිට යම් විදිහකින්) මොහු බොරැ කීවහොත් එය මා වෙත දැනුම් දිය යුතුයි ඔහු සමග පැමිණ සිටින අය වෙත පරිවර්තනය කර කියනු යි අණ කළේය . මා බොරැ කීවේ යැයි මොවුන් කියාවී යැයි සැකයක් මා තුළ නොවූයේ නම් හිමි මත සත්තකින්ම! නබි (සල්) තුමාණන් සමිබන්ධයෙන් බොරැම කියා ඇත්තෙමි.
(රජ තුමා හා අබූ සුෆ්යාන් අතර පැවැත්වුනු සාකච්ඡාව:)
රජතුමා:  ඔබලා අතරින් ඔහුගේ කුලය කෙබුඳු ද?
අබූ සුෆ්යාන්: ඔහු අප අතරින් ඉතාමත් උසස් කුළයට අයත් කෙනෙකි.
රජතුමා: මොහුට පෙර ඔබලා අතුරින් කවුරැන් හෝ මෙවැනි තර්කයක් ඉදිරිපත් කර ඇත්තේද?.
අබූ සුෆ්යාන්:  නැත.
රජතුමා: මොහුගේ මුතුන් මිත්තන්ගෙන් කවුරැන් හෝ පෙර රජවරැන් වශයෙන් සිටියෝද?
අබූ සුෆ්යාන්:  නැත.
රජතුමා: ඔහුව අනුගමනය කරන්නන් ජනයා අතුරින් උසස් අයද? නැතහොත් සාමාන්‍යය අයද?
අබූ සුෆ්යාන්:  ජනතාව අතුරින්  සාමාන්‍යය අය.
රජතුමා: ඔහුව අනුගමනය කරන්නන් වැඩි වන්නෝද? නැතහොත් අඩුවන්නෝද?
අබූ සුෆ්යාන්:  ඔවුන් වැඩි වෙමින් පවතින්නොය්.
රජතුමා: ඔහුගේ ධර්මයට ඇතුළු වූ පසු ඒ ගැන සෑහීමකට පත්නොවී කිසිවකු හෝ ධර්මයෙන් පිටව ගොස් ඇත්ද?
අබූ සුෆ්යාන්:  නැත.
රජතුමා: ඔහු මෙසේ තර්ක කිරීමට පෙර ඔහු බොරැ කියා ඇතැයි ඔබ කවදා හෝ සැක කර ඇත්තේද?.
අබූ සුෆ්යාන්:  නැත.
රජතුමා: ඔහු පොරොන්දු කඩ කර ඇත්තෙද?.
අබූ සුෆ්යාන්:  (මෙතෙක්) නැතැයි කියා දැන් අපි ඔහු සමග ගිවිසුමක් කර ඇත්තෙමු. එහිදී ඔහු කෙසේ හැසිරෙන්නේදැයි අපි නොදනිමුයි කීවෙමි. ඒ අවස්ථාවේදී නබි (සල්) තුමන් කෙරෙහි අඩු ලුහුඬු කමක් දැක්වීමට ඒ වචනය හැර වෙන කිසිම වචනයක් මගේ පිළිතුරෙහි ඇතුලු කිරීමට මට කිසිම අවස්ථාවක් එළඹුනේ නැත!.
රජතුමා: ඔහු සමග ඔබලා යුද්ධ කර ඇත්තේද?.
අබූ සුෆ්යාන්:  එසේය.
රජතුමා: ඔහු සමග ඔබලා දියත් කළ සටන් අවසානයේ කෙසේවූයේද?
අබූ සුෆ්යාන්:  අප හා ඔවුන් අතර ජය පරාජය මාරැවෙන් මාරැවට ලැබුණි. සමහර අවස්ථාවේදී ඔහු අපිව පරදවා ජයග‍්‍රහණය අත් කර ගෙන ඇත. සමහර අවස්ථාවලදී ඔහුව පරදවා අපි ජයග‍්‍රහණය අත් කර ගෙන ඇත.
රජතුමා: ඔහු ඔබලාට කුමක් නම් දේශනා කරන්නේද?.
අබූ සුෆ්යාන්:  අල්ලාහ් පමණක් අදහනු. ඔහුට කිසිවක් සමානයන් වශයෙන් නොතබනු. ඔබගේ මුතුන් මිත්තන් පැවසූ සියල්ල අත් හරිනු යි දේශනා කරන්නේය. සලාතය ඉටු කරනු. සත්‍යය කථා කරනු. නිර්මලත්වයට (එනම් පතිවත ආරක්ෂා කරන තත්ත්වයට) පත්වනු. ඥාතීන් සමග එකමුතුව යහපත් සබ‍ඳතාවයකින් යුක්තව සිටීම වැනි හොඳ ගති ගුණ ගැන නියෝග කරන්නේය.
රජතුමා තමන්ගේ භාෂා පරිවර්තකයා වෙත පරිවර්තනය කිරීමට පැවසූ දැය නම්: ඔහුගේ කුළය සම්බන්ධව ඔබගෙන් විමසුවෙමි. එයට ඔබ, ඔබගෙන් ඔහු ඉතාමත් උසස් කුළයට අයත් කෙනෙකි යයි කීවෙහිය. (අල්ලාහ්ගේ දූතවරැන්) සෑම දෙනාම එසේමය. ඔවුන්ගේ සමූහයන්ගෙන් උසස් කුළයෙන්ම පහළ කර ඇත.
 ඔබගෙන් කවුරැන් හෝ මෙම තර්කය මීට පෙර ඉදිරිපත් කර ඇත්තේදැ?යි විමසුවෙමි. එයට ඔබ නැතැයි කීවෙහිය. මොහුට පෙර කවුරැන් හෝ මෙම තර්කය ඉදිරිපත් කර සිටියේ නම් මීට පෙර ඉදිරිපත් කරමින් තිබූ තර්කයන් අනුගමනය කරමින්ම මොහුද කරන්නේය යැයි මා කියා ඇත්තෙමි.
මොහුගේ මුතුන් මිත්තන්ගෙන් කවුරැන් හෝ රජවරැන් වශයෙන් සිටියේදැ?යි මා ඔබගෙන් විමසූ විට නැතැයි ඔබ කීවෙහිය. මොහුගේ කවුරැන් හෝ රජ කෙනෙකු වශයෙන් සිටියේ නම් තම මුතුන් මිත්තෙන්ගේ රාජධානිය අත්පත් කරගැනීමට කැමැත්තක්  දක්වන මිනිසෙකු යයි මොහුව මා හඳුන්වා දී ඇත්තෙමි.
මෙම තර්කය ඉදිරිපත් කිරීමට පෙර ඔහු බොරැ කියන්නෙකු වශයෙන් සැක පහළ කර ඇත්තේදැ?යි ඔබගෙන් විමසූ විට එයට ඔබට නැතැයි පිළිතුරැ දුන්නෙහිය. ජනතාව වෙත බොරැ කීමට හැකියාවක් නැති කෙනෙකු සිය හිමි කෙරෙහි බොරැ කීමට ඉදිරිපත් නොවනු ඇතැයි මා තරයේ විශ්වාසකරමි.
ජනතාවගෙන් උසස් අය ඔහුව අනුගමනය කරන්නේද? නැතහොත් සාමාන්‍යය  අය අනුගමනය කරන්නේදැ?යි විමසුවෙමි. සාමාන්‍යය ජනතාවම ඔහුව අනුගමනය කරන්නේය යයි කීවෙහිය. එවැනි අයමය අල්ලාහ්ගේ දූතවරැන්ව අනුගමනය කරන්නන් වශයෙන් සිටියේ.
ඔහුව අනුගමනය කරන්නන් වැඩි වෙමින් පවතින්නේද? නැතහොත් අඩුවෙමින් පවතින්නේදැ?යි ඔබගෙන් විමසුවෙමි. ඔවුන් වැඩි වෙමින් පවතින්නේය යයි ඔබ පිළිතුරැ දුන්නෙහිය. අල්ලාහ් පිළිබ‍ඳවූ  විශ්වාසය සම්පූර්ණ වනතුරැ එසේ (වැඩිවෙමින්) පවතිනු ඇත.
ඔහුගේ ධර්මයට තුළට ඇතුලු වූ පසු කවුරැන් හෝ එම ධර්මය කෙරෙහි සෑහීමට පත් නොවී ධර්මය වෙනස් කර ඇත්තේදැ?යි ඔබගෙන් විමසුවෙමි. එයට ඔබට නැතැයි පිළිතුරැ දුන්නෙහිය. එසේය සිත් තුළට ඇතුලු වූ අල්ලාහ් කෙරෙහි ඇති විශ්වාසයෙහි සළකුණු (ස්ථීරවන්නේ).
ඔහු (කවදා හෝ) පොරොන්දු කඩ කර ඇත්තේදැ?යි ඔබගෙන් විමසු විට නැතැයි කීවෙහිය. අල්ලාහ්ගේ දූතවරැන් එසේ පොරොන්දු කඩ කරන්නේ නැත.
ඔහු ඔබට කුමක් නියෝග කරන්නේදැ?යි ඔබගෙන් විමසුවෙමි. අල්ලාහ්වම ඇදහිය යුතු යයිද ඔහුට කිසිවක් සමාන නොකළ යුතු යයිද ඔහු ඔබට නියෝග කරන බවත් පිළිම වන්දනාවෙන් ඔබව වැළැක්වූ බවත් සලාතය, සත්‍යය, නිර්මලත්වය ආදී දැය ඔබට ඔහු නියෝග කරන්නේය යැයි ඔබ කීවෙහිය. ඔබ කී සියල්ල සත්‍යය නම් (යම් කාලයකදී) මගේ දෙපා යට ඇති මෙම ස්ථානය ද ඔහු පාලනය කරනු ඇත.
 (මෙවැනි) දුතවරයෙකු (ඉතා ඉක්මනින්) පහළ වන බව මා කලින්ම දැන සිටියෙමි. නමුත් ඔහු (අරාබිවරැන් වන) ඔබගෙන් පහළ වනු ඇතැයි මා සිතුවේ නැත. ඔහුව ගොස් හමු වන මාර්ගය මා දැනුවත්ව සිටියේ නම් කොතරම් දුෂ්කර විඳ දරාගෙන හෝ ඔහුව මුණගැසී ඇත්තෙමි. (මේ අවස්ථාවේදී) මා ඔහු සමීපයෙහි සිටියේ නම් ඔහුගේ පාදයන් සෝදා හරින්නෙමි.
බුස්රාවෙහි ආණ්ඩුකාර තුමා මාර්ගයෙන් රජතුමාට දිහ්යා අතේ නබි (සල්) තුමන් එවා තිබූ ලිපිය තමන්ට දෙන ලෙසට රජ තුමා අණකළේය. ආණ්ඩුකාර තුමා එය රජතුමා වෙත බාරදුන්නේය. රජතුමා එය කියවා බලන්නට විය. එම ලිපියෙහි:
අසීමිත දයාළුවන්තයා හා අපරිමිත කරැණාවන්තයා අල්ලාහ්ගේ නාමයෙනි.
අල්ලාහ්ගේ දාසයා හා දූතවරයාවූ මුහම්මද් විසින් රෝමයේ පාලක හර්කියුලිස්ට, (Hercules) ලියා දන්වන වග නම්, යහ මග අනුගමනය කරන්නන් කෙරෙහි ශාන්තිය අත් වේවා! යහපත් ජීවන සැලැස්ම වන ඉස්ලාම් ධර්මය වැළඳ ගන්නා ලෙස ඔබට මා ආරාධනා කරන්නෙමි! ඔබ ඉස්ලාම් ධර්මය පිළගන්න! ඔබ එමගින් සුරක්ෂිත වන්නෙහුය! අල්ලාහ් ඔබට  ප‍්‍රතිඵල දෙගුණයක් වශයෙන් දෙනු ඇත. මෙම ආරාධනාව ඔබ ප‍්‍රතික්ෂේප කළහොත් (ඔබගේ) රටේ පුරවැසියන්ගේ පව්ද ඔබ මතට වැටෙනු ඇත.
“පුස්තක ලද් ජනයිනි! අප හා ඔබලා අතර පොදුවූ එකඟත්වයකට පැමිණෙනු, අල්ලාහ් හැර වෙන කිසිවෙකුට යාඥා නොකරමු, ඔහුට කිසිවක් සමාන නොකරමු, අල්ලාහ් හැර අප අතුරින් සමහරැන් තවත් සමහරැන්ව දේවත්වයෙහිලා නොසළකමු. (මෙම පොදු එකඟත්වය පිළිනොගෙන) ඔබලා ප‍්‍රතික්ෂේප කරන්නේ නම් අපි (ඒකීය දෙවියන් අල්ලාහ්ට යටත් පහත්වූ) මුස්ලිම්වරැන් යැයි ඔබලා සාක්ෂි දරනු”! යනුවෙන් එහි සඳහන්ව තිබුනි.
රජ තුමා තමන් කිව යුතුව තිබූ සියල්ල දේශණයක් මගින්  කියා නිම කර නබි (සල්) තුමන් එවූ ලිපිය කියවා නිම කළ වහාම එහි කෑකෝ ගැසීමද කළබලයක්ද උස් හඬින් කතා කිරීමද වැනි මහත් කලබැගෑනියක් රාජ සභාවේ ඇති විය. අපිවද එතැනින් පිටමං කරනු ලැබුවෙමු.
එවිට මා සමග පැමිණී අය වෙත රෝමවරැන්ගේ රජු ඔහුව දැක බියවීමට තරම් මුහම්මද් තුමාණන්ගේ කාර්්‍යය කෙතරම් වැදගත් වූයේදයත්, මෙවිට සෑම දෙයක්ම අභිබවා එය ඉස්මතු වී ඇතැ යි කීවෙමි. (එතැන් සිට) එතුමන් ජයග‍්‍රහණය කරන්නේය යයි මාගේ විශ්වාසය ස්ථීරවන්නට විය. අවසානයේදී අල්ලාහ් විසින් මා තුළ ද ඉස්ලාම් ධර්මය (ආලෝකය) ඇතුළු කරන ලදී. (මූලාශ‍්‍රය:  බුහාරි).
හුදෙයිබියා නම් ගිවිසුමක් පිළිබඳව පුවතෙහි ආරම්භයේම සඳහන්වෙයි. එය සිදුවූයේ හිජ්රි 6 වැනි වසරේය. හුදෙයිබියාස නම් ස්ථානයෙහි එය අත්සන් තැබීම නිසා එම නමින්ම එය ප‍්‍රචලිත විය.
අබූ සුෆ්යාන් (රලි) තුමන් ඉස්ලාම් දහම වැළඳ ගත්තේ හිජ්රි 8 වසරේ මක්කාව ජයග‍්‍රහණය කිරීමෙන් පසුවය.
එවකට බලවත් අධිරාජ්‍යයක් වූ රෝමානු රාජ්‍යය නායකයාට ඉස්ලාම් දහම වෙත විවෘත ඇරයුමක් කිරීමට තරම් නබි තුමන් ශ්‍රේෂ්ඨ හා බලවත් රාජ්‍යය නායකයකු විය.
මෙම සිදුවීම සිදුවන අවස්ථාවෙහි අබූ සුෆ්යාන් මුහම්මද් නබි (සල්) තුමන්ගේ ප‍්‍රකට හතුරෙකු වශයෙන් සිටියද එතුමන්ගේ අවංකභව, නිර්මලත්වය, සත්‍යතාවය, විශ්වාසනීය භව පිළිගනිමින් ඇගයීමට තරම් එතුමන් උතුම් චරිතයක් විය. එතුමන්ගේ ප‍්‍රකට හතුරන් පවා එතුමන්ව ඉතා ශ්‍රේෂ්ඨවූ නිර්මල වරිතයක් බව පිළිගත්හ. ඉහත සඳහන් පුවත එයට එක් නිදසුනක් පමණි.
සකස් කිරීම: අබූ අස්මා
Thanks to- www.yayuthumaga.com

Saturday, January 14, 2012

Tamil Quran - Surat Al-Qiyāmah (The Resurrection) - سورة القيامة



بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
لا أُقسِمُ بِيَومِ القِيٰمَةِ ﴿١﴾
(1)கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
  وَلا أُقسِمُ بِالنَّفسِ اللَّوّامَةِ ﴿٢﴾
(2)நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 
أَيَحسَبُ الإِنسٰنُ أَلَّن نَجمَعَ عِظامَهُ ﴿٣﴾
(3) (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
بَلىٰ قٰدِرينَ عَلىٰ أَن نُسَوِّىَ بَنانَهُ ﴿٤﴾
(4)அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். 
بَل يُريدُ الإِنسٰنُ لِيَفجُرَ أَمامَهُ ﴿٥﴾
(5)எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.  يَسـَٔلُ أَيّانَ يَومُ القِيٰمَةِ ﴿٦﴾
(6)"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். 
فَإِذا بَرِقَ البَصَرُ ﴿٧﴾
(7)ஆகவே, பார்வையும் மழுங்கி- 
وَخَسَفَ القَمَرُ ﴿٨﴾
(8)சந்திரன் ஒளியும் மங்கி-
  وَجُمِعَ الشَّمسُ وَالقَمَرُ ﴿٩﴾
(9)சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . 
يَقولُ الإِنسٰنُ يَومَئِذٍ أَينَ المَفَرُّ ﴿١٠﴾
(10)அந்நாளில் "(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். 
كَلّا لا وَزَرَ ﴿١١﴾
(11)"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). 
إِلىٰ رَبِّكَ يَومَئِذٍ المُستَقَرُّ ﴿١٢﴾
(12) அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. 
يُنَبَّؤُا۟ الإِنسٰنُ يَومَئِذٍ بِما قَدَّمَ وَأَخَّرَ ﴿١٣﴾
(13)அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். 
بَلِ الإِنسٰنُ عَلىٰ نَفسِهِ بَصيرَةٌ ﴿١٤﴾
(14)எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். 
وَلَو أَلقىٰ مَعاذيرَهُ﴿١٥﴾
(15)அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
لا تُحَرِّك بِهِ لِسانَكَ لِتَعجَلَ بِهِ ﴿١٦﴾
(16)(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
إِنَّ عَلَينا جَمعَهُ وَقُرءانَهُ ﴿١٧﴾
(17)நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. 
فَإِذا قَرَأنٰهُ فَاتَّبِع قُرءانَهُ﴿١٨﴾
(18)எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
ثُمَّ إِنَّ عَلَينا بَيانَهُ ﴿١٩﴾
(19)பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. 
كَلّا بَل تُحِبّونَ العاجِلَةَ﴿٢٠﴾
(20)எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
  وَتَذَرونَ الءاخِرَةَ ﴿٢١﴾
(21)ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
وُجوهٌ يَومَئِذٍ ناضِرَةٌ ﴿٢٢﴾
(22)அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
إِلىٰ رَبِّها ناظِرَةٌ ﴿٢٣﴾
(23)தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
وَوُجوهٌ يَومَئِذٍ باسِرَةٌ ﴿٢٤﴾
(24)ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
تَظُنُّ أَن يُفعَلَ بِها فاقِرَةٌ ﴿٢٥﴾
(25)இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். 
كَلّا إِذا بَلَغَتِ التَّراقِىَ﴿٢٦﴾
(26)அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், 
وَقيلَ مَن ۜ راقٍ﴿٢٧﴾
(27)"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
وَظَنَّ أَنَّهُ الفِراقُ ﴿٢٨﴾
(28)ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
وَالتَفَّتِ السّاقُ بِالسّاقِ ﴿٢٩﴾
(29)இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
إِلىٰ رَبِّكَ يَومَئِذٍ المَساقُ ﴿٣٠﴾
(30)உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
فَلا صَدَّقَ وَلا صَلّىٰ ﴿٣١﴾
(31)ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. 
وَلٰكِن كَذَّبَ وَتَوَلّىٰ﴿٣٢﴾
(32)ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
ثُمَّ ذَهَبَ إِلىٰ أَهلِهِ يَتَمَطّىٰ ﴿٣٣﴾
(33)பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். 
أَولىٰ لَكَ فَأَولىٰ﴿٣٤﴾
(34)கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ثُمَّ أَولىٰ لَكَ فَأَولىٰ ﴿٣٥﴾
(35)பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்
أَيَحسَبُ الإِنسٰنُ أَن يُترَكَ سُدًى ﴿٣٦﴾
(36)வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
أَلَم يَكُ نُطفَةً مِن مَنِىٍّ يُمنىٰ ﴿٣٧﴾
(37)(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّىٰ ﴿٣٨﴾
(38)பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
فَجَعَلَ مِنهُ الزَّوجَينِ الذَّكَرَ وَالأُنثىٰ ﴿٣٩﴾
(39)பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
أَلَيسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحۦِىَ المَوتىٰ ﴿٤٠﴾
(40) (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

©2012, copyright Dharulhuda
span class=

Thursday, January 12, 2012

''மத உணர்வுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம்''

''மத உணர்வுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம்'' 

'மத உணர்வுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம்'' குறித்த விவாதத்தில் பிரிட்டனின் மிகவும் பிரபல்யமான பல்கலைக்கழகம் ஒன்று அகப்பட்டிருக்கிறது.


பேஸ்புக் பக்கத்தில் இருக்கின்ற முகமது நபியின் படத்தை அகற்றுமாறு யு சி எல் என அழைக்கப்படும் யூனிவர்சிட்டி கொலிஜ் ஒப் லண்டனின் ( லண்டன் பல்கலைக்கழகம்) நாத்தீக மாணவர் அமைப்பு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு இதுவரை அது மறுப்புக் கூறி வருகின்றது.

1826 ஆம் ஆண்டு திருச்சபையின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டனின் முதலாவது மதசார்பற்ற பல்கலைக்கழகமான யு சி எல்லில் அதாவது லண்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த முரண்பாடு மிகவும் கடுமையானது.

மத ரீதியான முன்னுரிமையாக இந்த விடயத்தைப் பார்க்கும் நாத்தீக மற்றும் மனித நேய மாணவர் அமைப்பு படத்தை அகற்ற மறுக்கிறது. மாணவர்களின் நலன்களுக்கு பொறுப்பான மாணவர் சங்கத்துடன் அவர்கள் இதன் காரணமாக முரண்படுகிறார்கள்.

முகமது நபி, இயேசுக் கிறிஸ்துவுடன் ஒரு மதுக்கடையில் அமர்ந்து மதுபானம் போன்ற ஒன்றை அருந்திக்கொண்டு பாடம் படிப்பதாக தமது ஃபேஸ்புக்கில் வரையப்பட்டிருக்கும் கார்டூனை அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்கப்பட்டிருக்கிறது.

மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதனைவிட அந்த கார்ட்டூன் இஸ்லாத்தை ஸ்தாபித்தவரை சித்தரித்துக் காட்டுவதுதான் இங்கு பெரிய குற்றமாகப் பார்க்கப்படுககின்றது.

இந்தக் கார்ட்டூனை அகற்றுமாறு தாம் கோரியதாகக் கூறியுள்ள மாணவர் சங்கம், ஆனால் இந்த விடயம் குறித்து கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மாணவர்கள் முறைப்பாடு ஏதாவது செய்தார்களா என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

ஆனால், மாணவர்கள் மத்தியில் நல்ல உறவைப் பேண வேண்டிய கடமை தமக்கு உள்ளது என்று அவர்கள் பிபிசிக்கு கூறியுள்ளனர். மிகவும் தாராள போக்குக்கான பாரம்பரித்தைக் கொண்ட எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களைக் கொண்ட, குறிப்பாக ஐரோப்பாவில், மதங்களின் விடயத்தில் கருத்துச் சுதந்திரம் எந்த அளவுக்கு தலையிடலாம் என்பது குறித்த ஸ்திரமின்மை இன்னமும் அகல மறுக்கிறது.

எல்லாம் என்று கூறமுடியாவிட்டாலும், பல வெளியீடுகள், முகமது நபியின் உருவத்தை வரைவதை தணிக்கை செய்கின்றன. கடந்த வருடம் முகமது நபியின் உருவ வரைபடத்தை தனது அட்டையில் வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகையின் பாரிஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

நெதர்லாந்துப் பத்திரிகை ஒன்று முகமது நபியின் உருவத்தை வரைந்து வெளியிட்டதற்காக 2006 இல் ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் போனார்கள். பேச்சுரிமை என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை விட பெரியது என்று இந்த சர்ச்சையின் மையத்தில் இருக்கும் மாணவர்கள் வாதிடுகிறார்கள்.

மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கூறுகிறது.
thanks to yarlmuslim


©2012, copyright Dharulhuda

Wednesday, January 11, 2012

“தக்லீது” – ஓர் ஆய்வு!

“தக்லீது” – ஓர் ஆய்வு!

இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள்.
“தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று
சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை
செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து
தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப்
பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப்
பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி
விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி
நடக்க வேண்டும், இது நியாயமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்துதான்
ஆக வேண்டும், என்ற தக்லீதை நியாயப்படுத்த பெரும்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம், “தக்லீது” என்றால், பின்பற்றல் என்ற
தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும்.

“தக்லீது” என்ற அரபிப்பதம் “பின்பற்றல்” என்ற பொருளை ஒருபோதும் தராது. ஆனால்
தலைமுறை, தலைமுறையாகத் “தக்லீது” என்ற அரபிச் சொல்லுக்குப் “பின்பற்றல்” என்ற
தவறான பொருள், சுயநலக்காரர்களால், அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு,
மக்களிடையேயும் அதுவே வேரூன்றி விட்டது.

அல்குர்ஆன் 6666 வசனங்கள் அனைத்திலும், ஹதீதுகள் அனைத்திலும் பல இடங்களில்
பின்பற்றுதல்பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும், ஒரு இடத்தில் கூட இந்த “தக்லீது”
என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு
விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான, பின்பற்றுதலுக்கும்,
இந்த ‘தக்லீத்’ பதம் பயன்படுத்தப்படவே இல்லை, என்பதையும் முஸ்லிம்கள் ஊன்றிக்
கவனிக்க வேண்டுகிறோம்.

“உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், அவனையன்றி
வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி(க் கொண்டு) அவர்களைப் பின்பற்றாதீர்கள்; (எனினும்
இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே” (அல்குர்ஆன் 7:3)

இந்த வசனத்தில் “வலாதத்தபிவூ” என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.

“எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்(ஸய்யிது)களுக்கும், எங்கள்
பெரியார்(அகாபிரீன்)களுக்கும் வழிபட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்”
(அல்குர்ஆன் 33:67) நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும்போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிபடுதல்) “அதஃனா” என்ற பதமே
பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.

“அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள், என்று அவர்களிடம்
கூறப்பட்டால்,அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில்
நடக்கக்கண்டோமோ, அதே வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம். (அல்குர்ஆன் 2:170)

இங்கு வழி தவறியவர்களும் “நத்தபிஃ” என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்குப்
பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால், தக்லீத் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீதுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான
பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றதலாக இருந்தாலும் சரி. “தக்லீத்”
என்ற பதம் ஓரிடத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள்
உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன் வந்தாலும்
குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீதுகளில் ஒரு ஹதீதையோ, பின்பற்றுதலுக்கு
“தக்லீத்” பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போதுதான்
உண்மை உங்களுக்குப் புரியவரும்.

குர்ஆனின் 5-ம் அத்தியாயம் மாயிதாவில் 2,97 இரண்டு வசனங்களில் தக்லீதைச் சேர்ந்த
“கலாயித” என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களைக் ‘கலாயித’ என்ற
அரபிப் பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“தக்லீத்” என்னும் அரபிப் பதத்தின் மூலம்: கல்லத – யுகல்லிது – தக்லீத்

கல்லதஹுஃபிகதா, தபிஅஹுமின் ஹ(க)ய்ரி தஅமமுலின்வலாநழ்ரின் எவ்விதப்பார்வையும்,
பரிசீலனையுமின்றி ஒருவரைப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

“தக்லீத்” : தனது மூதாதைகள், போதகர்கள், தலைவர்கள் போன்றோரை, கொள்ளை, கோட்பாடு,
கல்வி, செயல்பாடு ஆகியவற்றில் எவ்விதப் பார்வையும், பரீசீலனையுமின்றிப் பின்பற்றல்
(கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது

அவர்களின் வேத நூல்களில் பதிவு செய்யப்படாது, அவர்களின் பாதிரிகளின் போதனைகளைக்
காலங்காலமாக எவ்வித பார்வையும், மறு பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப்
பின்பற்றல்) என்பதாகும். (முன்ஜித் – “அரபி மொழி அகாராதி”)

குர்ஆன், ஹதீதுகளில் காணப்படாத “தக்லீத்” பதம் முன்னைய மதவாதிகளால்
பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழி கெட்டுச்
செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுய நலம் கருதி, இஸ்லாத்தில் இந்தத் தக்லீதை
நுழைத்துள்ளனர், என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

இதை நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச்
செய்துள்ளார்கள்.

“எனது சமுதாயத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்தது போல், ஒரு
செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும். அவர்களிலொருவன்
தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனது
சமுதாயத்திலும் வருவான்.

நிச்சயமா பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள் எனது உம்மத்தினர் 73
கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தாரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும்
நரகத்தையடைவர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு (நபித் தோழர்கள்)
‘அவர்கள் யார்?’ என்று கேட்க, “இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு
நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள்”, என்று விடையளித்தார்கள். (வேறு எந்தப்
பெயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது
இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்)

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்கள் : திர்மீதி, அஹ்மத், அபூதாவூத்

அபூதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள், அவர்களிடையே தான்தோன்றித்தனமான
வகையில், அனாச்சாரங்கள், வெறி நாய் கடித்தவனது உடலில் அதன் விஷம், நரம்பு, தசைகள்
அனைத்திலும் ஊடுருவிச் சென்றுவிடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும்”, என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“உங்களின் முன்னோர்களை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்திற்கு முழம்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும், அவர்களை
(அப்படியே) பின்பற்றுவீர்கள்”, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு
நாங்கள்”யாரசூலுல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்”, என்று
கேட்டோம்; அதற்கு அவர்கள் “வேறு யாரை” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபுஸயீதுல் குத்ரீ(ரழி) நூல் : முஸ்லிம்

முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதீன் பேரால்
செய்யும், காரியமான,”அவர்கள் அல்லாஹ்வை விட்டு, தம் பாதிரிகளையும், சந்தியாசிகளையும்,
மரியமுடைய மகன் மஸீஹையும், தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்” (அல்குர்ஆன் 9:31) என்று
அல்லாஹ் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், அல்லாஹ்வை விட்டு தம்
இமாம்களைத தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும்,
சந்தியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூற்றுக்கள், அவர்களின்
வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதே போல் முகல்லிதுகள், குர்ஆன்,
ஹதீதுகளுக்கு நேர் முரணான காரியங்களை இமாம்கள் சொன்னார்கள், என்ற குருட்டு
நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவர்கள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக்
கூறியவற்றை அப்படியே முகல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றகின்றனர். பனூ
இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முகல்லிதுகளும் பல வழி தவறிய
கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியாக
ஏற்று நடக்கத் தவறி விட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக ஏற்றுக்
குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு
செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே
பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப்
பின்பற்றகிறவர்கள் முகல்லிதுகளே: குர்ஆன், ஹதீதுகளை மட்டும் எடுத்துச்
செயல்படுகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதே போன்று சூபிஸ தத்துவமும்(தரீக்கா பிரிவுகள், கபுருச் சடங்குகள்) இது
முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த
இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீதுகளில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளவும் இல்லை.
ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன.
இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைந்து
விட்டார்கள். எனவே இந்தத் தக்லீதையும், தஸவ்வுஃபையும் மதவாதிகளைக் காப்பியடித்து,
எடுத்து நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறவர்களாகவோ, நேர்வழி
நடப்பவர்களாகவோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக் கூடியவர்களாகவோ, ஒரு போதும் ஆக
முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த வழிகேடுகளிலிருந்து
அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக.

“அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் ரப்புடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால்,
செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின் மீது விழமாட்டார்கள்,” (பார்த்துப்
பரீசிலனை செய்து செயல்படுவார்கள்) (அல்குர்ஆன் 25:73)

இந்த வசனத்திலிருந்து குர்ஆனைத் தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது
தெளிவாகின்றது. (பார்வை, பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக்
கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது)

“நீங்கள் அல்லாஹ்வை நேசீப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை
நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான்” (அல்குர்ஆன் 3:31)

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை. “இத்திபா”
என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க
விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது)
நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும்
நபித்தோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை, என்பதற்குச் சரியான பல ஹதீது ஆதாரங்களைப்
பார்க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ்
அனுமதிக்கவில்லை, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே “தக்லீது” செய்ய அல்லாஹ்
அனுமதிக்கவில்லை. மாறாக, சிந்தித்துப் பார்த்துச் செயல்படவே ஆணையிடுகிறான், இந்த
நிலையில் வேறு யாரையும் “தக்லீது” செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒரு போதும்
அனுமதித்து இருக்க மாட்டான். முன் சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் “தக்லீதை” மிக
வன்மையாக மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள
முடியும். இதைத் தெளிவாக விளங்கித் “தக்லீதை” விட்டுத் தவ்பா செய்ய முஸ்லிம் சகோதர,
சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க
முடியும். தக்லீதை விட்டு தவ்பா செய்து நீங்காதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு
இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும் இத்திபாவிற்கும் உள்ள வேறுபாடுகள்:-

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து,
லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்தக்
குர்ஆனை, பார்த்துப் பரிசீலனை செய்யாது, அனைத்தும் அல்லாஹ்வின் வசனங்கள் என்று
நம்பிச் செயல்படுகிறவர்கள், தக்லீது செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அதைப்
பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, அல்லாஹ்வின் வசனங்களை மட்டும்
விளங்கி, எடுத்து நடப்பவர்கள், “இந்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள்
ஆவார்கள்.

2. இதேபோல் ஹதீது நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள், பலவீனமான ஹதீதுகள் இடைச்
செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் உண்மை ஹதீதுகள் என்று பார்த்துப்
பரிசீலுனை செய்யாமல் நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முகல்லிதுகள்
ஆவார்கள்.

ஹதீதுகளைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக் கட்டப்பட்ட ஹதீதுகளையும், பலவீனமான
ஹதீதுகளையும் நீக்கிவிட்டு, உண்மையான ஹதீதுகளை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள்
“இத்தீபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப் பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றைக்
குர்ஆன்,ஹதீதுகளோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து
நடப்பவர்கள், “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை, அல்லது மனிதர்களால் பேசப்பட்டவை, வேதவாக்கல்ல என்ற
உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்து, குர்ஆனுக்கும் உண்மை
ஹதீதுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள், “இத்திபா” செய்யும்
விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்து விட்டது என்பதற்காக அது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பி,
அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் “தக்லீது” செய்யும்
முகல்லிதுகள் ஆவார்கள். அந்நஜாத்தில் வந்தாலும், அதில் எழுதுபவர்களும் மனிதர்களே,
அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்து
குர்ஆனுக்கும், உண்மை ஹதீதுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள்
“இத்தீபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப்
பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை, நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஈ அடிச்சான் காப்பி அடிப்பது “தக்லீது”
ஆகும். “சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான், அதனால்தான் நான் அவனைக் காப்பி
அடிக்கிறேன்” என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை
செய்யப்பட்டிருப்பது போல், “தக்லீது” அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன் திறமைமிக்க மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைக் பற்றிக்
கேட்டு விளக்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால்
அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், குர்ஆனையும், ஹதீதுகளையும்
அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையோ, யூகங்களையோ அல்ல) கேட்டு,
குர்ஆன், ஹதீதுகளில் உள்ளவைதான் என்று விளங்கி எடுத்து நடப்பதை , அல்லாஹ்
அனுமதிக்கிறான். இதற்கு “இத்திபா” என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும், இத்திபாவுக்கும் உள்ள
வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீது செய்யாமல் மார்க்கத்தை
எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்ல
மாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு
முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ‘இத்திபா” செய்யப்
பழகுவோமாக!!

தகலீது : கண்மூடிப் பின்பற்றல் – புரோகிதமும், இடைத் தரகர்களும் இஸ்லாத்தில்
புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முகல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா : விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும் இடைத் தரகர்களையும் ஒழித்துக்
கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? இத்திபா வேண்டுமா?

“எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை
விட்டுப் பிரிந்து, (வேறு ஒரு வரை இமாமாக ஆக்கிக் கொண்டு) முஃமின்கள் செல்லாத
வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு,
நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக்
கெட்டதாகும்.” (4:115)

அபூஃபாத்திமா

Wednesday, January 11, 2012

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்





அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.

மஹ்ஷர் வெளியின் அகோரம்

மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.

பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.

மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.
3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.

இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.

பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.

யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.

யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.

அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.

ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!

பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.
6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.

மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.

இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.

ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்

பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,

1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.

2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.

3. அதற்காக கவலைப்பட வேண்டும்.

4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.

5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)

6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும். இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.

அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!

அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!



இஸ்லாம் கல்வி.காம்
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

Wednesday, January 11, 2012

சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை

சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை


ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோத ரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர் வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும் ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும் குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

சகோதரத்துவம் மனிதனின் இயல்பான உணர்வாகும். ஏனெனில், மனிதன் இயல்பிலேயே தனித்து வாழ முடியாதவனாகவும் பிறரைச் சார்ந்திருக்கும் பண்பு கொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதனால் தனது தேவைகளை நிறைவேற்ற பிறரை நாடிச் செல்கின்றான். தனது இன்ப, துன்பங்களில் ஏனையோர்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றான். இதனால் குடும்பமாக, சமூகமாக வாழ தலைப்பட்டுள்ளான்.
இத்தகைய இயல்பான வாழ்க்கை முறைக்கு மாற்றமாக நடந்து கொள்வது ஈமான் கொள்வதற்கு தடையாகவும் நரகிற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாகவுமே இருக்க முடியும்.

இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியையும் சுபீட்சத்தையும் பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும்.

மஹ்ஷர் வெயிலின் அகோரத்தினால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் கூறுவான் ‘என் கண்ணியத்திற்காக தங்களிடையே அன்பு கொண்டிருந்தவர் கள் எங்கே? என் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந் நாளில் நான் நிழல் தருவேன்’ எனக் கூறுவான். அவர்களுக்கு ஒளியிலான மேடைகள் வழங்கப்படும் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவர்களைக் கண்டு (இவைகள் தமக்குக் கிடைத்திருக்க வேண்டுமென) ஆசை கொள்வார்கள்.

இஸ்லாம் விதித்திருக்கும் வணக்க வழிபாடுகளும்கூட சகோ தரத்துவத்தைக் கட்டியெழுப்புவ தாகவும் வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக இஸ்லாத்தின் அடிப்படைக் கடமையான தொழுகையினை எடுத்துக் கொண்டால் அதனை ஜமாஅத்தாக தொழுவதனை கட்டாயப்படுத்தியிருப்பதன் நோக்கம், சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என்பதாகவும் இருக்க முடியும். ஏனெனில், ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன் என்ற பேதம் பாராது எதிரியாக இருந்தாலும் தோளோடு தோள் சேர்ந்து, காலோடு கால் ஒட்டிய நிலையில் ஒரே வரிசையாக, ஒரே இலக்குடன், ஒரே இறைவனைத் தொழுகின்றோம். எனவே இங்கு சகோதரத்துவ வாஞ்சைகள் வளர்க்கப்படுகின்றன.

இதேபோன்று ஹஜ் கடமையும் சர்வதேச சகோதரத்துவத்தை பிரதி நிதித்துவப்படுத்தும், அதற்கு வலுச் சேர்க்கும் வணக்கமாக அமைந்திருக்கின்றது. உலகின் சகல நாடுகளிலும் இருந்து வருகை தரும் முஸ்லிம் சகோதரர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கின்றார்கள். ஹஜ் காலம் முடிந்ததும் தமது உறவுகளைப் பேணிக் கொள்கிறார்கள், இதன் மூலம் சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பேணப்படுகிறது.

இதேபோல ஏனைய கடமைகளிலும் சகோதரத்துவம் புரையோடியிருப்பதைக் காணலாம். முஆனகா, முஸாபஹா, ஸலாம் சொல்லல் போன்ற செயற்பாடுகள் மூலம் நேரடியாகவே அன்பு பரிமாறப்படுவதனைக் காணலாம். ஆகவே, முஸ்லிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக் கூடாது. ஒருவருக் கொருவர் போட்டியாக நடந்து கொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கூடாது. சிலர் சிலரின் விற்பனைக்கெதிராக குறைத்து விற்கக் கூடாது, கடினமாய்ப் பேசி மனதைப் புண்படுத்தக் கூடாது. யாரையும் தாழ்வாக எண்ணக் கூடாது. யாருக்கும் அநீதமிழைக்கக் கூடாது, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்றெல்லாம் போதிக்கும் இஸ்லாம் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் இஸ்லாத்தைச் சார்ந்தவனல்ல என்று எச்சரிக்கின்றது. இதன்மூலம் இஸ்லாத்தில் சகோதரத்துவம் எத்துனை முக்கியத்துவ முடையது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை தனித்து நின்று செய்திடவில்லை. மாறாக ஸஹாபாக்கள் எனப்படும் தனது உற்ற தோழர்களுடன் இணைந்தே தனது போதனைகளை முன்வைத்தார்கள். ஸஹாபக்களுக்கிடையில் சகோதரத்துவ வாஞ்சையினை வளர்ப்பதற்கு பல வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள்.

ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவ சமுதாயம் வரலாற்றிலே பொன் வரிகளால் பொறித்துக் காண்பிக்கப்பட வேண்டியது. ஏனெனில், ஒழுங்கை அறியாத கோத்திர உணர்வு மேலோங்கியிருந்த அரேபிய சமூகத்தில் அன்பையும் கருணையையும் பரஸ்பரம் உதவிபுரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கைமூலம் வளர்த்தார்கள். இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட வலுவிழந்து போகும் அளவிற்கு இஸ்லாம் கூறும் கொள்கை சகோதரத்துவம் பாரிய மாற்றங்களைஅரேபியரிடையே ஏற்படுத்தியது.

நபியவர்கள் ஹிஜ்ரத் சென்றதும் முதலில் செய்த பணி பரம்பரை பரம்பரையாக பகைமை கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவரின் பகைமையினை நீக்கி சகோதரர்களாக மாற்றியமையாகும். அதே போல மக்காவிலிருந்து தமது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்து வெறுங்கையுடன் ஹிஜ்ரத் சென்ற மக்காவாசிகளை மதீனா வாசிகளுடன் சகோதரர்களாக இணைந்துவிட்டார்கள். மதீனாவாசிகளோ தமது சொத்து செல்வங்களை மட்டுமல்லாது தமது குடும்பங்களிலும் பங்காளர்களாக மக்காவாசிகளை சேர்த்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மதீனாவாசிகள் அன்சாரிகள் என்றும் மதீனாவாசிகள் முஹாஜிரீன்கள் என்றும் சிறப்புப் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (மார்க்கத்தினை) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்துவேறு பட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்; மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பினை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்) நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேரச் செய்தான். (3:103)

மக்கா-மதீனாவாசிகளது இணைப்பின் மூலம் முஹாஜிரீன்களது வாழ்வை சீரமைப்பதை மட்டும் நபியவர்கள் இலக்காகக் கொள்ளவில்லை. மாற்றமாக இன, நிற, வர்க்க, கேந்திர மொழிபேதமற்ற சகோதரத்துவ, சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான சமுதாயத்தை கட்டியெழுப்பவே நபியவர்கள் விரும்பினார்கள். அதனையே அவர்கள் உருவாக்கியும் காட்டினார்கள்.

அதேபோன்று பிற்பட்ட கால முஸ்லிம்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கின்றபோது இஸ்லா மிய எழுச்சிக்கு இச்சகோதரத்துவக் கொள்கையும் காரணமாக அமைந் திருப்பதனைக் கண்டு கொள்ள லாம். வரலாற்றாசிரியர் ஏ. சுவாமி நாதன் என்பவர் தனது ‘இந்திய வரலாறு’ எனும் நூலில் குறிப்பி டும்போது “இஸ்லாம் சமயத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், என்ற கொள்கைகளின் மூலம் சமுதாயத்தில் தாழ்வுற்றிருந்த இந்துக்களைக் கவர்ந்தனர்; பிராமணத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டிருந்த தீண்டத்தகாதவர்கள் என் போர் இக் கொள்கைமீது பற்று கொண்டு இஸ்லாம் சமயத்தை தழுவினர். இந்து சமயத்தின் வளர்ச்சியில் தடு மாற்றம் ஏற்பட்டு அது தரைமட்டமாகிவிடுமோ என்று பெரும் சமயத் தலைவர்கள் (பக்கம்: 19)அஞ்சும் அளவிற்கு இக்கொள்கை யினால் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார். எனவேதான் தஃவாவின் அடிப்படையாக இச் சகோதரத்துவம் அமைந்த போதெல்லாம் அதற்கு வெற்றியும் அல்லாஹ்வுடைய அருளும் கிடைத்து வந்திருப்பதனை இஸ்லாமிய வரலாறு நிரூபிக்கின்றது.

ஈ.எல்.எம். இர்ஷாத்


©2012, copyright Dharulhuda

Wednesday, January 11, 2012

புரோகிதர்களை புறக்கணிப்போம்!

புரோகிதர்களை புறக்கணிப்போம்!

புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.

“நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானாகவும் இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 15:9) இறைவனே பாதுகாவலனாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. யோசித்தார்கள்; அணுக விட்டால் தானே அறிந்துக் கொள்வார்கள். நம் வியாபாரத்துக்கு வேட்டு வைத்து விடுவார்கள். ஆபத்தை உணர்ந்தார்கள். அரபி உங்களுக்கு விளங்காது. அதை விளங்க நாங்கள் மட்டுமே விஷேச பயிற்சி பெற்றவர்கள் என்றார்கள். ஒவ்வொரு வசனங்களுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன என்று பயமுறுத்தினார்கள். நீண்டகாலமாகவே குர்ஆனை மொழிபெயர்க்க முன் வராமல் இருந்தார்கள். இறைத்தூதரின் போதனைகளில் இடைசொருகலானவைகளையே அதிகம் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்கள்; விளைவு – மார்க்கம் மக்களுக்கு கஷ்டமானது.

நபி(ஸல்) கூறுகிறார்கள்: அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும் எளிதாக்குபவனாகவும் அனுப்பியிருக்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம்

இலகுவான மார்க்கத்தைக் கஷ்டமாக்கியதால் வியாபாரம் விறுவிறுப்பானது. போலி நபிமொழிகள் மூலம் புதிய அமல்கள் அறிமுகமாயின. ஐவேளை தொழுகையில்லாமல் அல்லாஹ்விடம் சொர்க்கம் பெற குறுக்கு வழி பார்த்தார்கள் மக்களுக்கு குறுமதி படைத்த புரோகிதர்கள் தர்காவுக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் ஷைத்தானின் சபதம் நிறைவேற சகல வழிகளிலும் உதவிச் செய்கிறார்கள். ஒன்றுபட்ட சமுதாயத்தை பிளவுபடுத்தி வழிகெடுத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துக் கொண்டே செய்கிறார்கள். ஆதாரம் அல்லாஹ் தருகிறான்.

“”அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப்போல் (இந்த உண்மையை)அறிவார்கள்.” (அல்குர்ஆன் 2:146) தானும் வழிகெட்டு, சமுதயாத்தையும் வழிகெடுக்கிறோமே. நாளை அல்லாஹ்விடத்தில் கேவலமான இழிநிலையை அடைய போகிறோமோ என்ற கவலையும் கிடையாது. “”அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் ” (அல்குர்ஆன் 5:13)

இறுகிப் போன இதயத்தில் ஈரம் எப்படி இருக்கும்? இறைவனைப் பற்றிப் பயம் எப்படி வரும்? இரக்க மில்லா பூசாரிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்தச் சமுதயாத்தை விடுவிக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும்.

ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட இந்த புரோகிதப் பூசாரிகளின் பிடியிலிருந்து பிளவுபட்ட சமுதாயத்தை விடுவித்து ஒன்றுபடுத்த ஒவ்வொரு முஸ்லிமும் இப்போதே செயலில் இறங்க வேண்டும். இதற்குச் சுலபமான வழி உண்டு. பள்ளியில் தினசரி சுபுஹு தொழுகைக்குப் பின்னால் சில நிமிடங்கள் நேரம் குர்ஆனை – ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் படிப்பது. அரபி ஓதத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பது. கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் அரபியை போல் ஒரு இலகுவான மொழி வேறு எதுவுமே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதை தினசரி கடமையாகச் செய்து வந்தால் மிக குறுகியக் காலத்தில் மகத்தான மார்க்க அறிவை நாம் பெற முடியும்.

“”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” (புகாரீ 58)

என்ற அடிப்படையில், வழிதவறி அரசியலிலும், இயக்கங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி குர்ஆன் – ஹதீஸுக்கு அழைத்து வர வேண்டும். செயல்படுத்த இலகுவான மார்க்கம் என்பதை நம் செயல்கள் மூலம் காட்ட வேண்டும். இதே போல்

தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நம் சகோதரிகள், மார்க்க கல்வியின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும் நபி(ஸல்) எச்சரிக்கையை மனதில் கொண்டு,

“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாக் கண்டேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, 29, 1052

பெண்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்கள் தானும் மார்கக் கல்வி கற்று, தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரலாம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களாக வாழலாம். இப்படி நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டால்தான் புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியவும்.

(புரோகிதத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லும் சகோதரர்களுக்கு நம் நிறுவனங்களில், கடைகளில் அல்லது சுயமாகச் சம்பாதிக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களும் நேர்வழி பெற உதவலாம்).

மார்க்கத்தை மறைக்கிறார்கள் – மக்களை வழிக் கெடுக்கிறார்கள் என்று புரோகிதர்கள் மீது குறை மட்டும் சொல்வதில் பிரயோசனமில்லை. புரோகிதர்கள் தப்லீக்கில் இருந்தாலும் சரி, தவ்ஹீத்தில் இருந்தாலும் சரி சமூக ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்கும் முட்டுகட்டை. இந்த புரோகிதம் ஒழிந்தால் மட்டும் ஒன்றபட்ட சமுதாயம் உயரவும், மனித நேயம் மலரவும் முடியும். நாம் ஒவ்வொருவரும் மார்க்கம் கற்றுக் கொள்வதின் மூலமே புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியும்.

இறைவா! எனக்கு நீ கற்றுத் தந்தவைகள் மூலம் எனக்குப் பயனளிப்பாயாகா! பயனுள்ளவற்றையே எனக்குக் கற்றுத் தருவாயாக. கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக! எல்லா நிலையிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் நபி(ஸல்). அறிவிப்பவர்:- அபூஹுரைரா(ரழி), நூல்: இப்னுமாஜ்ஜா(251), திர்மிதி

பயனுள்ள மார்க்க கல்வி கற்றுக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் அன்புடன் அழைக்கிறோம்.

“மேலும் எவர்(கள்) நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் நேர்வழியில் சேலுத்துகிறான்.” (அல்குர்ஆன் 19:76)

M.S. கமாலுத்தீன்


©2012, copyright Dharulhuda

Sunday, January 8, 2012

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்




அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

வலியுறுத்திக்கேட்பது:
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.

பாவமானதைக் கேட்கக் கூடாது:
அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

அவசரப்படக்கூடாது:
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.

நிராசை அடையக்கூடாது:
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!

உணவு உடை ஹலாலாக இருத்தல்:
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)

ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்:
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ

இரவின் கடைசி நேரத்தில்…
இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)

ஸஜ்தாவின்போது….
ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்..
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.

தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது….
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா

ஜும்ஆ நாளில்…..
வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.

நோன்பாளி நோன்பு திறக்கும் போது…
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.

அபூயாசிர், உடன்குடி


©2012, copyright Dharulhuda

Sunday, January 8, 2012

சூதாட்டம்

சூதாட்டம்




சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.

பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.

இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்த மானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

கண்ணியமிக்க இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நமது ஊர்களில் பலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதிலும், அதனை வாங்குவதிலும் அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை. இதிலும் குறிப்பாக இன்றைய இஸ்லாமிய தோற்றம் என்று நம்வர்களால் சிறப்பித்துச் சொல்லப்படும் ஜுப்பா தலைப்பாகை தொப்பியுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பதையும் வாங்குவதையும் காண்கிறோம். லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்கு துணையாக இருப்பவர்களும் லாட்டரி சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

பரிசுச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மறுபெயர். மக்களை வழி கெடுப்பதற்காக செய்த ஷைத்தானின் சூழ்ச்சியே இது. இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகம் உள்ளது என்பதாலேயே வல்ல அல்லாஹ் இதை விட்டும் விலகியிருக்கச் சொல்கிறான். இதில் வேதனைப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய பள்ளியை ஒட்டி உள்ள பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் கூட லாட்டரி விற்பனை.

நாம் திருக்குர்ஆனை ஒரு எழுத்துக்கு 10 நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து ஓதி வருகிறோம். ஆனால் இது இம்மை மறுமைக்கு வழி காட்ட வந்த வேதம் என்பதால் பொருள் உணர்ந்து ஓதினோமா?. பொருள் உணராது ஓதியதால் மதுவும் – சூதும் ஒன்று என்றும், பெரும் பாவம் என்றும் இறைவன் தனது திருமறையில் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மிலே பலர் மிகச் சாதரணமாக விற்பனை செய்துகொண்டும், வாங்கி சந்தோஷித்துக் கொண்டும், பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆனுக்குள் பரிசு சீட்டை வைத்து இறைவனிடம் துஆச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதனைக் குறித்து சூரா பகராவில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)

மதுவும், சூதாட்டமும் இருமுகம் கொண்ட மத்தளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத்

மேற்கண்ட வசனத்தின் பொருளையும், ஹதீஸின் கருத்தையும் உணர்ந்த முஸ்லிம்கள் குடிகாரனும், லாட்டரி விற்பவனும், அதற்குத் துணை செய்பவனும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டாமா? இதில் ஈடுபடுபவர்கள் இப்பெரும் பாவத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? முஸ்லிம்கள் இறைவனால் ஹராமாக்கப்பட்ட மதுவையையும் பன்றி மாமிசத்தையும் வெறுக்கும் அளவுக்கு லாட்டரி சூதாட்டத்தை வெறுக்கவில்லையே?…… இதிலும் அல்லாஹ்வுடைய கருத்துக்கு மாற்றமாக இவர்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி வித்தியாசம் கற்பித்து விட்டார்களா?…

இறைவன் மது, சூதாட்டம், சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறி இவைகள் ஈமான் கொண்டவர்களைக் கெடுக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று தெளிவாக கூறுவதை நாம் உணரவேண்டாமா?

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:99)

மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

எனவே எனதன்பு நடுநிலைச் சமுதாயத்தவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் பெரும்பாவம் என எச்சரித்த இந்த தடுக்கப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக்கூறி அனுமதிக்கப்பட்ட வழிகளில் தொழில் செய்து ஹராம், ஹலாலை பேணி நடக்கும் முஸ்லிம்களாக நாம் வாழ்வோமாக!

அபூஉவைஸ்


©2012, copyright Dharulhuda